PMK அருள்: காலையில் மாநில பொறுப்பு அளித்த ராமதாஸ்; மாலையில் மாவட்ட பொறுப்பிலிருந்து நீக்கிய அன்புமணி

பாமக-வில் கடந்த சில மாதங்களாகவே நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் அதிகார மோதல் நிலவிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், ஒரு வாரத்துக்கு முன்பு பா.ம.க சேலம் மாநகர மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான அருள் மற்றும் பா.ம.க கௌரவத் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான ஜி.கே.மணி ஆகியோர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, ராமதாஸ் அவ்விருவரையும் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அருள், PMK எம்.எல்.ஏ மறுபக்கம் கட்சி நிர்வாகிகள் கூட்டமொன்றில், “இருவரும் விரைவில் குணமடைய கூட்டு … Read more

முதல்வரிடம் வேலை வேண்டி மனு அளித்த கூலித் தொழிலாளிக்கு விடுதி காவலர் பணி!

வேலூர்: முதல்வர் ஸ்டாலினின் வேலூர் சுற்றுப் பயணத்தின்போது, இன்று (ஜூன் 25) வேலை வேண்டி மனு அளித்த கூலித் தொழிலாளி பொற்செல்விக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து, காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தில் விடுதிக் காவலராக நியமனம் செய்து, அதற்கான பணி நியமன ஆணையினை வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 25) வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது, காட்பாடி வட்டம் சேர்க்காடு … Read more

“சங்பரிவார் அரசின் அறிவிக்கப்படாத அவசரநிலை அரசியலமைப்பையே அழிக்க முயற்சிக்கிறது” – பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: “நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. தற்போதைய சங்பரிவார் அரசு அரசியலமைப்பையே அழிக்க முயற்சிக்கிறது.” என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பினராயி விஜயனின் பேஸ்புக் பதிவில், “இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயமான அவசரநிலை பிரகடனம், அரை நூற்றாண்டுக்கு முன்பு ஜூன் 25, 1975 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இது திடீரெனவும் எதிர்பாராததாகவும் ஏற்பட்ட பேரழிவு அல்ல. மாறாக, இந்தியாவில் பல ஆண்டுகளாக சர்வாதிகார போக்குகள் மற்றும் சிவில் உரிமைகள் அரிக்கப்பட்டதன் கொடூரமான … Read more

“இஸ்ரேலும் ஈரானும் சிறுபிள்ளைகள் போல நடந்து கொண்டதால்…” – ட்ரம்ப் விளக்கம்

தி ஹாக்: இஸ்ரேலும் ஈரானும் சிறுபிள்ளைகள் போல நடந்துகொண்டதால் வலுவான மொழியைப் பயன்படுத்தினேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார் நெதர்லாந்தின் தி ஹாக்கில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “இஸ்ரேலும் ஈரானும் ஒரு பள்ளிக்கூடத்தில் இரண்டு குழந்தைகளைப் போல நடந்துகொண்டார்கள், அவர்களுக்குள் ஒரு பெரிய சண்டை நடந்தது. அவர்கள் நரகத்தைப் போல சண்டையிட்டார்கள். நீங்கள் அவர்களை உடனே தடுக்க முடியாது. அவர்கள் சுமார் இரண்டு, மூன்று நிமிடங்கள் சண்டையிட … Read more

கூலி Chikitu பாடலில் டான்ஸ் ஆடிய 4 பிரபலங்கள்! யாரெல்லாம் தெரியுமா? வீடியோ இதோ..

Coolie Chikitu Movie Video Song : அனிருத் ரவிச்சந்தர் இசையில் உருவாகியுள்ள கூலி படத்தின் சிகிட்டு பாடல் வெளியாகி இருக்கிறது. இதில் 4 பிரபலங்கள் இருக்கின்றனர்.

“என்னையே என்னால காப்பாத்திக்க முடியல, அன்பு மட்டும் தான்..'' – சிகிச்சையில் பொன்னம்பலம் உருக்கம்

கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் நடிகர் பொன்னம்பலம் மூன்றாவது முறையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு நடிகர் சிரஞ்சீவி உள்பட பல நடிகர்களும் உதவியுள்ளனர். இந்நிலையில், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் பொன்னம்பலம். பொன்னம்பலம் அதில் அவர், “பிப்ரவரி 13-ம் தேதியில் இருந்து உடம்பு ரொம்ப முடியாமல் போய், அப்போலோ மருத்துவமனையில் கிட்டத்தட்ட 40 நாள் அட்மிட் ஆகியிருந்து வந்துட்டேன். அதன் பிறகு இப்போ அட்மிட் ஆகி … Read more

இந்தியாவுடன் அர்த்தமுள்ள விவாதத்திற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் பேச்சு…

இந்தியாவுடனான அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகளையும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் உரையாடியபோது அவர் இவ்வாறு தெரிவித்ததாக பாகிஸ்தான் வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடனான … Read more

நீதிபதி தேர்வுல தமிழ்நாடு அளவுல 5 வது இடம் புடிச்சிருக்கேன்ப்பா! – மகளின் பரிசு #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் பேரன்புள்ள அப்பாவுக்கு, உங்கள் பேரன்பை மீயதிகம் பெற்ற மகள் இங்கு நலம். எல்லாரும் நல்லா இருக்கீங்கள ப்பா, அன்னைக்கு நீங்க அம்மாவ திட்டுன கோவத்துல பேசாம இருந்துட்டேன் ப்பா, மன்னிச்சிருங்க ப்பா. அம்மா கூட சண்ட போடாதீங்க ப்பா ப்ளீஸ். பேரு‌ந்து கூட உள்ள … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் கடிக்கும் பூனையால் பக்தர்கள் அச்சம்!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வன்னி மரத்தடி விநாயகர் கோயில் அருகில் தரிசிக்க வரும் பக்தர்களை பூனை ஒன்று கடிப்பதால், வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் நிலைக்கு ஆளாகின்றனர். எனவே, கோயில் வளாகத்தில் கடிக்கும் பூனைகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் உள்ளூர் வெளியூர் பக்தர்கள், வெளி மாநிலங்கள், வெளிநாட்டு பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்ய வருகின்றனர். இக்கோயிலில் வன்னி மரத்தடி விநாயகர் கோயில் … Read more

அகமதாபாத் மைதானத்துக்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

அகமதாபாத்: ஏமாற்றிய காதலனை பழிவாங்குவதற்காக அவரது பெயரில் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவர் ரேனி ஜோஷில்டா. இவர் பன்னாட்டு நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் திவிஜ் பிரபாகர் என்பவரைக் காதலித்து வந்தார். ஆனால் திவிஜ் பிரபாகர், இவரது காதலை ஏற்காமல் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜோஷில்டா, தனது காதலரை பழிவாங்க முடிவு செய்தார். ஐடி இன்ஜினீயரான … Read more