பாளை.யில் ரூ.100 கோடியில் ‘காயிதே மில்லத் நூலகம்’ அமையும் இடத்தில் ஆய்வு

நெல்லை: பாளையங்கோட்டையில் ரூ.100 கோடி மதிப்பில் காயிதே மில்லத் பெயரில் நவீன நூலகம் அமையவுள்ள இடத்தை, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் பொது நூலக இயக்குநர் பொ.சங்கர் ஆய்வு செய்தார். தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் நெல்லையில் நவீன நூலகம் கட்டப்படும் என்றும், அதற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இந்த நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று கடந்த … Read more

ராமர் கோயிலில் 45 கிலோ தூய தங்கமும், சூரத் வைர வியாபாரி நன்கொடையின் பங்கும்!

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் சூரத்தின் வைர வியாபாரியின் நன்கொடை அதிக விலைமதிப்பு உள்ளவையாகக் கருதப்படுகிறது. அயோத்தி ராமர் கோயிலின் முக்கியக் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. எட்டு துணை கோயில்களின் கர்ப்பக்கிரகங்களுக்கான சிலைகளின் பிராண பிரதிஷ்டைப் பணியும் முடிவடைந்துள்ளன. சமீபத்திய நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். பிரதான ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எனினும், அருங்காட்சியகம், அரங்கம் மற்றும் விருந்தினர் மாளிகை … Read more

இந்த படத்துக்கு 1 கோடி சம்பளம் வாங்கினேன்.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்

இசையமைப்பாளர், நடிகர்கள், தயாரிப்பாளர் என்று பல தோற்றத்தை கொண்ட விஜய் ஆண்டனி தான் முதல் முதலில் எந்த படத்திற்காக ஒரு கோடி சம்பளம் வாங்கியிருந்தார் என்கிற தகவலை பகிர்ந்ததுள்ளார்.

நாள் ஒன்றுக்கு எவ்வளவு மதுபானங்கள் கொள்முதல் – விற்பனை? தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நாள் ஒன்றுக்கு எவ்வளவு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை?  செய்யப்படுகிறது,  தமிழக அரசு எவ்வளவு மதுபான கொள்முதல் செய்கிறது,  என்பதை இணையதளத் தில் பதிவேற்ற உத்தரவிடக்கோரிய வழக்கில்,   டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு  விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சமூக ஆர்வலரான,  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன்,  இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,  ஒவ்வோர் ஆண்டும் டாஸ்மாக் வலைதளத்தில் வெளியிடப்படும் ஆண்டறிக்கையில் கொள்முதல் … Read more

Andhra: "தொழிலாளர்களுக்குத் தினமும் 10 மணிநேர வேலை" – சந்திரபாபு அரசு முடிவு; வலுக்கும் எதிர்ப்பு

ஆந்திரா மாநிலத்தை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தெலுங்கு தேசம் தலைமையிலான அரசு, தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கட்டாய வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் தொழில்களை வளர்ப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொழிலாளர் சங்கங்கள் வன்மையாகக் கண்டித்து வருகின்றன. “இது தொழிலாளர்களை அடிமையாக்கும் சட்டம்” என வாதிடுகின்றனர். வேலை நேரம் முதலீடுகளை ஈர்க்க திட்டம்! … Read more

“முருக பக்தர்களுக்கு எதிரானது திமுக அரசு” – எல்.முருகன் விமர்சனம்

கோவை: “திமுக அரசானது முருக பக்தர்களுக்கு எதிரான அரசாக உள்ளது” என்று மத்திய இணையமைச்சரும், தமிழக பாஜகவின் மூத்த தலைவருமான எல்.முருகன் விமர்சித்துள்ளார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சனிக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு பிரச்சினையை எழுப்பியுள்ளார். முதல்வர்தான் அரசை நடத்துகிறாரா? தம்பிகள்தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் எனும் நிலை … Read more

பக்ரீத் பண்டிகை முஸ்லிம்களுக்கு நல்ல நாட்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்: உமர் அப்துல்லா

ஹஸ்ரத்பால்: உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு இந்த பக்ரீத் பண்டிகை அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறினார் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் ஹஸ்ரத்பால் தர்காவில் தொழுகை நடத்தினர். இதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, “இந்த ஈத் பண்டிகை இந்திய மற்றும் உலக முஸ்லிம்களுக்கு சிறந்த நாட்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன். இது … Read more

முடிவுக்கு வந்த இந்தியாவுடனான மோதல்: சவுதி பட்டத்து இளவரசருக்கு பாக். பிரதமர் நன்றி

இஸ்லாமாபாத்: இந்தியா உடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர உதவியதற்காக சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் மொகம்மது பின் சல்மானுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார். சவுதி அரேபியா சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமருடன் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தார், ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, தகவல் … Read more

பட்ஜெட் விலையில் ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்தியாவில் ரியல்மி சி73 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதோடு டி200எக்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸும் அறிமுகமாகி உள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை … Read more

விஜய் பட காட்சியை ரீ-கிரியேட் செய்த அதிபர் ட்ரம்ப்! வைரலாகும் வீடியோ..

Trump Recreating Scene From Vijay Master Movie : நடிகர் விஜய் நடித்த ஒரு படத்தின் காட்சியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ரீ-கிரியேட் செய்துள்ளதாக ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.