உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டதை ஒட்டி ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பசுமை காக்க “தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம்” பிரச்சாரத்தையும் பிரதமர் முன்னெடுத்தார். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யுஎன்இபி) கீழ் 1973 முதல் ஆண்டுதோறும் ஜூன் 5 -ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதற்கு இந்தநாள் மிகப்பெரிய தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக … Read more

தேசிய மேம்பாட்டுக்காக ரூ.4.24 லட்சம் கோடி பட்ஜெட்: பாகிஸ்தான் நிதி அமைப்பு ஒப்புதல்

இஸ்லாமாபாத்: தேசிய மேம்பாட்டுக்கான ரூ.4.24 லட்சம் கோடி பட்ஜெட்டுக்கு பாகிஸ்தானின் தேசிய பொருளாதார கவுன்சில் (என்சிசி) ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பொருளாதார கவுன்சில் கூட்டம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்குவா, பலுசிஸ்தான் ஆகிய நான்கு மாகாணங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 2025-26-ம் நிதியாண்டில் 4.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடையும் வகையில், ரூ.4.24 … Read more

ரூ. 100 , ரூ, 200 நோட்டுகள் ஏடிஎம் களில் அவசியம் வைக்க வேண்டும்  ரிசர்வ் வங்கி

டெல்லி ரிசர்வ் வங்கி ஏடிஎம்களில் அவசியம் ரூ. 100 மற்றும் ரூ. 200 நோட்டுகள் அவசியம் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது, ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 என நான்கு வித நோட்டுகளை வைக்கும் அளவுக்கு 4 கேசெட்கள் உள்ளன. அவற்றில் 2 ஆயிரம் ரூபாய் புழக்கத்தில் இல்லை. அதேபோல் ரூ.100, ரூ.200 கேசெட்டில், அந்த ரூபாய் நோட்டுகளை வைப்பதில்லை.  ந்ப்முழுவதுமாக ரூ.500 நோட்டுகள் மட்டுமே வைக்கிறார்கள். இதனால் பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.500 … Read more

கூட்ட நெரிசல் விவகாரம்: பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சஸ்பெண்ட்

பெங்களூரு, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை என்பதால் அந்த அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து, கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதான சவுதாவிலும் (சட்டசபை வளாகம்), பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி … Read more

இந்தோனேசிய ஓபன்: சாத்விக்- சிராக் ஜோடி காலிறுதிக்கு தகுதி

ஜகர்த்தா, இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கி ரெட்டி ஜோடி, டென்மார்க்கின் ராஸ்மஸ் க்ஜோர்-பிரடெரிக் சோகார்ட் ஜோடியுடன் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய இந்த போட்டியில் முதல் செட்டை இழந்த இந்திய ஜோடி அடுத்த இரண்டு செட்டை கைப்பற்றியது. இதனால் 16-21, 21-18, 22-20 என்ற செட் கணக்கில் இந்திய … Read more

காசா முனையில் 2 பிணைக் கைதிகளின் உடல்கள் கண்டெடுப்பு – இஸ்ரேல் தகவல்

காசா, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பிணைக் கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ … Read more

6.6.2025 – இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi palan | Astrology | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். இன்றைய பஞ்சாங்கம் வெள்ளிக்கிழமை திதி: காலை 4.52 வரை தசமி பின்பு ஏகாதசி நட்சத்திரம்: காலை 9.04 வரை அஸ்தம் பின்பு சித்திரை யோகம்: காலை 9.04 வரை அமிர்த யோகம் பின்பு சித்தயோகம் ராகுகாலம்: காலை 10.30 முதல் 12 வரை எமகண்டம்: பகல் 3 முதல் 4.30 வரை நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை சந்திராஷ்டமம்: காலை 9.04 வரை சதயம் பின்பு பூரட்டாதி சூலம்: மேற்கு பரிகாரம்: வெல்லம் Source link

உறுப்பினர் சேர்க்கை குறித்து திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்துவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தொகுதி பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான அடிப்படை பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. பூத் கமிட்டி அமைத்தல், உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் திமுக கடந்த ஆண்டே தேர்தல் குழுக்களை அமைத்து பல்வேறு பணிகளை தொடங்கிவிட்டது. மதுரையில் கடந்த ஜூன் … Read more

சத்தீஸ்கரில் ரூ.40 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

ராய்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ரூ.40 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் சுதாகர் சுட்டுக் கொல்லப்பட்டார். பிஜப்பூர் மாவட்டத்தின் தேசிய பூங்கா பகுதியில் மூத்த நக்சல் போராளிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து மாவட்ட ரிசர்வ் காவல் படை (டிஆர்ஜி) மற்றும் சிறப்புப் பணிப் படை (எஸ்டிஎஃப்) ஆகியவற்றின் கூட்டுக் குழு இன்று வனப்பகுதியில் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. பின்னர் கூட்டுப் படைகளுக்கும், நக்சல்களுக்கும் … Read more

12 நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை: அதிபர் டொனால்டு ட்ரம்ப் நடவடிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது முதல் முறை பதவிக்காலத்தில் இருந்தே பயணத் தடை கொள்கையை அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில், ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 12 நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளார். அதற்கான பிரகடனத்தில் புதன்கிழமை அதிபர் கையெழுத்திட்டுள்ளார். எந்த நாடுகள்? – 12 நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு முழு நுழைவுத் தடைகளை எதிர்கொள்கின்றன. அவை: ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினியா, எரித்திரியா, … Read more