குட் நியூஸ்… நகைக்கடன் நிபந்தனைகளை தளர்த்தியது RBI – 10 மாற்றங்கள் என்னென்ன?

Gold Loan Rules Changes: தங்க நகைக்கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வ் வங்கி விதிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், அதில் செய்யப்பட்ட 10 மாற்றங்களை இங்கு காணலாம்.

அடையாறு மறுசீரமைப்பு பணிகள் செப்டம்பரில் தொடங்க உள்ளது; இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படுகின்றன

அடையாறு ஆற்றில் மறுசீரமைப்பு பணிகள் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அனகாபுத்தூரைச் சேர்ந்த 916 குடும்பங்களை அரசாங்கம் மீள்குடியேற்றியது, அவர்களுக்கு முழுமையாக கட்டப்பட்ட வீடுகள் மற்றும் விரிவான ஆதரவு சேவைகளை வழங்கியது. இந்த இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 400 சதுர அடி வீடுகள் இலவசமாகவும், நிதி உதவி மற்றும் வாழ்வாதார உதவியுடனும் வழங்கப்பட்டன. இந்த மீள்குடியேற்றம் TNUHDB ஆல் மேற்கொள்ளப்பட்டது. இடமாற்றத்திற்காக அடையாளம் காணப்பட்ட … Read more

கிணற்றில் விழுந்த மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலி; தீவிர சிகிச்சையில் மகன்; என்ன நடந்தது?

திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியை அடுத்த முதுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (61). இவரின் மனைவி புவனேஸ்வரி. இந்தத் தம்பதியினருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் வீட்டின் பின்புறத்தில் கிணறு தோண்ட ஜோதி திட்டமிட்டார். அதைத் தொடர்ந்து ஜோதியும் அவரின் மகனும் சேர்ந்து 3 அடி அகலத்தில் 30 அடி ஆழத்துக்குக் கிணறு தோண்டியிருக்கிறார்கள். அந்தக் கிணற்றில் தண்ணீர் வந்ததும் மின் மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்துப் … Read more

தைலாபுரத்தில் 22 நாள் ஆலோசனைக்குப் பின் சென்னையில் ராமதாஸ் – அரசியல் முக்கியத்துவம் என்ன?

திண்டிவனம் / சென்னை: மதுரைக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவுள்ள நிலையில், தைலாபுரத்தில் கடந்த 22 நாட்களாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னைக்கு இன்று (ஜூன் 7) காலை பயணித்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மகள் வழி பேரன் ‘முகுந்தனுக்கு அரசியல் பட்டாபிஷேகம்’ செய்து வைத்த தனது தந்தையான பாமக நிறுவனர் ராமதாஸுக்கு, தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். … Read more

உயிரிழந்த ஆர்சிபி ரசிகர்களின் குடும்பத்தினரை கோலி சந்திக்காதது ஏன்? – வைரலாகும் கேள்வி

பெங்களூரு: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் காரணமாக விராட் கோலி கைது செய்யப்படாதது குறித்து சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும், அவர் உயிரிழந்த ரசிகர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்காதது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமையன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இந்த கூட்ட நெரிசலுக்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி … Read more

அமெரிக்க இனவெறி மனநிலையையே ட்ரம்ப் விதித்த ‘பயணத் தடை’ காட்டுகிறது: ஈரான்

தெஹரான்: ஈரான் உட்பட 12 நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்திருப்பது, அந்நாட்டின் இனவெறி மனநிலையின் அடையாளம் என்று ஈரான் விமர்சித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது முதல் முறை பதவிக்காலத்தில் இருந்தே பயணத் தடை கொள்கையை அறிமுகப்படுத்தி வருகிறார். இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 12 நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அவர் தடை விதித்துள்ளார். அதற்கான பிரகடனத்தில் கடந்த புதன்கிழமை ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ … Read more

இன்றைய சினிமா அப்டேட்.. சர்தார் 2 முதல் விடுதலை 2 வரை.. முழு விவரம் இதோ

Today Top Cinema News Update: தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் பல செய்திகள் உள்ளன. அதில் சில டாப் செய்திகள் என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

கொரோனா பரவல்… ஊரடங்கு நடைமுறை வருமா…? மா. சுப்பிரமணியன் பதில்!

Minister Ma Subramanian: கொரோனா மாதிரியான பெரிய பாதிப்புகள் எது வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராகவே உள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசி உள்ளார்.

கலர் பொட்டுகள், ரிப்பன்கள், கயிறுகள் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது – கல்விதுறையின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், கலர் பொட்டுகள், ரிப்பன்கள், கயிறுகள் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது  என  கல்விதுறை உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாரம்பரிம் மிக்க தமிழ் சமுதாயத்தில் பெண்கள்  குழந்தைகள் முதல், பெரியோர்கள் வரை பொட்டு வைப்பதும், பூ வைப்பதும், தலையில் ரிப்பன் கட்டுவதும், கழுத்தில் சுவாமி படங்கள் பொரித்த டாலர்கள் அணிவதும் காலம் காலமாக தொன்றுதொட்டு வரும் முறை. இதை தடுக்க திமுக அரசு … Read more

சென்னை: அரசு வேலைக்குப் போலி நியமன ஆர்டர்; 12 பேரிடம் ரூ.1,66,36,000 மோசடி செய்த கும்பல் கைது

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதி (27). இவர் அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் சென்னை தி.நகரைச் சேர்ந்த மோகன்ராஜன், அவரின் கூட்டாளியான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அறிமுகம் பாரதிக்குக் கிடைத்திருக்கிறது. அப்போது மோகன்ராஜனும் ராதாகிருஷ்ணனும் தாங்கள் இருவரும் தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகளாக வேலை செய்து கொண்டிருப்பதாக பாரதியிடம் கூறியிருக்கிறார்கள். அதை உண்மை என நம்பிய பாரதியும் தன்னுடைய கனவான அரசு வேலை குறித்து இருவரிடமும் கேட்டிருக்கிறார். அதற்கு மோகன்ராஜனும் ராதாகிருஷ்ணனும் ‘உதவி … Read more