விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம்

சென்னை விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்று ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா தொற்று பரவல் சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கி  257 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் … Read more

'குற்றங்களின் தலைநகரமாக பீகார் மாறிவிட்டது' – ராகுல் காந்தி

பாட்னா, பீகார் மாநிலம் நலந்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “பீகார் மாநிலம் முன்பு அமைதி மற்றும் நீதியின் அடையாளமாக திகழ்ந்தது. ஆனால் இந்தியாவில் இன்று குற்றங்களின் தலைநகரமாக பீகார் மாறிவிட்டது. மோடி அரசு ஒருபோதும் உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாது. ஏனெனில் உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் நாளில், அவர்களின் அரசியல் முடிவுக்கு வந்துவிடும். அரசியலமைப்பை காப்பாற்றவும், நாட்டின் ஒட்டுமொத்த … Read more

பெங்களூரு கோர சம்பவம் – 4 பேருக்கு நீதிமன்றக் காவல்

பெங்களூரு, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு, பாராட்டு விழா மற்றும் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி ஆகியவை பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்தது. கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவிலும் (சட்டசபை), சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலில் விதானசவுதாவில் விழா நடந்தது. இதை காண லட்சக்கணக்கானோர் கூடியிருந்தனர்.பின்னர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பெங்களூரு அணியினருக்கு பாராட்டு விழா நடந்தது. இதை காண ரசிகர்களுக்கு இலவச … Read more

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; 3 பேர் பலி

கீவ், உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 198வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவும், உக்ரைனும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால் போர் நீடித்து வருகிறது. இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் … Read more

Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் – கின்னஸ் விருது வென்று சாதனை!

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் ஆபத்தான சாகச காட்சிகள் நடிப்பது புதிதானதல்ல. அதற்கு சாட்சியாக கின்னஸ் உலக சாதனை கௌரவம் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான Mission: Impossible – The Final Reckoning திரைப்பட ஷூட்டிங்கின்போது, 16 முறை ஹெலிகாப்டரில் இருந்து எரியும் பாராசூட்டுடன் குதித்திருக்கிறார் டாம் க்ரூஸ். Mission: Impossible இந்த சாகசத்துக்காக எரியும் பாராச்சூட்டுடன் அதிகமுறை குதித்த நபர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார். டாம் க்ரூஸ் அவரது தைரியமான ஸ்டண்ட்களுக்காக அறியப்படுபவர். மிஷின் இம்பாசிபல் … Read more

இன்று பக்ரீத் பண்டிகை: முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகம் உட்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி வருமாறு: முதல்வர் மு.க.ஸ்டாலின்: தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவை … Read more

ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது: நீதிமன்றத்தில் உடனடியாக முறையீடு – முழு விவரம்

பெங்களூருவில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) அணி வெற்றி கொண்டாட்ட நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கில், போலீஸார் ஆர்சிபி அணியின் நிர்வாகி நிகோல் சோசலே, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டிஎன்ஏ நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யூ உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் 4-ம் தேதி வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் லட்சக்கணக்கானோர் … Read more

முன்னாள் நீதிபதி எம் எஸ் ஜனார்த்தனனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஓய் பெற்ற நீதிபதி எம் எஸ் ஜனார்த்தனன் மறைவுக்கு காவல்துறை மரியாதையுடன்  இருஹி அஞ்சலிக்கு உத்தர்விட்டுள்ளார். தமிழக முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் (வயது 89) உடல்நலக் குறைவால் இன்று (6.6.2025) இயற்கை எய்தினார். நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம், 1988-ம் ஆண்டு முதல் 1998-ம் … Read more

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி

டெல்லி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். கடந்த ஆண்டு ஜுன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட பலர் கலந்து கொண்டனர். நடப்பு ஆண்டு ஜி7 உச்சி மாநாடு கனடாவில் … Read more

டிரம்ப்புடன் மோதல்; புதிய கட்சி தொடங்குகிறாரா எலான் மஸ்க்?

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் டாஜ்(DOGE) துறையில் தலைமை ஆலோசகராக டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை இயக்குநரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கை நியமித்தார். இவருடைய ஆலோசனையின் பேரில், அமெரிக்க அரசு பணிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் சர்வதே அளவில் அமெரிக்க அரசு சார்பில் பல்வேறு … Read more