G7 மாநாடு: கனடா வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக சீக்கிய குழுக்கள் போராட்டம் நடத்த திட்டம்…

லண்டன்: ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள கனடா செல்லும்  பிரதமர் மோடிக்கு  எதிராக அங்குள்ள சீக்கிய குழுக்கள் போராட்டங்களை நடத்த திட்டமிடுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவின்  ஆல்பர்ட்டாவில் உள்ள கனனாஸ்கிஸில் G7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறும் இந்த மாநாட்டில், கலந்துகொள்ள கனடா முதலில் இந்திய அரசுக்கு அழைப்பு விடுக்காத நிலையில், மற்ற ஜி7 நாடுகளின் வலியுறுத்தல் காரணமாக, இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது. பிரதமர் மோடியிடம் அந்நாட்டு பிரதமர் போனில் … Read more

தைவான் தடகள ஓபன் 2025: தங்க பதக்கம் வென்றார் ஜோதி யர்ராஜி

புதுடெல்லி, சீன தைபேவில், தைவான் தடகள ஓபன் 2025-ம் ஆண்டுக்கான போட்டிகள் நேற்று (சனிக்கிழமை) தொடங்கின. இதில், இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி பங்கேற்று சாதனை படைத்துள்ளார். அவர் 100 மீட்டர் மகளிர் தடை ஓட்ட போட்டியில், 12.99 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து உள்ளார். அவருக்கு தொடக்கம் சரியாக அமையாத நிலையில், 2-வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டார். எனினும், விடாமல் தொடர்ந்து முன்னேறி, கடைசி 20 மீட்டர் இருக்கும்போது, முதல் இடம் பிடித்துள்ளார். … Read more

அவசர சிகிச்சை பிரிவில் பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் வன்கொடுமை.. ராஜஸ்தானில் நடந்த கொடூரம்

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் என்ற இடத்தில் இருக்கும் இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 வயதுள்ள பெண் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இரவு நேரம் அவசர சிகிச்சை பிரிவிற்குள் சென்ற ஆண்செவிழியர் ஒருவர், அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து ஊசி போட்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அரை மயக்கத்தில் இருந்த பெண்நோயாளி எதிர்த்து போராட முயன்றும், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்பெண்ணின் கணவரை அவசர சிகிச்சை பிரிவிற்குள் அனுமதிக்காமல் வெளியில் காத்திருக்க வைத்திருந்த … Read more

கயத்தாறு அருகே துணை மின் நிலைய மின்மாற்றியில் தீ விபத்து – என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பணிக்கர்குளம் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. பல இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கயத்தாறு அருகே பணிக்கர்குளம் கிராம பகுதியில் தமிழக மின் வாரியத்துக்குச் சொந்தமான துணை மின் நிலையம் உள்ளது. இந்நிலையம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுரை வரை மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் இங்குள்ள … Read more

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: பிரிட்டனுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டனுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி டெல்லிக்கு வந்துள்ளார். அப்போது அவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்துப் பேசினார். முன்னதாக, டேவிட் லாமி பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: நாட்டில் தீவிரவாதம் சிறிதும் இருக்கக்கூடாது என்ற ரீதியில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். … Read more

அமெரிக்கா – சீனா இடையே லண்டனில் நாளை வர்த்தக பேச்சுவார்த்தை

அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை பிரிட்டனில் உள்ள லண்டன் நகரில் நாளை (ஜூன் 9) நடைபெறவுள்ளது. அமெரிக்கா, சீனா ஆகிய 2 பெரிய பொருளாதார பலமிக்க நாடுகள் இடையேயான வர்த்தக போரானது கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். சீனா மீது 34 சதவீத வரியை விதித்தார். இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை … Read more

ரிச்ர்வ் வங்கி வட்டி குறைப்பு : கடன் வாங்கிய மக்கள் மகிழ்ச்சி

சென்னை ரிசர்வ் வங்கியின் ரெபொ வட்டி குறைப்பால் வீட்டுக்கடன் உள்ளிட்டவை பெற்ற  மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், ரெபோ வட்டி விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்கும் வட்டி விகிதமாகும். இது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை நிர்வகிக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் RBI பயன்படுத்தும் முறையாகும். ரெபோ விகிதம் குறையும்போது, வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதால், வாடிக்கையாளர்களுக்கு கடன் வட்டி விகிதங்களை குறைக்க முடியும். இந்தாண்டில் 3-வது … Read more

இங்கிலாந்து வெளியுறவு துறை மந்திரியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி, இங்கிலாந்து வெளியுறவு துறை மந்திரி டேவிட் லாமி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் அவர் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். இதன்படி, பிரதமர் மோடியை அவர் இன்று சந்தித்து பேசினார். இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், டேவிட் லாமியை சந்தித்து பேசியது மகிழ்ச்சி. நம்முடைய விரிவான தூதரக நட்புறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட பெரிய அளவில் பங்காற்றியதற்காக அவருக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். சமீபத்தில் நிறைவடைந்த பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் … Read more

பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை ரூ.25 லட்சமாக அதிகரிப்பு

பெங்களூரு , குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி கடந்த 3-ந்தேதி நடந்தது. இதில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி முதல் முறையாக கோப்பை வென்று மகுடம் சூடியது. அதற்கு மறுநாள் (4-ந்தேதி) பெங்களூரு விதானசவுதாவில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பாராட்டு விழாவும், சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் … Read more

கிரீஸ்: ஏதோஸ் மலையில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவு

ஏதென்ஸ், கிரீஸ் நாட்டின் வடக்கே ஏதோஸ் மலையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது. காரியெஸ் நகரில் இருந்து வடமேற்கே மிக குறைந்த ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன்படி, நிர்வாக தலைநகரான காரியெஸ் நகரில் இருந்து வடமேற்கே 7.7 மைல்கள் ஆழத்தில் அது மையம் கொண்டிருந்தது. புவியக இயக்கவியலின் ஏதென்ஸ் அமைப்பு வெளியிட்ட செய்தி இதனை தெரிவிக்கின்றது. இதுபோன்று பூமியின் மேற்பரப்பு அருகே ஏற்படும் … Read more