Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி: சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க

Samsung Galaxy S25 Ultra: Samsung Galaxy S25 Ultra ஒரு முதன்மை ஸ்மார்ட்போன். உயர் ரக ஸ்மார்ட்போன் என்பதால், அதன் விலையும் மிக அதிகமாக உள்ளது. இந்த காரணத்திற்காக, இந்த தொலைபேசியை அனைவரும் வாங்க முடியாத சூழலும் உள்ளது. எனினும், Galaxy S25 Ultra-வை மலிவாக வாங்க விருப்பம் கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. இந்த சிறந்த ஸ்மார்ட்போனில் ரூ.12,000 நேரடி தள்ளுபடியை நிறுவனம் அறிவித்துள்ளது. இப்போது இந்த தொலைபேசி ரூ.1,29,999 க்கு பதிலாக … Read more

சென்னை மாநகராட்சி பூங்காக்கள் விளையாட்டு மைதானங்களில் பூர்வீக மரக்கன்றுகளை நட திட்டம்…

ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பூர்வீக இன மரக்கன்றுகளை நட GCC திட்டமிட்டுள்ளது. மாநகராட்சியால் பராமரிக்கப்படும் அனைத்து பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் மயான பூமிகளில் பூர்வீக மரக்கன்றுகளை நடவும், நகர பூங்காக்களை புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் டெண்டர்களை கோரவும் பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) தயாராக உள்ளது. நகரின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் வெப்ப அலைகளிலிருந்து தப்பிக்க ஒரு தடையை … Read more

Vedan: "எங்க 35 வருட அரசியலை 2 நிமிடத்துல சொல்லிடுறீங்க" – வேடனுடன் வீடியோ காலில் பேசிய திருமா

விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் ராப் பாடகரான வேடனிடம் வீடியோக்காலில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோக்காலில் பேசிய திருமாவளவன், “நான் கேரளாவிற்கு அடிக்கடி வருவேன்” என்று கூற, “அடுத்தமுறை கேரளாவிற்கு வரும்போது கண்டிப்பாக வீட்டுக்கு வாருங்கள் ஐயா” என்று வேடன் கேட்டுக் கொண்டிருக்கிறார். தொல்.திருமாவளவன் எம்.பி “வரும் 14 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிகப்பெரிய ஒரு பேரணியை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். உங்களால் வர முடியுமா? … Read more

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனைத்து இந்து இயக்கங்களையும் அழைக்க வேண்டுகோள்

சென்னை: இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனைத்து இந்து இயக்கங்களையும் அழைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் அமைப்பு குழு பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் தற்போது சித்தாந்த ரீதியாக பல துன்பங்களை வேதனைகளை சந்தித்து வருகிறது. அதில் குறிப்பாக இந்துக்கள் சொல்லிக்கொள்ள முடியாத துயரங்களை இந்த திராவிட மாடல் அரசால் பெறுகின்றனர். முருக பக்தர்கள் மாநாடு இந்துக்களை ஒற்றுமைப்படுத்தும் … Read more

உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி கோரிய அங்கன்வாடி சிறுவன்: நிறைவேற்றிய கேரள அரசு!

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த சிறுவன் அங்கன்வாடியில் வழங்கப்படும் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி வழங்க வேண்டுமென வீடியோ மூலம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கேரள அரசு இனி அங்கன்வாடிகளில் முட்டை பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ‘பிரியாணி தரணும்’ … கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் மழலை மொழியில் சிறுவன் ஒருவன், ‘பிரியாணி தரணும்’ எனச் சொல்வார். அதற்கு அவரது அம்மா, ‘எங்கே’ எனக் கேட்பர். “அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக … Read more

இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு மலேசியா ஆதரவு

கோலாலம்பூர்: தீவிரவாத எதிர்ப்பு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மலேசியா வலுவான ஆதரவு தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் எடுத்துரைக்க எம்.பி.க்கள் குழுவினர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதில் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழு மலேசியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்தது. அப்போது தேசிய ஒற்றுமைக்கான துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, வன்முறைக்கு எதிரான மலேசியாவின் பூஜ்ஜிய … Read more

RCB வெற்றியை கொண்டாடிய பிரபலங்கள்! வைரலாகும் அவர்களின் ரியாக்ஷன்ஸ்..

Cinema Celebrities Reactions For RCB Win : 18 வருடங்களுக்கு பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. இந்த நிலையில், இதனை சில பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர்.  

ராஜ்யசபா சீட்டிற்காக கமல்ஹாசன் இப்படி பேசுகிறார் – தமிழிசை சௌந்தரராஜன்!

திமுக கொடுக்கும் ராஜ்யசபா சீட்டிற்காக மொழியை பற்றி பேசினால் அவர்கள் மகிழ்வார்கள் என்று நாட்டு மக்களின் ஒற்றுமையை பிரிக்காதீர்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை! விடுபட்டவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம்

சென்னை: குடும்ப தலைவிகளுக்கு அரசு வழங்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை இதுவரை பெறாதவர்கள்,  விடுபட்டவர்கள் இன்று  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு  வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும்  அரசு இலவசமாக, அதாவது உரிமைத் தொகையாக 1000  ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது. இத்திட்டத்தை தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அவரது … Read more

“திருமணமான பெண் `திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை' என்று கூற முடியாது..'' – உச்ச நீதிமன்றம்

திருமணமாகி கணவரை பிரிந்திருக்கும் பெண்கள் சில நேரங்களில் தங்களது ஆண் நண்பர் தங்களை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக குற்றம் சாட்டுவதுண்டு. இது போன்ற குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்ககளில் நிற்பதில்லை. மகாராஷ்டிரா மாநிலம் சதாராவைச் சேர்ந்த முஸ்கான் என்ற பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பெற்றோர் வீட்டில் வந்து தங்கி இருந்தார். அந்நேரம் அவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் 23 வயது பி.எஸ்.சி படிக்கும் … Read more