‘நோபலுக்கு ட்ரம்ப் பெயரை பரிந்துரை செய்ததை திரும்ப பெறுக’ – பாகிஸ்தானில் வலுக்கும் குரல்கள்

இஸ்லாமாபாத்: ஈரானின் 3 அணுசக்தி தளங்களை அமெரிக்கா தாக்குதல் நடத்தி அழித்ததைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெயரை பரிந்துரைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது மேற்கொண்ட அமைதிக்கான முயற்சிகள் காரணமாக, அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப்புக்கு வழங்க பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு … Read more

அகமதாபாத் விமான விபத்து.. மத்திய அரசு விளக்கம்!

குஜராத் அகமதாபாத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்து குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

அதுக்குள்ள ஓடிடியில் வெளியாகும் குபேரா.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

Kuberaa Movie OTT Release: தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் குபேரா. தற்போது இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Ind vs Eng 1st Test: 3 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா.. தோல்வியை தவிர்க்குமா?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ் தொடரை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி லீட்ஸின் ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி தற்போது 129 ரன்களை எடுத்த நிலையில், 3 விக்கெட்களை இழந்துள்ளது. இந்த நிலையில், இந்திய அணி இப்போட்டியில் தோல்வியை தழுவ அதிக வாய்ப்புள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.  இப்போட்டியின் டாஸை இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் … Read more

வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் சீட்டுக்காக அடியாட்களை வைத்து பயணியை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ…. வீடியோ வெளியானதால் பரபரப்பு…

டெல்லி-போபால் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராஜ் பிரகாஷ் என்பவர் கடந்த வியாழனன்று பாபினா தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராஜீவ் சிங் மற்றும் அவரது அடியாட்களால் தாக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் பா.ஜ.க., எம்.எல்.ஏ வாக இருப்பவர் ராஜீவ் சிங். இவர் டெல்லியில் இருந்து போபால் நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலில் ஜான்சி செல்ல தனது மனைவி மற்றும் மகனுடன் … Read more

முதல் எலெக்ட்ரிக் விமான சேவை; வெறும் ரூ. 694, 96% விலை குறைவு; வான்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்!

எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் கார், எலெக்ட்ரிக் சரக்கு வாகனங்கள் வரிசையில் இப்போது எலெக்ட்ரிக் விமானமும் வந்துவிட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா டெக்னாலஜிஸ் (BETA Technologies) என்ற நிறுவனம் 2022 முதலே எலெக்ட்ரிக் விமானங்களைத் தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதலில் சரக்கு மற்றும் மருத்து அவரச உதவிகளுக்கான எலெக்ட்ரிக் விமானங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்தது. இதைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு முதலே 4 பேர் பயணிக்கும் எலெக்ட்ரிக் விமானங்களை அறிமுகப்படுத்தி அதற்கான சோதனைகளில் ஈடுபட்டு வந்தது. … Read more

தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – முழுப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்படும் பதவி, பணியிடங்கள் குறித்த விவரம்: ராஜேந்திர ரத்னூ – முதன்மைச் செயலாளர், உறுப்பினர் செயலர், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் – அரசு செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை ச.விஜயகுமார் – கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையர், … Read more

பிஹாரில் பிரம்மாண்டமான சீதை கோயில்: புதிய வடிவமைப்பை பார்வையிட்ட முதல்வர் நிதிஷ் குமார்

புதுடெல்லி: அயோத்தியைப் போல் பிஹாரின் சீதாமடியில் சீதைக்கு பிரம்மாண்டமாகக் கோயில் கட்டப்பட உள்ளது. இதன் புதிய வடிவமைப்பை முதல்வர் நிதிஷ்குமார் பார்வையிட்டுள்ளார். பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியில் உள்ளது. இங்குள்ள சீதாமடியின் புனவுரா எனும் கிராமத்தில் சீதைக்காக ஒரு பழைய கோயில் உள்ளது. புனவுரா தாம் எனப்படும் இக்கோயில் உள்ள இடத்தில், சீதை பிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த கோயிலின் மேம்பாட்டுக்காக கடந்த ஆண்டு நவம்பரில் பிஹார் அரசு சுமார் … Read more

நிபந்தனையற்ற போர்நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனாவின் தீர்மானம் நிறைவேறுமா?

தெஹ்ரான்: ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேல் – ஈரான் இடையே உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் முன்மொழிந்தன. இதன் மீதான வாக்களிப்பு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நேற்று கூடியது. 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் கூட்டத்தில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற … Read more

ஈரானை தாக்க அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதா? @PIBFactCheck

PIB Fact Check: ஈரானை தாக்க அமெரிக்கா போர் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் ‘முற்றிலும் போலியானவை’ -இந்திய அரசு.