ஆர்சிபி கொண்டாட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்கு கர்நாடக அரசு, அணி நிர்வாகமே பொறுப்பு: அன்புமணி

சென்னை: “கர்நாடக அரசும், ஆர்சிபி அணி நிர்வாகமும் தான் பெங்களுரூ கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றதைக் கொண்டாடும் வகையில், கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இன்று நடைபெற்ற வெற்றிப் பேரணியில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பெங்களூர் … Read more

பெங்களூரு வெற்றிப் பேரணி நெரிசல் உயிரிழப்பு: ஆர்சிபி அணி இரங்கல்

ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதற்கான வெற்றிப் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்துக்கு.அந்த அணி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆர்சிபி அணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, “இன்று பிற்பகல் நமது அணியின் வருகையை எதிர்பார்த்து பெங்களூரு முழுவதும் திரண்ட மக்கள் கூட்டம் தொடர்பாக நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். அனைவரின் பாதுகாப்பும் நலமும் எங்களுக்கு மிகவும் முக்கியம். இந்த துயர்மிகு உயிரிழப்புகளுக்கு ஆர்சிபி … Read more

‘விமானத்தில் பயணிக்க வந்த கங்காரு’ – வைரல் வீடியோவின் ஏஐ பின்னணி!

சென்னை: இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதள பதிவுகளில் நாம் பார்க்கின்ற பதிவுகளில் சில போலியாக உருவாக்கப்பட்டவை. ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தின் வரவினால் ‘கண்ணால் காண்பது பொய். தீர விசாரிப்பதே மெய்’ என்பதற்கு உதாரணமாக பல்வேறு பதிவுகள் உள்ளன. அதில் ஒன்றாக உள்ளது இந்த கங்காரு வீடியோ பதிவு. அந்த வீடியோவை ஷீத்தல் யாதவ் என்பவர் பகிர்ந்துள்ளார். அதில் கங்காரு ஒன்று கையில் போர்டிங் பாஸ் உடன் விமானத்தில் பயணிக்க தயாராக நிற்கிறது. இருப்பினும் விமான நிறுவன … Read more

Paradhu Po: 'All Appas Are Liars' – வெளியான இயக்குநர் ராமின் 'பறந்து போ' படத்தின் டீசர்

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கிற ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தின் முதல் பாடலான ‘சன்ஃப்ளவர் பாடல்’ கடந்த மே 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இப்பாடல் வெளியான சமயத்தில் இந்தப் பாடல் குறித்து இயக்குநர் ராம், “எல்லோரையும் போல் எனக்கும் சூரியகாந்தியை மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல சூரியோதயத்தில் சூரியகாந்தித் தோட்டத்தில் படம்பிடிக்கிற ஒரு அரிய … Read more

தன்னை காப்பாற்றும்படி குவைத்தில் சிக்கி உள்ள தமிழ் இளைஞர் கோரிக்கை

குவைத் குவைத் நாட்டில் சிக்கி உள்ள தமிழ் இளைஞர் ஒருவர் தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என் பெயர் அப்துல் ரகுமான். நான் குவைத்திற்கு ஓட்டுநர் வேலைக்காக வந்தேன். நான் வேறு இடத்திற்கு விசா எடுத்தேன். ஆனால், என் Sபான்சர் என்னை வேறு இடத்திற்கு வேலைக்கு அனுப்பி வைத்து விட்டார். நான் தற்போது வேலை செய்து வரும் வீட்டில் சரியான சாப்பாடு, ரூம் வசதி இல்லை. அதிகமாக வேலை வாங்குகிறார்கள். … Read more

RCB Event Stampede: "நிலைமை குறித்து அறிந்ததுமே…" – மௌனம் கலைத்த ஆர்.சி.பி நிர்வாகம்

பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முறையான திட்டமிடல் இல்லாமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது. அதேசமயம், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதல்வர் சித்தராமையா, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவித்திருக்கிறார். முதல்வர் சித்தராமையா கூடவே, இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார். இருப்பினும், இந்த … Read more

தொகுதி மறுவரையறை: மத்திய அரசு தெளிவான விளக்கம் அளிக்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: “நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். மத்திய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “2026-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் … Read more

“பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, பெங்களூரு சின்னசாமி மைதானம் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில். “பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய … Read more

ஆர்சிபி வெற்றி பேரணி.. 11 பேரின் உயிர் பறிபோனதற்கு இதுதான் காரணமா? என்ன நடந்தது?

RCB victory rally: 2025 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று (ஜூன் 03) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. 18 ஆண்டுகள் கனவு நிறைவேறியதால், ஆர்சிபி அணியினர் மற்றும் அவரது ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர்.  கோப்பையை வென்ற சில நிமிடங்களிலேயே மறுநாள், அதாவது … Read more

Subramaniyapuram: 'சுப்ரமணியபுரம்' பட புகழ் மொக்கைச்சாமி என்கிற இலைக்கடை முருகன் காலமானார்!

சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் கல்ட் திரைப்படமாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனப் பிறகும் இன்றும் அத்திரைப்படத்தை டீகோட் செய்து பலர் பேசுகிறார்கள். Subramaniyapuram – Mokkaisamy Character சுப்ரமணியபுரம் திரைப்படம் சினிமாவில் நமக்கு பெரிதளவில் பரிச்சயமில்லாத நடிகர்களையும் நடிக்க வைத்து நமக்கு நெருக்கமாக்கியிருப்பார் சசிகுமார். அப்படி டும்கான், சித்தன், மொக்கைச்சாமி ஆகிய கதாபாத்திரங்கள் இன்றும் நமக்கு நினைவில் இருக்கும் வகையில் அமைத்திருப்பார். இதில் மொக்கைச்சாமி … Read more