வருவாயை அதிகரிக்க மதுபானங்களை தொடர்ந்து புதுச்சேரியில் பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு

புதுச்​சேரி: புதுச்சேரி அரசு வருவாயை அதிகரிக்க மதுபானங்களைத் தொடர்ந்து பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. புதுவை அரசு ஏற்கெனவே முதியோர் உதவித்தொகையை ரூ.2 ஆயிரத்து 500- ஆக உயர்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின் மாத உதவித்தொகை ரூ. 2 ஆயிரமாகவும், மஞ்சள் கார்டுக்கு ரூ.1,000-மாகவும் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 500 கோடி கூடுதல் செலவாகும். இதற்கு வருவாயை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி மதுபானங்களுக்கான கலால்வரியை அரசு ஏற்கெனவே உயர்த்தியது. … Read more

50 ஆயிரம் ‘கோஸ்ட்’ ஊழியர்கள் நியமனம்: மத்திய பிரதேச அரசில் ரூ.230 கோடி ஊதிய ஊழல்?

போபால்: மத்திய பிரதேச அரசில் 50 ஆயிரம் `கோஸ்ட்’ ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அங்கு ரூ.230 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணியில் போலியாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள் கோஸ்ட் ஊழியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மத்தியப் பிரதேச மாநில அரசு ஊழியர்களில் சுமார் 50,000 பேருக்கு, அதாவது அங்குள்ள ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 9 சதவீதம் பேருக்குக் கடந்த ஆறு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை. ஆனால், இதற்காக அந்த … Read more

ரூ.25000 மத்திய அரசு உதவித்தொகை : 1 ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்

Central Government scholarship : ஒன்றாம் ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.25000 கல்வி உதவித் தொகை கொடுக்கிறது. எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…

கரூர் மாவட்டம் , தான்தோன்றிமலை , கல்யாண வெங்கட்ரமணர் ஆலயம்.

கரூர் மாவட்டம் , தான்தோன்றிமலை , கல்யாண வெங்கட்ரமணர் ஆலயம். . திருவிழா புரட்டாசி உற்சவம் – 22 நாட்கள் – 1 லட்சம் பக்தர்கள் கூடுவர் மாசி மகத்தேர் – 17 நாட்கள் – 50 ஆயிரம்பேர் கூடுவர் கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதேசி ஆகிய நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான … Read more

டெல்லி முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் – அதிர்ச்சி சம்பவம்

டெல்லி, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11மணியளவில் மர்ம நபர் போன் செய்தார். அந்த நபர் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார். இது குறித்து காசியாபாத் போலீசார் டெல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருப்பூரை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

கோவை, 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நெல்லை, சேலம், திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் நடக்கிறது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் கோவையில் இன்றிரவு நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த … Read more

வங்காளதேசம்: 2026-ம் ஆண்டு ஏப்ரலில் பொது தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

டாக்கா, வங்காளதேசத்தில் பிரதமராக பதவி வகித்தவர் ஷேக் ஹசீனா. இவருடைய தலைமையிலான அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்தபோது, கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மக்கள் போராட்டம் தொடங்கியது. அரசு வேலைகளில் இடஒதுக்கீடு பற்றிய விவகாரம், வன்முறையாக வெடித்தது. இது பல வாரங்களாக தொடர்ந்து நீடித்தது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனால், பிரதமர் பதவியில் இருந்து விலகிய … Read more

தவெக – தேமுதிக கூட்டணியா? ஜன.9 மாநாட்டில் அறிவிப்பு வெளியாகும்: விஜய பிரபாகரன் தகவல்

கரூர்: தவெக-தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து கடலூரில் அடுத்த ஆண்டு ஜன. 9-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டிப்பட்டிக் கோட்டை பகுதியில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேமுதிக வளர்ச்சியை நோக்கிச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், … Read more

“மனோஜ் சின்ஹா பதவி உயர்வு பெற்றுவிட்டார், ஆனால் நான்…'' – மோடி மேடையில் உமர் அப்துல்லா ஆதங்கம்

ஸ்ரீநகர்: “மனோஜ் சின்ஹா பதவி உயர்வு பெற்றுவிட்டார். ஆனால், நான் பதவி இறக்கம் செய்யப்பட்டதாக உணர்கிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்வர் உமர் அப்துல்லா தனது கவலையை தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தும் வகையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை பிரதமர் நரேந்திர … Read more

'இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடர்புடையது' – அமித்ஷா

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் இந்திய மொழிகள் பிரிவை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியின்போது அவர் பேசியதாவது;- “இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடர்புடையது. ஒரு மொழி இல்லாமல் இன்னொரு மொழியின் வளர்ச்சி சாத்தியமாகாது. ஆறுகள் ஒன்றிணைவது போல் நமது மொழிகள் ஒன்றிணைந்து இந்திய கலாசாரம் என்ற கங்கையை உருவாக்குகின்றன. இந்திய மொழிகள் நமது கலாச்சாரத்தின் ஆன்மாவாகும். கலாச்சாரம் இந்தியாவின் ஆன்மாகும். இந்திய மொழிகள் பிரிவு அனைத்து மொழிகளுக்கும் … Read more