சத்தீஸ்கரில் 2 பெண் நக்சலைட்கள் சுட்டுக் கொலை

நாராயண்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: அபுஜ்மாத்தில் உள்ள கோகமெட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப் பகுதியில் மாவட்ட ரிசர்வ் படையினரும், சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து புதன்கிழமை மாலை நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தொடங்கினர். மாவோயிஸ்ட்களின் மாட் பிரிவின் மூத்த போராளிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்த தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. அப்போது … Read more

இந்திய அணி இந்த 3 விஷயங்களை செய்தாலே 'வெற்றி' உறுதி… செய்யுமா கில் படை?

India vs England: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் (Anderson – Tendulkar Trophy) மீது கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும் இருக்கிறது எனலாம். டெஸ்டில் அதிரடி பாணியை கையில் எடுத்திருக்கும் இங்கிலாந்து அணியுடன், இளமையான மற்றும் திறமையான இந்திய அணி மோதும் இந்த டெஸ்ட் தொடர்தான் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இந்த சுவாரஸ்யமான தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி (Team England) 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இங்கிலாந்து முன்னிலை பெற்றிருக்கிறது. இருப்பினும் … Read more

தமிழக முன்னாள் முதல்வருக்கு இந்நாள் தமிழக முதல்வர் புகழாரம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி உள்ளார். இன்றும் நாளையும் சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் ‘முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்’ சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்பு மலரை வெளியிட்டார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது  உரையில், “ஜவஹர்லால் … Read more

பெண்களை குறிவச்சு சீரழித்த ராட்சசன்; 9 பேரை கொன்ற கொடூரன் – தூக்கிலிடப்பட்ட 'ட்விட்டர் கில்லர்'

Japan Twitter Killer Executed: ஜப்பானில் 8 பெண்கள் உள்பட 9 பேரை கொடூரமாக கொலை செய்த ‘ட்விட்டர் கில்லர்’ தூக்கிலிடப்பட்டார். இந்த ட்விட்டர் கில்லர் குறித்து இங்கு பார்க்கலாம்.

Guru Mithreshiva: "தப்பு செய்றவங்க ஒன்னா இருக்காங்க; நல்லவங்க…" – லிங்குசாமி பேச்சு!

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள பணவாசம், கருவிலிருந்து குருவரை, உனக்குள் ஒரு ரகசியம் ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழா “கஷ்டப்பட்டு செய்யும் வேலை நல்லா வராது” இதில் பேசிய இயக்குநர் லிங்குசாமி, “இங்க நான் சுதர்மம்னு ஒரு புதிய வார்த்தையைக் கேட்டேன். விகடன் ஏதோவொன்று புதிதாக இல்லாமல் புத்தகம் வெளியிட மாட்டார்கள்.  சினிமாக்கு வந்த எல்லாரும் … Read more

புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்பு: பேரவைத் தலைவர் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டது என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 28) மாலை செய்தியாளர்களிடம் கூறியது: “சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் காரணத்தால் தேசிய தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசன் ஆகிய 3 பேரும் தங்களின் நியமன எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்வதாக கடிதம் அளித்துள்ளனர். அந்தக் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் அனுப்பப்பட்டது. அவர்களின் … Read more

ஆர்எஸ்எஸ் ஒருபோதும் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பில் உள்ள மதச்சார்பின்மை, சோசலிசம் எனும் வார்த்தைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் கூறி இருந்த நிலையில், அந்த அமைப்பு அரசியலமைப்பை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய அரசியலமைப்பை ஆர்எஸ்எஸ் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் தொடங்கிய நவம்பர் 30, 1949 முதல் அதில் ஈடுபட்ட டாக்டர் அம்பேத்கர், … Read more

Love Marriage Review: காமெடிக்கேற்ற களம், குடும்பங்களின் சங்கமம் – ஈர்க்கிறதா இந்தக் கல்யாண கலாட்டா?

33 வயதான ராமச்சந்திரனுக்கு (விக்ரம் பிரபு) திருமணம் கைகூடவில்லை. `இந்த வயதில் கண்டிப்பாக திருமணம் ஆகியிருக்க வேண்டுமே’, `இவனுக்கு ராசியில்லை’, `இவன்கிட்ட எதோ குறை இருக்கு’ எனச் சுற்றி இருப்பவர்கள் தரும் அழுத்தத்தில் எதாவது ஒரு பெண் கிடைத்துவிட்டால் போதும் என இருக்கிறார். வயது, தொழில் எனப் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிப்புகளைச் சந்திக்கும் அவருக்கு இறுதியாக ஒரு வரன் அமைகிறது. சாதி விட்டு, ஊர் விட்டு கிடைக்கும் அந்த வரனுக்கு அவரும் சம்மதிக்கிறார். அம்பிகா (சுஷ்மிதா பட்) … Read more

BSNL ஃபிளாஷ் சேல்.. தள்ளுபடி.. சலுகை.. இலவச டேட்டா.. அள்ளுங்கள்

BSNL flash sale: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) கூடிய விரைவில் இந்தியாவில் ஃபிளாஷ் விற்பனையைத் தொடங்க உள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சமூக ஊடகக் கணக்கின் மூலம் இது தொடர்பான தகவலை வெளியிட்டு அறிவித்துள்ளது. X தளத்தில் BSNL வெளியிட்ட பதிவு பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த ஃபிளாஷ் விற்பனையில் பயனர்கள் இலவச டேட்டா, பிராட்பேண்ட் சலுகைகள் அல்லது தள்ளுபடி சலுகைகளைப் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விற்பனை … Read more

பாமகவும் திமுக கூட்டணியில் இணைகிறதா? : செல்வப்பெருந்தகை விளக்கம்

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாமகவும் திமுக கூட்டணியில் இணைகிறதா என்னும் வினாவுக்கு விளக்கம் அளித்துள்ளார். இன்று பாமக நிறுவனர் ராமதாஸை அவரது தைலாபுரம் தோட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார்.  இது திமுக கூட்டணிக்கு பாமகவை அழைப்பதற்கான சந்திப்பாக இருக்கும் என சொல்லப்பட்டது. ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் செல்வப்பெருந்தகையிடம் வினா எழுப்பினர்/ அதற்கு செல்வப்பெருந்தகை “பாமக நிறுவனர் ராமதாஸை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன். அரசியல் தொடர்பாகவும், கூட்டணி குறித்த … Read more