கடும் வெப்பம்: பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் கலந்துகொண்ட 625 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

பூரி, ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் கோவில் உள்ளது. இங்கு உலகப்புகழ் பெற்ற ரத யாத்திரை நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் கலந்து கொண்ட 625 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடும் வெப்பம் உள்பட பல்வேறு காரணங்களால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 625 பேருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. இதில் 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1 More update தினத்தந்தி Related … Read more

ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசை: நீரஜ் சோப்ரா முதலிடம்

புதுடெல்லி, ஈட்டி எறிதலில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவருமான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 1445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதனையடுத்து 1431 புள்ளிகளுடன் கிரெனேடியாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 2-வது இடத்திலும், 1407 புள்ளிகளுடன் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 3-வது இடத்திலும், ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷ்தீப் நதீம் 1370 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். 1 More update தினத்தந்தி Related Tags … Read more

ஈரான் உச்ச தலைவர் கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன் – டிரம்ப்

வாஷிங்டன், இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், அணு உலைகள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. அதேவேளை, மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஈரானின் 3 அணு … Read more

“விசிக, காங்கிரஸ் கட்சிக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்?'' – பாமக அன்புமணி கேள்வி!

 ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாக நீண்டுகொண்டிருக்கிறது. இதற்கிடையே ராமதாஸ் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பிடிக்கவில்லை என்றும் கூறி, திருமாவைப் பாராட்டியும் பேசியிருந்தார். இதற்காக விசிக எம்பி ரவிக்குமார், ராமதாஸ்-க்கு நன்றி கூறி இருந்தார். ராமதாஸ், அன்புமணி “ஆளுங்கட்சிக்கு வயித்தெறிச்சல்; அந்த திருஷ்டிதான் நடக்கும் சம்பவங்களுக்குக் காரணம்”-அன்புமணி பேச்சு திருமாவும் இதுகுறித்து விகடனுக்கு அளித்த பேட்டியில், “ஆரம்ப காலகட்டத்திலிருந்தே ராமதாஸ் அவர்கள் என் மீது பாசம் … Read more

புதுச்சேரி | பாஜகவில் பிளவை தடுக்க 3 MLA-க்கள் ராஜிநாமா – சாய் சரவணக்குமார் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

புதுச்சேரி: கட்சி பிளவைத் தடுக்க அமைச்சர், 3 நியமன எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை திருப்திப்படுத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் பட்டியலின அமைச்சரின் ஆதரவாளர்கள், அமைப்புகளால் கட்சித் தலைமைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆட்சியில் என்ஆர். காங்கிரசுக்கு முதல்வர், 3 அமைச்சர்கள், பேரவை துணைத்தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. பாஜகவுக்கு பேரவைத்தலைவர், … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் வழங்கல்!

புதுடெல்லி: சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்த சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய பிரதமர் … Read more

ஆட்சி அதிகாரத்திற்காக உரிமைகளை அடமானம் வைத்த அப்பா ஸ்டாலினே.. ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு!

ஆட்சி அதிகாரத்திற்காக தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை எல்லாம் அப்பா ஸ்டாலின் அடமானம் வைத்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி மீது வீண் பழி சுமத்துவது நியாயமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். 

Ind vs Eng: இந்திய அணியில் இருந்து இந்த 2 வீரர்கள் நீக்கம்.. நுழையும் வேகப்பந்து வீச்சாளர்கள்!

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டி 24ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் வீரர்கள் சதம் அடுத்தடுத்து சதம் அடித்த நிலையில், இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இங்கிலாந்து அணியின் பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தி ரன்களை குவித்து அபார … Read more

Phoenix: “சேது சார்கிட்ட நடிப்பு கத்துகிட்டா சூர்யா தவிர்க்க முடியாத ஹீரோ!'' – இயக்குநர் பாண்டிராஜ்

சூர்யா, விஜய் சேதுபதி நடிப்பில், ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பீனிக்ஸ்’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. விஜய் சேதுபதி, இயக்குநர் அ.வினோத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். H.Vinoth அ. வினோத் பேசுகையில், “ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக மாறுவதற்கு 10 படங்கள் தேவைப்படும். ஆனால், சூர்யாவுக்கு அது முதல் படத்திலேயே கிடைத்திருக்கிறது. அதற்காக பெரிய கடின … Read more

EPF வலைத்தளத்தில் கோளாறா? கவலை வேண்டாம் இதை மட்டும் செய்யுங்கள்

How To Check EPF Balance: நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்து, உங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) இருப்பைச் சரிபார்ப்பதில் சிக்கலை எதிர்கொண்டால், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக மக்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) இருப்பைச் சரிபார்க்க EPFO வலைத்தளத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், வலைத்தளம் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது. இத்தகைய சூழ்நிலையில், EPFO இன் மிஸ்டு கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவையைப் பயன்படுத்தி உங்கள் வருங்கால … Read more