நடிகர் ஸ்ரீகாந்த் கைது! இன்னொரு நடிகரும் சிக்குவாரா? வழக்கின் முழு பின்னணி என்ன?

Actor Srikanth Arrested: போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் அதிரடி! 55 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்! என்ன காரணம்?

55 IAS Officers Transferred: தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Vijay: 15 நாள் அவர் கூட காம்பினேஷன் சீன் இருந்துச்சு; 'ஜன நாயகன்' பட அனுபவம் பகிரும் அருண்

‘தளபதி 69’ல ஒரு கேரக்டர் இருக்கு நீங்க உடனடியா வினோத் சார் ஆபீஸ்க்கு வாங்க’னு போன் வந்தப்ப நம்மாளுங்க யாரோ ப்ராங்க் பண்ணுவாங்கனு நினைச்சுக்கிட்டேதான் போனேன். ஆனா நிஜமாகவே வினோத் சார் முன்னாடி போய் உட்கார்ந்த பிறகே அதை நம்பினேன். ‘சின்ன வயசுல விஜய் சார் பட ஷூட்டிங் பாக்குற மாதிரி, அப்ப அவர்கிட்ட போய் கைகுலுக்குற மாதிரியான கனவெல்லாம் கண்டிருக்கேன். அது இப்ப நனவாகியிருக்கு’ – ‘ஜன நாயகன்’ மூலம் சினிமாவில் அறிமுகமாகவிருக்கும் மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் … Read more

கடும் மழை காரணமாக டெல்லிக்கு 2 நாட்கள் மஞ்சள் அலர்ட்

டெல்லி கடும் மழை காரணமாக டெல்லிக்கு 2 நாட்கள் மஞ்சலெச்சரிக்கை விடபட்டுள்ளது இன்று இந்திய வானிலை ஆய்வு மையம், “டெல்லியில் அடுத்த ஏழு நாட்களுக்கு பெரும்பாலும் மேகமூட்டமான வானிலை இருக்கும். மேலும் ஜூன் 25 ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மணிக்கு 30–40 கிமீ வேகத்தில் … Read more

“அரசு கண்டுகொள்ளாதது வேதனை..'' – பதக்கங்களுடன் கரும்புச்சாறு விற்கும் தேசிய தடகள வீரர்

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஃபாசில்கா நகரிலிருக்கும் சபுவானா கிராமத்தில் வசித்து வருகிறார் தேசிய தடகள வீரர் தீபக். நிதி பற்றாக்குறையாலும் அரசாங்க ஆதரவில்லாமலும் தவித்து வரும் விளையாட்டு வீரர் தீபக், தனது அன்றாட வாழ்வாதாரத்திற்கான பணம் சேர்க்க தெருக்களில் கரும்புச்சாறு விற்று வாழும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். 22 வயதான தேசிய தடகள வீரர் தீபக், தனது கரும்புச்சாறு விற்கும் வண்டியை அலங்கரிக்க மாநில அளவிலான தடகள போட்டிகளில் தான் பங்கேற்று  வென்ற 16 பதக்கங்களை பயன்படுத்தி அலங்கரித்து … Read more

“பாஜகவின் பாசிச அரசியலுக்கு துணைபோய் அதிமுக துரோகம் செய்கிறது” – ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

சென்னை: “திராவிட இயக்கத்தின் பெயரையும் அண்ணாவின் பெயரையும் தனது கட்சியின் பெயரிலேயே வைத்துக் கொண்டு, தந்தை பெரியாரை எங்களது தலைவர் என்று கூறிக் கொண்டு, பாஜகவின் பாசிச அரசியலுக்குத் துணை போய்த் துரோகம் செய்திருக்கிறது அதிமுக.” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறார்கள் ‘அண்ணா’ பெயர் தாங்கிய அதிமுக முன்னாள் … Read more

4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: குஜராத்தில் பாஜக, ஆம் ஆத்மி தலா ஒரு தொகுதியில் வெற்றி

புதுடெல்லி: கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் 3 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2 தொகுதிகளில் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பிற்பகல் 2.20 மணி நிலவரப்படி, இரண்டு தொகுதிகளில் வெற்றி-தோல்விகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற 3 … Read more

இஸ்ரேல் நகரங்களில் இடைவிடாது ஒலிக்கும் சைரன்: விடாப்பிடியாக தாக்கும் ஈரான்

டெல் அவிவ்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ‘போரை முடிவுக்குக் கொண்டுவருவோம்’ என்ற எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் புதிதாக ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் பல நகரங்களில் ஓயாமல் சைரன் சத்தங்கள் ஒலிக்கின்றன. ஜெருசலேமில் பயங்கர குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன என ஊடகங்கள் தெரிவித்தன. ஈரான் – இஸ்ரேல் இடையே 11-வது நாளாக மோதல் நீடிக்கும் நிலையில், இன்றும் ஈரானிலிருந்து ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் ஏவுகணைகள் குறித்து எச்சரிக்கை … Read more

போலீசார் பிடியில் நடிகர் ஸ்ரீகாந்த்… போதைப் பொருள் பயன்படுத்தினாரா? – தீவிர விசாரணை

Actor Srikanth: நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அவரை கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த ஒரு வாரத்திற்கு இங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TN Rain Update: தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.