சென்னை: பரந்தூர் மக்களை நானே தலைமைச்செயலகம் அழைத்து வந்து முற்றுகையிடுவேன் என்றும், அப்போது எந்த பிரச்சனை வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தவெக தலைவர் விஜய் ஆவேசமாக கூறினார். விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும், தி.மு.க – பா.ஜ.கவுடன் என்றுமே கூட்டணி இல்லை என்று தவெக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2026 பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும் கூட்டணி குறித்து […]
