தேனி: திமுக கவுன்சிலர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு; பின்னணி என்ன?

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ராமசாமி. திமுக-வைச் சேர்ந்த தேனி வடக்கு நகர பொறுப்பாளரும், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்றத் தலைவர் ரேணுபிரியாவின் கணவரும், அல்லிநகரம் நகராட்சி 20வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான பாலமுருகன் என்பவர் தன்னை சாதிப் பெயரைச் சொல்லி திட்டி, அடிக்க முற்பட்டு, கொலை மிரட்டல் விடுத்தார் என்றும், அவரை எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் ராமசாமி … Read more

இதயத்தில் அடைப்பு: நிதி துறை செயலர் உதயச்சந்திரனுக்கு ‘ஸ்டென்ட்’ பொருத்தம்

சென்னை: நிதித் துறை செயலர் உதயச்சந்திரனுக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்து ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது. தமிழக நிதித் துறை செயலர் உதயச்சந்திரனுக்கு லேசான நெஞ்சுவலி இருந்ததால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த வாரம் ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் கடந்த 26-ம் தேதி அனுமதியானார். இதய அடைப்பை நீக்கும் வகையில் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது. இதுகுறித்து மருத்துவர்களிடம் … Read more

பாகிஸ்தானுக்கு ஒரு ரகசிய தகவலை அளித்தால் ரூ.50,000: கைதான கடற்படை ஊழியர் விஷால் யாதவ் வாக்குமூலம்

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு ஒரு தகவலை அளித்தால் ரூ.50,000 கிடைக்கும் என்று கைதான கடற்படை ஊழியர் விஷால் யாதவ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஹரியானாவின் ரேவரியை சேர்ந்த விஷால் யாதவ், டெல்லியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு கடற்படையின் ரகசிய தகவல்களை வழங்கி வந்துள்ளார். அண்மையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜஸ்தான் உளவுத் துறை போலீஸார் கூறியதாவது: … Read more

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வோம்: ட்ரம்ப் சூசகம்

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொள்ளப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சூசகமாக தெரிவித்தார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் வியாழக்கிழமை கூறியதாவது: சீனாவுடன் அமெரிக்கா ஒரு மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது (எனினும் அதன் விவரங்களை அவர் விரிவாக கூறவில்லை). இதேபோன்றதொரு மிகப்பெரிய ஒப்பந்தம் விரைவில் இந்தியாவுடனும் கையெழுத்தாககூடும். ஆனால், நாங்கள் எல்லோருடனும் ஒப்பந்தங்களை செய்துகொள்ளப் போவதில்லை. இருப்பினும், ஒவ்வொரு நாட்டுடனும் அமெரிக்கா மிகவும் நட்புறவுடன் உள்ளது. … Read more

டோல்கேட்டில் இனி கட்டணம் கிடையாது! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

கடந்த சில தினங்களாக இருசக்கர வாகனங்களுக்கும் டோல்கேட்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

தொழில் தொடங்க தாட்கோ மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் – ரூ.10 லட்சம் கடன், 35 விழுக்காடு மானியம்..!!

tamil nadu tahdco business loan scheme : புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் தாட்கோ மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

IND vs ENG: கம்பீர் தலையின் மேல் தொங்கும் கத்தி? 2வது டெஸ்டில் அதிரடி மாற்றங்கள்!

India tour of England: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 835 ரன்கள் உட்பட ஐந்து சதங்கள் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் வரும் ஜூலை இரண்டாம் தேதி எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காமில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் சுப்மாம் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தீவிர ஆலோசனை … Read more

தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடாத 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

டெல்லி: இதுவரை எந்தவொரு தேர்தலிலும் பங்குபெறாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடத் தவறியதற்காக, தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத குறைந்தது 24 அரசியல் கட்சிகளுக்கு (RUPPs) இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) காரணம் கேட்க நோட்டீஸ் அனுப்புகிறது. அரசியல் அமைப்பைச் சுத்தப்படுத்தவும், செயலற்ற கட்சிகளைப் பட்டியலில் இருந்து நீக்கவும் ஒரு பரந்த ECI முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது. தேர்தலில் … Read more

கூட்டணி ஆட்சி சாத்தியம்தான்: டிடிவி.தினகரன் கருத்து

திருச்சி: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் பேசி வருகிறார்கள். இதற்கெல்லாம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர அமித்ஷா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்தி வருகிறார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது சாத்தியம்தான். கொள்கை வேறாக இருந்தாலும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். … Read more