அமெரிக்க தாக்குதலால் ஆவேசம்: இஸ்ரேலை நோக்கி சீறும் ஏவுணைகள் – ஈரானின் புது ‘வியூகம்’ என்ன?

தெஹ்ரான் / டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மீதான கடும் கோபத்தில் உள்ள ஈரான் பல்வேறு புதிய வியூகங்களை வகுத்துள்ளது. இதனிடையே, ஆவேசத்தின் உச்சமாக, இஸ்ரேல் நகரங்கள் மீது சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது ஈரான். அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையாக பதிலடி தந்து வந்ததால் இரு … Read more

’விரல் நுனியில் அரசு சேவைகள்’ மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamilnadu Government : மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் செயலியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கரூர், நாகை மாவட்ட சீனியர் சிட்டிசன்களிடம் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

கூகுள் குரோம் பயனர்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கை!

Indian Government Cyber Alert, Chrome Browser : இந்திய அரசு கூகுள் குரோம் பயனர்களுக்கு அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்சைடில் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு குறைபாடுகள் (Vulnerabilities) காரணமாக ஹேக்கர்கள் ஊடுருவ அதிக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. பாதுகாப்பு குறைப்பாட்டை வைத்து ஹேக்கர்கள் உங்கள் கணினியை கட்டுப்பாட்டில் எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அபாயம் விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் பயனர்களுக்கு அதிகம் உள்ளது. எனவே இந்த சிஸ்டம் வைத்திருக்கும் யூசர்கள் எச்சரிக்கையாக இருக்க … Read more

அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 22-06-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23-06-2025 முதல் 28-06-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் … Read more

“தமிழ்நாட்டில் எதற்காக இரண்டு சட்டங்கள்?'' – முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை கேள்வி

மதுரை பாண்டி கோவில் அம்மா திடலில் ‘முருக பக்தர்கள் மாநாடு’ நடந்து வருகிறது. பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் இந்த மாநாடு சுமார் 3 மணிக்கு தொடங்கியது. மேலும், இந்த மாநாட்டில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். முருக பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருப்பதாவது, “உலகத்தின் யூதர்கள் 0.2 விழுக்காடுகள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வியல் முறையை பாதித்ததற்காக நான்கு நாடுகளுடன் இஸ்ரேல் சண்டைப் போட்டு கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் விமானம் … Read more

''கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் தமிழ்நாட்டில் உள்ளது'' – பவன் கல்யாண் ஆவேசம்

மதுரை: “கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் தமிழ்நாட்டில் உள்ளது. இந்து மதத்தை கேலி செய்யும் அவர்களால் மற்ற மதங்களை கேலி செய்ய முடியுமா” என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பி உள்ளார். இந்து முன்னணி சார்பில், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண், “என்னை மதுரைக்கு வர வழைத்தது முருகன். என்னை வளர்த்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன். … Read more

ஈரானில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம்

ஈரானிலிருந்து டெல்லி திரும்பிய இந்தியர்கள் ‘இந்தியா வாழ்க, பிரதமர் மோடி வாழ்க’ என மகிழ்ச்சியுடன் கோஷமிட்டனர். இஸ்ரேல் – ஈரான் இடையே போர் ஏற்பட்டதால், ஈரான் மருத்துவ பல்கலைக்கழகங்களில் பயிலும் காஷ்மீர் மாணவர்களை தாய்நாடு அழைத்து வர வேண்டும் என அவர்களது பெற்றோர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஈரானில் இந்தியர்கள் சுமார் 4,000 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். இதையடுத்து ஈரானில் உள்ள இந்தியர்களை , தாய்நாடு அழைத்து வரும் பணியை வெளியுறவுத்துறை அமைச்சகம் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு : 2 மாவட்ட தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!!

TNPSC Group 4 Exam Free Mock Test 2025 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பித்த நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்ட தேர்வர்களுக்கு மாதிரி தேர்வுகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சாருகேசி: "இதைப் படமாகப் பண்ணச் சொன்னதே ரஜினி காந்த் சார்தான்" – இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’, ‘ஆளவந்தான்’ உள்ளிட்ட பல முக்கியமான படங்களை தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. இப்போது அவர் இயக்கியிருக்கும் ‘சாருகேசி’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. Director Suresh Krishna இந்த நிகழ்வில் சுரேஷ் கிருஷ்ணா பேசுகையில், “‘சாருகேசி’ ஒரு மியூசிகல் பெயர். இங்கே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி சொல்லிக்கிறேன். அவருக்கு நன்றி சொல்றதுக்கு … Read more

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு விமரிசையாக தொடக்கம்

மதுரை இந்து முன்னனி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு இப்போது விமரிசையாக தொடங்கி உள்ளது. தற்போது இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் துவக்கமாக கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது.  இந்த மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் … Read more