இந்தியாவில் 2,710 பேருக்கு கரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான தொற்றுகள் கேரளாவில் உள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக பாதிப்புகள் குறைவாக இருந்த நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளாவில் அதிகம்: தற்போதைய … Read more

மத்திய அரசுக்கு எதிராக வழக்கு : தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சாவூர் கட்டாயக்கல்வி உரிமைகாஅம நிதி கோரி மத்திய அரசை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதக தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மத்திய அரசின் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழைக்குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்க வேண்டும்., இந்த திட்டத்திற்கான பங்குத்தொகையை கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் … Read more

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியா வியக்கத்தக்க அளவில் முன்னேற்றம் – பிரதமர் மோடி

புதுடெல்லி, சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் சார்பில் 81வது ஆண்டு விழாக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது உலக விமானப் போக்குவரத்து உச்சிமாநாடு ஜூன் 1 முதல் 3 வரை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 42 ஆண்டுகளுக்கு முன்பு, 1983 இல் பொதுக் குழு கூட்டம் கடைசியாக நடைபெற்றது. இந்தநிலையில், இந்தநிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது; கடந்த சில ஆண்டுகளில் இந்தியா சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் வியக்கத்தக்க அளவில் முன்னேற்றத்தை கண்டுள்ளது.உலக … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமரூன் நோரி உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் … Read more

துருக்கியில் உக்ரைன் – ரஷியா இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை: போர் நிறுத்தம் சாத்தியமா?

இஸ்தான்புல், ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு ஏற்பட்ட போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது.போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா … Read more

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மட்டுமே குற்றவாளி: நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு அவருக்கு எந்த தண்டனை குறைப்பும் செய்ய கூடாது என்று நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2024 டிசம்பரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24-ம்தேதி புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கோட்டூர்புரத்தை … Read more

மதச்சார்பின்மை என்பது இருவழி சாலையாக இருக்க வேண்டும்: மேற்கு வங்க மாணவி கைதை கண்டித்து பவன் கல்யாண் கருத்து

அமராவதி: மதச்சார்பின்மை என்பது இருவழி சாலையாக இருக்க வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இன்புளுயன்சரும் சட்டக்கல்லூரி மாணவியுமான ஷர்மிஸ்தா பனோலி (22) சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை, மத ரீதியாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது … Read more

முன்னாள் முதல்வr மீது தமிழக அமைச்சர் கடும்விமர்சனம்

சென்னை தமிழக அமைச்சர் ரகுப்தி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாயை கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று தமிழக அமைச்சர் ரகுபதி எக்ஸ் தளத்தில்  “இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் எடப்பாடி பழனிசாமி! திமுக அரசு எடுத்த உறுதியான நடவடிகைகளால் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கில் திமுக அரசு எடுத்த உறுதியான நடவடிகைகளால் 5 மாதங்களில் வழக்கு … Read more

கார்ல்சனை வீழ்த்திய குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், மாக்னஸ் கார்ல்சனை இறுதிவரை போராடி வீழ்த்தினார். இந்நிலையில் குகேஷ்-க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அவர் … Read more