நோய் பரப்பும் அபாயகரமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது

டெட்ராய்டு: விவசாய பயிர்களை அழித்து மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்திய இரண்டு சீன விஞ்ஞானிகள் கைது செய்யப்பட்டனர். சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகளான 33 வயதான யுன்கிங் ஜியான் மற்றும் 34 வயதான ஜுன்யோங் லியு ஆகியோர் ஃபுசேரியம் கிராமினேரம் என்ற பூஞ்சையை விமானம் மூலமாக அமெரிக்காவுக்கு கடத்தியதற்காக கைதாகியுள்ளனர். லியு, டெட்ராய்ட் பெருநகர விமான நிலையம் வழியாக அமெரிக்காவிற்குள் பூஞ்சையை கடத்தியுள்ளார். அவர் தனது காதலி ஜியான் பணிபுரிந்த மிச்சிகன் பல்கலைக்கழக … Read more

தக் லைஃப் ப்ரீ-புக்கிங் வசூல்! மொத்தம் இத்தனை கோடியா? எவ்ளோன்னு பாருங்க..

Thug Life Movie Pre Booking Collection : கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம், தக் லைஃப். இப்படம் ப்ரீ-புக்கிங்கில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?  

தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு வெளியிட்டிருக்கும் 3 முக்கிய அறிவிப்புகள்

Tamil Nadu government Major announcement : தமிழ்நாடு அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், 12 ஆம் வகுப்பு முடித்து கல்லூரி மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

சாம்பியன் ஆர்சிபி-ஐ வரவேற்க தடபுடலாக தயாராகும் பெங்களுரு சின்னசாமி மைதானம்..!!

RCB IPL 2025 champion : ஐபிஎல் 2025 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஐபிஎல் தொடங்கியது முதல், முதல் சாம்பியன் பட்டத்துக்காக காத்திருந்த ஆர்சிபி அணி 18வது ஆண்டில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 18 ஆண்டுகளாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்லாமல் இருந்த விராட்  கோலிக்கும் இதுவே முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டம் ஆகும். இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலமே விழாக்கோலம் பூண்டுள்ளது. குறிப்பாக பெங்களுரு நகரத்தில் கிரிக்கெட் … Read more

Thug Life : 'தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கப்போகிறது!' – நாசர்

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’ இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நாளை படம் (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 4)’தக் லைஃப்’  படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசி வருகின்றனர். ‘தக் லைஃப்’ படத்தில்… இதில் கலந்துகொண்டு பேசிய நாசர், ” நாயகன் படத்தின் மூலமாகத்தான் முதன் முதலில் கமல் சருடனும், மணி சாருடனும் … Read more

முதல்வர் திறந்து வைத்த ரூ. 300 கோடி மதிப்புள்ள ரோபாடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  ரூ. 300 கோடி மதிப்புள்ள ரோபாடிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளார். இன்று தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. … Read more

கரூர்: 'கனடாவில் உடனே வேலை' – விவசாயியிடம் ரூ. 5.70 லட்சம் ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

கரூர் மாவட்டம், புகளூர் நடுநானப்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாலசுப்பிரமணியன்(வயது 60). இவரது மகன் மனோஜ் பிரபாகர். இவர், பி.எஸ்.சி வேளாண் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டிலிருந்து வந்தார். இந்நிலையில், பாலசுப்பிரமணியனின் நண்பர் சென்னை மயிலாப்பூர் லாஸ் அவென்யூ முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த ராஜ் அருண் (வயது: 70). இவர் சினிமா சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரிடம் பாலசுப்ரமணியன் தனது மகன் படித்துவிட்டு வீட்டில் இருப்பதாகவும், அவருக்கு ஒரு வேலை … Read more

அம்பையில் தாமிரபரணியின் நடுவே வெள்ளத்தில் சிக்கிய 20 பேர் மீட்பு

அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி ஆற்றின் நடுப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது நீர்வரத்து அதிகரித்ததால் சிக்கிக்கொண்ட பெண்கள் உட்பட 20 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். அம்பா சமுத்திரம், காசி நாதர் கோயில் அருகில் தாமிரபரணி ஆற்றில் நேற்று மதியம் கல்லிடைக் குறிச்சி, நெசவாளர் குடியிருப்பு, வைராவிகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் துணி துவைத்து குளித்துக் கொண்டிருந்தனர். ஆற்றின் நடுவே உள்ள பாறை பகுதியில் அவர்கள் குளித்து கொண்டிருந்த போது திடீரென ஆற்றில் நீர்வரத்து … Read more

ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: கிரண் ரிஜிஜு 

புதுடெல்லி: இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் 26 பேர் கொல்லப்பட்டனர், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத … Read more

ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள் தெஹ்ரான் போலீஸாரால் மீட்பு: தூதரகம் அறிவிப்பு

புதுடெல்லி: ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள் தெஹ்ரான் போலீஸாரால் மீட்கப்பட்டதாக இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது. ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்களை தெஹ்ரான் போலீஸார் கண்டுபிடித்து விடுவித்ததாக ஈரானில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன என்று ஈரான் தூதரகம் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.\ Three missing Indian citizens freed by Tehran police Local media in Iran say police have found and released three Indian … Read more