எனக்காக செலவழிக்கும் பணத்துக்கு, கணக்கு பார்க்கிறாய்! – அப்பாவின் புலம்பல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அன்பு மகனுக்கு, நம் வீட்டின் உரிமையை உன் பெயருக்கு மாற்றிக் கொடுத்ததின் நோக்கமே, மரணம் எப்போது வேண்டுமானாலும் என்னை தழுவலாம் என்ற முன்யோசனையில்தான். ஆனால் நீயோ, எனக்காக செலவழிக்கும் பணத்துக்கு, கணக்கு பார்க்கிறாய். மருத்துவ செலவுக்கு பணம் கேட்டால், தர மறுக்கிறாய். எனக்கு கிடைக்கும் … Read more

“அண்ணா பெயரை உச்சரிக்க ஸ்டாலினுக்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?” – இபிஎஸ் காட்டம்

சென்னை: “அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதல்வர், போட்டோஷூட் மேடை போட்டு அரசு விழா என்ற பெயரில் … Read more

எஸ்சிஓ கூட்டுப் பிரகடனத்தில் ராஜ்நாத் சிங் கையெழுத்து இடாததற்கு பாகிஸ்தானே காரணம்: வெளியுறவுத் துறை சூசக விளக்கம்

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திடாததற்குக் காரணம், பயங்கரவாதம் குறித்த நமது நாட்டின் கவலையை ஒரு குறிப்பிட்ட நாடு ஏற்க மறுத்ததுதான் காரணம் என்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “பாதுகாப்பு அமைச்சர் எஸ்சிஓ-ன் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்தக் கூட்டம் இரண்டு நாட்கள் நடந்து … Read more

பிளாக் பாக்ஸ்களின் தரவுகள் கிடைச்சாச்சு… விமான விபத்தின் காரணத்தை நெருங்கும் அரசு!

Air India Black Box Investigation: விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பிளாக் பாக்ஸ்களில் இருந்து தரவுகள் வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'2026 தேர்தலுக்கான என் முதல் வாக்குறுதி இதுதான்…' – இபிஎஸ் சொன்னது என்ன?

Edappadi Palanisamy: எங்கள் குருதியிலும் குடியிருக்கும் அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.

3BHK: `என்னோட மனைவி, சொந்த வீடு இல்லைன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க..!' – மாரி செல்வராஜ்

‘எட்டுத் தோட்டாக்கள்’ ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘3BHK’. இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அருண் விஷ்வா இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. 3BHK படத்தில்… இதில் இயக்குநர் ராம், மாரிசெல்வராஜ், ரவிமோகன், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அபிஷன் ஜீவிந்த், ‘கொட்டுக்காளி’ வினோத்ராஜ், ‘அயலான்’ ரவிக்குமார், ‘அயலி’ முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். … Read more

பாமக 2.0 : தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனின் கட்சிப் பதவி பறிப்பு… பாமக தலைவர் ராமதாஸ் நடவடிக்கை…

பாட்டாளி மக்கள் கட்சி இரு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் அக்கட்சியின் மற்றொரு மாவட்ட செயலாளர் இன்று நீக்கப்பட்டுள்ளார். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனை தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக பாமக நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு திராவிட கட்சியின் கூட்டணியில் இடம்பெற்று தேர்தல் ஆதாயம் அடைந்து வருகிறது பாட்டாளி மக்கள் … Read more

"சிபில் ஸ்கோர் எனும் சித்ரவதையிலிருந்து இந்தியர்களை காப்பாற்ற வேண்டும்" – சு.வெங்கடேசன் எம்.பி

“சிபில் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை. இது ஏழை எளிய மக்களுக்கு அரசு நிறுவனங்களில் இருந்து கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல்முறை. இதை கையாள்வது பன்னாட்டு கம்பெனி…” என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். சு.வெங்கடேசன் சமீபகாலமாக வங்கிகளில் நகைக்கடன், விவசாயக் கடனுக்கெல்லாம் சிபில் மதிப்பெண் அடிப்படையில் கடன் வழங்க தகுதி பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிபில் ஸ்கோரை தீர்மானிப்பது ‘சிபில் டிரான்ஸ் யூனியன்’ என்ற … Read more

தேர்தல் வழக்கில் நயினார் நாகேந்திரனிடம் நடந்த குறுக்கு விசாரணை!

சென்னை: திருநெல்வேலி தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். … Read more

தேர்தலில் போட்டியிடாத 345 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கும் தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: 345 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 2019 முதல் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று (ஜூன் 26) தெரிவித்துள்ளது. இந்த 345 அரசியல் கட்சிகளும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து … Read more