மனித உரிமைகள் ஆணையம் பெங்களூரு சம்பவம் குறித்து வழக்கு

பெங்களூரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கூட்டநெரிசலில் ஏற்பட்ட மரணம் குரித்து மனித உரிமைகள் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நிறைவுபெற்ற18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. பெங்களூரு அணி ஐ.பி.எல். வரலாற்றில் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை. என்பதால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,866 ஆக உயர்வு

புதுடெல்லி, கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா நோய், நாளடைவில் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனிடையே தடுப்பூசி செலுத்திய பிறகு, கொரோனா நோய்த் தொற்றின் பரவல் சற்று குறைந்தது. 2022-ம் ஆண்டு வரை உச்சத்தில் இருந்து, பின்னர் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையும், இறப்பு விகிதமும் குறைந்திருந்தது. இந்நிலையில், இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் … Read more

உக்ரைன் தாக்குதலுக்கு ரஷியா தக்க பதிலடி கொடுக்கும்; அமெரிக்க அதிபர் டிரம்ப்

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனினும், இதுவரை போரை நிறுத்தும் முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போர் எப்போது முடியும் என்று உலகமே எதிர்பார்த்து உள்ளது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷியா மீது மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான போரில் இதுவரை … Read more

புதுக்கோட்டை: 'மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!' – 7 பேரை கைது செய்த போலீஸ்

புதுக்கோட்டை போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது: 23) இவருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தினேஷ்குமார் நண்பர்கள் முகிலனை மதுபோதையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. murder இந்நிலையில், புதுக்குளம் அருகில் உள்ள காலாகுளம் கரையில் தனியாக வந்துகொண்டிருந்த தினேஷ் குமாரை, முகிலன் உள்ளிட்ட கும்பல் அரிவாளால் வெட்டி குளத்திற்குள் தள்ளினர். … Read more

என்.ஆர்.காங். கட்சியில் பதவி… பதறிய பாஜக ஐடி விங்க் தலைவர் – நடந்தது என்ன?

புதுச்சேரி: பாஜக ஐடி விங் தலைவருக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் பதவி அளித்து அறிவிப்பு வெளியானதை அடுத்து சர்ச்சை எழுந்தது. பின்னர், அதை நீக்குவதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல்வராக ரங்கசாமி உள்ளார். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது என்..ஆர்.காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கட்சியில் தொண்டர்களுக்குப் பொறுப்புகள் தரப்பட்டு வருகின்றன. கட்சியைப் பலப்படுத்தும் பணியும் தீவிரமாக நடந்து … Read more

பெங்களூரு காவல் துறை ஆணையர் உட்பட உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம்: சித்தராமையா நடவடிக்கை

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது ஆர்சிபி அணி. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூரு நகரில் புதன்கிழமை பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் உட்பட உயர் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா. கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் புதன்கிழமை அன்று மாலை பெங்களூரு சின்னசாமி … Read more

ஒன்பிளஸ் 13s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தப் போன் அந்நிறுவனத்தின் ஃப்ளேக்‌ஷிப் போனான ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக மலிவான விலையில் சந்தையில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்தப் போன் ஒன்பிளஸ் … Read more

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக நிர்வாகி உட்பட 2 பேர் போக்சோவில் கைது

உத்தரகாண்ட் மாநிலம் அரித்வாரில் தனது 13 வயது மகளை கள்ளக்காதலனை ஏவி பாலியல் பலாத்காரம் செய்த தாய் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் தொடர்புடைய மற்றொரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாஜக-வின் மாவட்ட பெண் நிர்வாகியான அந்த தாய் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கள்ளக்காதலன் மற்றும் உதவியாளருடன் காரில் வைத்து தனது கண் முன்னே தனது … Read more

Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" – கம்பீர் ஓப்பன் டாக்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வீரர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்று இங்கிலாந்து ஏ அணியுடன் ஆடத் தொடங்கிவிட்டனர். இங்கிலாந்து செல்லும் இந்திய அணி ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்த அணிகளில் இடம்பெற்றிருந்த வீரர்கள் மட்டும் இங்கிலாந்துக்கு புறப்படாமல் இருந்தனர். நேற்று முன்தினத்தோடு … Read more

ராமதாஸை சந்தித்த ஆடிட்டர் குருமூர்த்தி ‘உற்சாகம்’, அன்புமணி ‘அமைதி’ – தைலாபுரத்தில் நடந்தது என்ன?

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் இன்று (ஜூன் 5) ஓரே நாளில் வருகை புரிந்ததால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பாமகவில் ‘யார் அதிகாரமிக்கவர்’ என்ற போட்டி அரசியல் நிலவுகிறது. பாமக நிறுவனரான ராமதாஸ், தலைவர் என கூறிக்கொள்ளும் அவரது மகன் அன்புமணி ஆகியோருக்கு இடையே பாமகவும், அக்கட்சியின் தொண்டர்களும் சிக்கி தவிக்கின்றனர். இவர்கள் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களை சமாதானப்படுத்தும் … Read more