ஒட்டகம் மேய்க்க வைத்து துன்புறுத்தல்: சவுதியில் இருந்து நாகை தொழிலாளியை மீட்டு நாதக உதவி

சவுதி அரேபியாவில் தோட்ட வேலை என்று கூறி ஏமாற்றி, ஒட்டகம் மேய்க்க வைத்து துன்புறுத்தப்பட்ட நாகை தொழிலாளியை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ரூ.1.5 லட்சம் கொடுத்து மீட்டனர். நாகை மாவட்டம் பெரிய தும்பூரைச் சேர்ந்தவர் கவாஸ்கர் (45). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி உதயஜோதி. இவர்களுக்கு 2 ஆண், 1 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக வெளிநாடு வேலைக்கு செல்ல விரும்பிய கவாஸ்கரை, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தோட்ட வேலைக்கு … Read more

“நீதித்துறை ஊழல் மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது” – தலைமை நீதிபதி கவாய் கவலை

புதுடெல்லி: நீதித்துறையில் நிகழும் ஊழல் மற்றும் தவறான நடத்தைகள், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கவலை தெரிவித்துள்ளார். நீதித்துறைக்கு இருக்கும் சட்ட அதிகாரம் மற்றும் பொது நம்பிக்கையைப் பேணுதல் என்ற தலைப்பில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் உரை நிகழ்த்திய பி.ஆர்.கவாய், “நீதித்துறையில் நிகழும் ஊழல் மற்றும் தவறான நடத்தைகள், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், ஒட்டுமொத்த அமைப்பின் … Read more

‘நாம் இஸ்லாமிய நாடுகள்’ – பாகிஸ்தானின் மத ரீதியான அழைப்பை நிராகரித்த மலேசியா

புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் விவகாரம் எனக் கூறி ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தூதுக்குழுக்களின் அனைத்து நடவடிக்கைகளையும் தடுப்பதற்காக பாகிஸ்தான் எழுப்பிய கோரிக்கையை மலேசியா நிராகரித்துள்ளது. மத அடையாளத்தைப் பயன்படுத்த முயன்ற பாகிஸ்தான், சஞ்சய் குமார் ஜா தலைமையிலான இந்தியக் குழுவின் அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்யுமாறு மலேசிய அரசு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து, “நாங்களும் இஸ்லாமிய நாடு, நீங்களும் இஸ்லாமிய நாடு, மலேசியாவில் இந்திய தூதுக்குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விடுங்கள்.” … Read more

அதிகரிக்கும் கொரோனா.. 44 பேர் உயிரிழப்பு.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை இருக்கா?

Corona death count: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

மாநிலப் பாடத்த்திட்டத்தை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!

மாநிலப் பாடத்த்திட்டத்தை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

Thug Life: “கடினமாக உழைச்சிருக்கோம்; எல்லாரும் படத்தை என்ஜாய் பண்ணுங்க'' – நடிகர் சிம்பு

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’ இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நாளை படம் (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ‘தக் லைஃப்’ இந்நிலையில் இன்று (ஜூன் 4)’தக் லைஃப்’  படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசி வருகின்றனர். இதில் கலந்துகொண்டு பேசிய சிம்பு, “நாளை ‘தக் லைஃப்’  படம் வெளியாகிறது. தன்னபிக்கையுடன் இருக்கிறோம். இந்தப் படம் வெற்றி அடைய … Read more

ஐபிஎல் இறுதிப் போட்டியின் சாதனை: ஜியோ ஹாட்ஸ்டாரில் 67.8 கோடி பார்வைகள் பதிவு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி, டிஜிட்டல் தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது, ஜியோ ஹாட்ஸ்டாரில் 67.8 கோடிக்கும் அதிகமான பார்வைகள் பதிவாகியுள்ளன. இது இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான பார்வையாளர் சாதனையை முறியடித்தது. சாம்பியன்ஸ் டிராபி 60 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. டாஸ் இழந்த ஆர்சிபி அணி பேட்டிங்கைத் தொடங்கியபோது, ​​டிஜிட்டல் தளம் 4.3 கோடி … Read more

திருப்பத்தூர்: கை தொடும் உயரத்தில் மின் கம்பி; பயத்தில் கிராம மக்கள்! – கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் அல்ராஜ் வட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள குடியிருப்பு பகுதியில் தொட்டுவிடும் உயரத்தில் மின்கம்பிகள் செல்கின்றன. தற்போது மழை பெய்து வருவதால், அதிக காற்று வீசும்போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பொறி ஏற்படுகிறது. மேலும், இங்கு அதிகளவில் பள்ளி மாணவர்கள் இருப்பதால், கிராம மக்களும், பெற்றோரும் எதாவது விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, “இந்த … Read more

ஊதியம் வழங்காததை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்: மே மாத ஊதியத்தை இதுவரை வழங்காததை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 5000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி நாள் அன்று சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (ஜூன் 4) வரை அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இன்று (ஜூன் 4) காலை 11.30 மணி அளவில் … Read more

மத்தியப் பிரதேசம்: வேன் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி, இருவர் காயம்

ஜபுவா: மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் சிமென்ட் ஏற்றப்பட்ட லாரி, வேன் மீது கவிழ்ந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், இரண்டு பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஜபுவா மாவட்டத்தின் மேக்நகர் தாலுகாவுக்கு உட்பட்ட சஞ்சேலி எனும் இடத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. பாவ்புரா என்ற பகுதியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர், ஷிவ்கர் மஹுதா என்ற தங்கள் கிராமத்துக்கு வேனில் வீடு … Read more