“எந்த சூழலிலும் பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம்” – அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதலை உறுதி செய்த ஈரான் 

டெஹ்ரான்: ஈரான் எந்த சூழ்நிலையிலும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்காமல் விடாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அமைதியான அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் அப்பட்டமான ராணுவ தாக்குதல் மற்றும் சர்வதேச சட்டத்தின் மீறலைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் திட்டமிடலின்படி ஆபரேஷன் பெஷாரத் ஃபத்தாவின் மூலம் கத்தாரில் உள்ள அல்-உதெய்த் ராணுவ தளத்தை … Read more

350+ ரன்கள் அடிச்சும் இந்தியா தோற்றுள்ளது… எப்போது, யாருடன் தெரியுமா?

India National Cricket Team: இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு (England vs India) இடையிலான ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் (Anderson Tendulkar Trophy 2025) தற்போது நடைபெற்று வருகிறது. லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ENG vs IND: 371 ரன்களே இலக்கு இந்திய அணி (Team India) அதன் இரண்டாவது இன்னிங்ஸை தற்போது நிறைவு செய்திருக்கிறது. … Read more

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் மோசடி : தேர்வு எழுதிய மாணவர்களிடம் இருந்து பணம் வாங்கிய 2 பேரை கைது செய்தது சிபிஐ

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை சிபிஐ கைது செய்துள்ளது. நீட் தேர்வு விவகாரம் ஆரம்பம் முதலே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களை குறிவைத்து … Read more

கதார் அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல்… ஈரான் கொடுத்த பதிலடி – இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

Iran Attacks US Air Base: கதார் நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா: ரூ.19 ஆயிரம் கோடி விமானம்; நிலத்தை ஊடுருவும் குண்டு – ஈரானை தாக்கிய நவீன ஆயுதங்கள்!

ஈரானின் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் உலகின் அரசியல், பொருளாதார சூழலில் புதிய சூறாவளியை உருவாக்கியிருக்கிறது. இந்த தாக்குதல் உலக நாடுகளால் கவனிக்கப்பட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது அமெரிக்கா பயன்படுத்திய உயர் ரக ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகள். ஒருநாட்டிடம் என்னென்ன போர் கருவிகள், விமானங்கள், குண்டுகள் இருக்கின்றன என்பதை பிற நாடுகள் அறிந்திருந்தாலும், அதன் திறனை, களத்தில் பயன்படுத்தும் தந்திரத்தை கணிப்பது இயலாத ஒன்று. ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா பயன்படுத்திய பயங்கர … Read more

‘திராவிடத்தை ஒழிப்போம்’ என வீடியோ வெளியிட்டது எனக்குத் தெரியாது: நயினார் நாகேந்திரன்

கோவை: “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ வெளியிட்டது எனக்குத் தெரியாது. நிகழ்ச்சி முடிந்தவுடன் கோவை புறப்பட்டுவிட்டேன். அது குறித்து தெரிந்த பின்னர் பதில் அளிக்கிறேன்,” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 23) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “மதுரையைில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யாரும் வரமாட்டார்கள் என திமுக கூறிய நிலையில் முதல் நாள் 3 லட்சம் பேர், … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெண்ணை அச்சுறுத்தி ரூ.22 லட்சம் மோசடி

மும்பை: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மும்பை பெண் ஒருவரை அச்சுறுத்தி மர்ம நபர்கள் ரூ.22 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து மும்பை சைபர் குற்றப் பிரிவு அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: தெற்கு மும்பை கிர்கான் பகுதியில் வசிக்கும் 64 பெண்ணுக்கு அடையாளம் தெரியாத எண்களில் இருந்து இம்மாதம் 3 அழைப்புகள் வந்தன. அதில் பேசிய ஒருவர் தன்னை டெல்லி தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரி பிரேம் குமார் குப்தா என அறிமுகம் செய்துகொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் … Read more

‘ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் நியாயம் ஏதும் இல்லை’ – ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் நியாயம் ஏதும் இல்லை என்றும், ஈரான் மக்களுக்கு ரஷ்யா உதவ முயற்சிக்கிறது என்றும் தன்னை சந்தித்த ஈரான் வெளியுறவு அமைச்சரிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாஸ்கோவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, இஸ்ரேல் உடனான போரின் நிலவரம் குறித்து … Read more

ஹனிமூன் கொலையை தொடர்ந்து மற்றொரு அதிர்ச்சி.. வட இந்தியாவில் நடப்பது என்ன?

மத்திய பிரதேசத்தின் ஹனிமூன் கொலையை தொடர்ந்து ஜார்க்கண்ட்டில் மற்றொரு கொலை அரங்கேறி உள்ளது. ஒரு பெண் தனது கணவனை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நீட் மதிப்பெண் மோசடி விவகாரம் : நீட் – முதல் கோணல் முற்றிலும் கோணல்… முதல்வர் ஸ்டாலின் காட்டம்…

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அதிக மதிப்பெண் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரில் தேசிய தேர்வு நிறுவனம் (NTA) அதிகாரிகளுடன் கைகோர்த்து இந்த மோசடியில் அவர்கள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ. 90 லட்சம் பெற்றதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், … Read more