ஜெகன் மோகன் ரெட்டி காரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு – வீடியோ வெளியாகி அதிர்ச்சி

அமராவதி, ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆந்திராவின் குண்டூர் மாவட்ட போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். முன்னதாக இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தில் தற்கொலை செய்து … Read more

உச்சகட்ட போர்ப்பதற்றம்: ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது..? – டிரம்ப் கேள்வி

வாஷிங்டன் ஈரான் நாட்டில் உள்ள போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 முக்கிய அணு செறிவூட்டல் நிலையங்கள் மீது அமெரிக்கா நேற்று குண்டு வீசி தாக்கியது. இந்த தாக்குதலுக்கு பிறகு, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க மக்களுக்கு விளக்கமளிக்க, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “அமெரிக்க ராணுவ தாக்குதல்களால் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் முற்றிலும் முழுமையாகவும் அழிக்கப்பட்டுவிட்டன. இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நமது போர் … Read more

நெல்லை: ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் வெகு சிறப்பாக நடந்த ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் | Photo Album

திருநெல்வேலி பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் திருவிழா.! Source link

மாநாட்டுக்கு காவல் துறையினர் ஒத்துழைக்கவில்லை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டுக்கு காவல் துறையினர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த அவர், எல்.முருகன் கூறியதாவது: உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்பார்த்ததுதான் முருக பக்தர்கள் மாநாடு. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கந்த சஷ்டி பாடல்கள் பாடும்போது, முதல்வர் ஸ்டாலினும், அவரது மனைவி துர்காவும் வீட்டில் கந்த சஷ்டி பாட வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் மிகப் … Read more

லே சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் டெல்லி திரும்பியது

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இருந்து லே நகருக்கு சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று டெல்லி திரும்பியது. டெல்லியில் இருந்து லடாக்கின் லே நகருக்கு இண்டிகோ விமானம் (6E 2006) இயக்கப்படுகிறது. இந்த விமானம் நேற்று காலை வழக்கம்போல் லே நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் சுமார் 180 பேர் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் லே நகரை அடைந்ததும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு தரையிறங்க … Read more

அதிரடியாக உயரப்போகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை? இவ்வளவு உயர வாய்ப்பு!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தாக்குதல் அதிகரித்துள்ளதால் மேலும் பதட்டமான சூழ்நிலை தான் நிலவி வருகிறது. கடந்த வாரம் முதல் இரு நாடுகளுக்கும் இடையேயான பகைமை தீவிரமடைந்துள்ளன.

51-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: தவெக தலைவர் விஜய்-க்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தவெக தலைவர் விஜய்யின் 51-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் தவெகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் 51-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி விழாவை கொண்டாடினர். தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட … Read more

ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் ஜூலை 1-ல் கடற்படையில் சேர்ப்பு

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் ஜூலை 1-ம் தேதி இந்திய கடற்படையுடன் இணைக்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியுள்ளதாவது: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் ஜூலை 1-ம் தேதி ரஷ்யாவின் கடலோர நகரமான கலினின்கிராட்டில் இருந்து இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. கடல் மற்றும் நிலத்தை குறிவைக்கும் நீண்ட தூர கப்பல் ஏவுகணையான பிரம்மோஸ் உட்பட 26 சதவீதம் உள்நாட்டு உதிரிபாகங்களை கொண்டு இந்த கப்பலில் … Read more

''தமிழகத்தில் ஆன்மிக புரட்சி ஏற்பட இம்மாநாடு உதவும்'' – இந்து முன்னணி மாநில தலைவர் பேச்சு

மதுரை: “தமிழகத்தில் ஆன்மிக புரட்சி ஏற்பட இம்மாநாடு உதவிகரமாக இருக்கும்,” என்று முருக பக்தர்கள் மாநாட்டில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார். தமிழக இந்து முன்னணி சார்பில், மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதற்காக திருப்பரங்குன்றம் மலை பின்னணியில் முருகனின் முழு உருவ கட்வுட், அறுபடை வீடுகள் அடங்கிய வடிவில் திறந்த வெளி மாநாட்டு மேடை அமைக்கபட்டிருந்தது. இதற்கு பக்கத்தில் சாதுக்களுக்கும், கலை … Read more

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானின் லஷ்கர் தீவிரவாதிகள்: என்ஐஏ தீவிர விசாரணையில் உறுதி

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் லஷ்கர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் என்ஐஏ விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பட்கோட் … Read more