அண்ணாமலை பெயரை சொன்னதும் விசிலடித்து ஆரவாரம் செய்த நிர்வாகிகள்: மதுரை பாஜக கூட்டம் ஹைலைட்ஸ்
மதுரை: பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் கூறப்பட்டபோதெல்லாம் பாஜக நிர்வாகிகள் துண்டை கைகளால் சுழற்றியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். மதுரை ஒத்தக்கடையில் இன்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். மேடைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதற்கு முன்பு, பாஜக நிர்வாகிகள் அனைவரும் கழுத்தில் அணிந்திருந்த பாஜக துண்டை கையில் பிடித்து சுழற்றியபடியும், விசில் அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அமித்ஷா உட்பட கூட்டத்தில் … Read more