இரு வேறு படிப்புகளை ஒரே நேரத்தில் படிக்க வழிகாட்டுதல்களை வெளியிட்ட யுஜிசி

டெல்லி யுஜிசி இரு வேறு படிப்புகளை ஒரே நேரத்தில் படிக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இன்று யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகளை படிப்பது குரித்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்/ அதில், “உயா் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளை பயில்வது தொடா்பாக யுஜிசி சாா்பில் அண்மையில் நடைபெற்ற 589-ஆவது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானிய குழுவின் … Read more

24 மணி நேரத்தில் 5 சுகப்பிரசவங்கள்; காரையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 06-06-2025 அன்று 24 மணி நேரத்தில் ஐந்து (5) சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவில் உள்ள டாக்டர் நவநீதன், டாக்டர் ஸ்ரீ சூர்யா, டாக்டர் அரவிந்த், டாக்டர் சசிகலா, டாக்டர்.ஸ்ரீ பாலாஜி, செவிலியர்கள் அம்பிகா, ராஜலட்சுமி , கவிதா, சசிகலா, சௌமியா, குறிஞ்சி ஆகியோர் பணியாற்றியிருக்கின்றனர்.  இதேபோன்று, கடந்த 2024-ம் ஆண்டு … Read more

ராமேசுவரம் | உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்காக வரும் 17-ல் ஆலய பிரவேசப் போராட்டம்

ராமேசுவரம்: உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க ராமேசுவரம் கோயிலில் ஜுன்17-ந்தேதி ஆலயப் பிரவேசப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சிறப்பு தரிசன வழியில் சென்று சுவாமியை தரிசித்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில் பொறுப்பேற்ற இணை ஆணையர், உள்ளூர் மக்கள் ரூ.200 கட்டண தரிசன வழியில்தான் வரவேண்டும் என கட்டாயப்படுத்தி வருகிறார். இதனால், உள்ளூர் பக்தர்களுக்கும், கோயில் நிர்வாகத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளூர் மக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்து … Read more

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது: பிரதமர் மோடி

புதுடெல்லி: கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது. தூய்மை இந்தியா மூலம் கண்ணியத்தை உறுதி செய்வதிலிருந்து ஜன் தன் கணக்குகள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகள் வரை பல்வேறு முயற்சிகள் மூலம், நமது … Read more

ரோஹித், விராட் கோலிக்கு Farewell… அப்போ இதுதான் கடைசி ஒருநாள் போட்டியா…?

Virat Kohli, Rohit Sharma Farewell: இந்திய கிரிக்கெட்டில் தற்போது பெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது எனலாம். குறிப்பாக அனுபவமிக்க வீரர்கள் ஓய்வை அறிவித்து வருவதால் இந்திய அணிக்குள் இளைஞர்கள் வாய்ப்பை பெறுகின்றனர். இதனால், ஒட்டுமொத்தமாகவே இந்திய அணி மாற்றமடைந்து வருகிறது. ODI Farewell: ஓடிஐ அரங்கில் தொடரும் விராட், ரோஹித் 2024 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய உடன் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகிய மூன்று … Read more

20 மணி நேர காத்திருப்புக்கு பின்பே திருப்பதி கோவிலில் தரிசனம்

திருப்பதி பக்தர்கள் கூட்டம் காரணமாக திருப்பதி கோவிலில் தரிசனத்துக்கு 20 மணி நேரம் காத்திருக்க நேரிட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை, இன்று ஞாயிறுக்கிழமை என வார விடுமுறை நாட்கள் என்பதால்  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. நேற்று இலவச தரிசனத்தில், வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால் சிலாதோரணம் வரை 3 கிலோ மீட்டர் வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். எனவே இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆகும் … Read more

கடல் தாண்டிய சொற்கள்: நீண்டு வளர்ந்து நுனியில் கனிந்தவள் – எமிலி டிக்கின்சன் | பகுதி 12

விழித்த நிலையில் கனவுகாண்பதைப் போல், கவித்துவ மனநிலையிலேயே எப்போதும் திளைத்திருந்தவர் எமிலி டிக்கின்சன். அணைக்கமுடியாமல் எரியும் நெருப்பாக உணர்வுகள் கொந்தளிக்க, தனிமையில் திரியும் மௌனத்துக்கிடையே மெல்லிய கீச்.. கீச்.. ஒலிகளாக அவளது சொற்கள் இன்றைய கவிதை வாசகர்களுக்குள்ளும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. தனக்குள் ஊறிப்போயிருந்த தனிமை அழுத்தியபடி, இனந்தெரியாத வெறுமையில், விட்டுப்போன காதலை நினைத்து ஏங்கும் விசும்பலைக் கவிதைகளாய் எழுதியவள். எமிலியின் சாந்த முகத்திற்குப் பின்னால் இருக்கிறது ஒரு பேரமைதி. எமிலியின் பெரும்பான்மையான கவிதைகள் அவளுடைய தனிமையில் எழுதப்பட்டவை; தனிமையின் மீது ஏகப்பட்ட … Read more

கண்டுகொள்ளப்படாத நிலையில் வைகை அணை – நிலவரம் என்ன?

வைகை அணை பராமரிப்பில் தொடர்ந்து மெத்தன நிலை நிலவி வருவதால் அணையின் கட்டுமான பகுதிகள், மின் இணைப்புகள் ஏராளமான இடங்களில் சேதமடைந்து காணப்படுகின்றன. நீர்வளத் துறை அதிகாரிகள் தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் மற்றும் பிரதான பாசனநீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சுமார் 15 கி.மீ. சுற்றளவுப் … Read more

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பிரதமர் மோடி மீது நம்பிக்கை உள்ளது: சந்திரபாபு நாயுடு

ஹைதராபாத்: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, இதில் முதல் ஆண்டை ஜூன் 12ம் தேதி நிறைவு செய்கிறார். மக்களவை தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் ஒத்திவைத்தபோது, அதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதில் முக்கிய பங்கு வகித்தவர் சந்திரபாபு நாயுடு. அப்போதைய … Read more

ஆப்பிள் கணினி வடிவமைப்பாளர் பில் அட்கின்சன் காலமானார்: டிம் குக் இரங்கல்

சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனத்தின் கணினி வடிவமைப்பாளரான பில் அட்கின்சன் காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் இரங்கல் தெரிவித்துள்ளார். புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது மறைவை அவரின் குடும்ப உறுப்பினர் உறுதி செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அவரது வீட்டில் அவர் காலமானார். “பில் அட்கின்சனின் மறைவால் நாங்கள் மிகுந்த வருத்தமடைந்துள்ளோம். அவர் ஓர் உண்மையான … Read more