சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு – சிசிடிவி-யைப் பார்த்ததும் அடையாளம் கண்ட போலீஸ்!

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ரோஸி (40) இவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து நேற்று மாலை வீட்டுக்குச் செல்ல பெருங்குடி ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது ரோஸியின் அருகே இளைஞர் ஒருவர் வந்தார். அவர் ரோஸி அமர்ந்திருந்த இருக்கையில் மேடம் இங்கு நான் உட்காரலாமா என மரியாதையாக கேட்டார். அதற்கு ரோஸி, எந்த பதிலும் சொல்லவில்லை. அதன்பிறகு ரோஸியின் அருகே அமர்ந்த அந்த இளைஞர், அவரிடம் ரயில் குறித்த … Read more

கடலூர் மாநகராட்சி குப்பை வண்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள்: அதிகாரிகள் விசாரணை

கடலூர்: கடலூர் மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குப்பை சேகரிக்கும் பேட்டரி வண்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் வாக்காளர் அட்டைகள் கிடந்தன. இவற்றை வருவாய் துறை அதிகாரி கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மஞ்சக்குப்பம் பில்லு கடை தெருவில் உள்ள கடலூர் மாநகராட்சி பிரிவு அலுவலகம் 3 ல் (மாநகராட்சி பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு வருகை பதிவேடு எடுக்கும் இடம்) வாயிலில் குப்பை எடுக்கும் மூன்று சக்கர பேட்டரி … Read more

நேரு மீதான ஜெய்சங்கரின் குற்றச்சாட்டு கொடூரமானது: ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதற்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் திருப்திப்படுத்தும் அரசியல்தான் காரணம் என்று மாநிலங்களவையில் ஜெய்சங்கர் கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், இந்த குற்றச்சாட்டு கொடூரமானது என கூறியுள்ளார். இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு காலத்தில் வெளியுறவு அமைச்சர் தொழில்முறை நிபுணராக அறியப்பட்டார். ஆனால், தற்போது அதற்கான அறிகுறியைக்கூட கைவிட்டுவிட்டதை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். நேரு குறித்தும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் … Read more

“லோகி மாமா Love You..” லாேகேஷ் கனகராஜை சர்பரைஸ் செய்த குழந்தை! க்யூட் வைரல் வீடியாே..

Loki Mama Love You Cute Video : லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் கூலி படத்தின் ப்ரமோஷனுக்காக வெளி மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அங்கு, ஒரு குழந்தை அவருக்கு கொடுத்த வரவேற்பு க்யூட்டான வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.  

ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழையாகிவிட்டது… சொன்னவர் கடம்பூர் ராஜூ – என்ன விஷயம்?

Kadambur Raju: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு ஓட்டில் பாஜகவை வீழ்த்தியது அதிமுகவின் வரலாற்றுப் பிழையாகிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தது பரபரப்பை உண்டாக்கியது. இதற்கு அவர் விளக்கமும் அளித்துவிட்டார்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் இதுதான்: உங்களிடம் உள்ளதா?

Smartphone Sale in India: ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்த நிலையை எட்டியுள்ளது. இந்த இரண்டாவது காலாண்டில் மதிப்பு அடிப்படையில் அதிக வருவாய் ஈட்டப்பட்டது. விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை, மலிவான EMI-கள் மற்றும் ஆப்பிள்-சாம்சங் போன்ற நிறுவனங்கள் வழங்கும் விளம்பர சலுகைகள் அதிகரித்தது ஆகியவை இதற்கு மிகப்பெரிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. மிக அதிகமாக விற்பனையான ஸ்மார்ட்போன் iPhone 16  – இந்த காலாண்டில் சந்தை மதிப்பு 18% மற்றும் அளவு … Read more

30000 ரூபாய் லஞ்சம் வாங்கிய டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரி கைது… சிபிஐ மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.6 கோடி ரொக்கம் சிக்கியது…

டெல்லியில் பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் ரூ. 30,000 லஞ்சம் வாங்கியபோது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். கல்லுராம் மீனா என்ற செயற்பொறியாளர் கட்டுமான ஒப்பந்ததாரரிடம் அவரது பில்லுக்கு ஒப்புதல் அளிக்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து லஞ்சம் வாங்கியபோது கல்லுராம் மீனா பிடிபட்டுள்ளார். டெல்லியின் முக்கிய நீதிமன்றங்களில் ஒன்றான ரௌஸ் ஆவின்யூ நீதிமன்ற கட்டுமான பணி உள்ளிட்ட முக்கிய கட்டுமானங்களை கவனித்து வரும் செயற்பொறியாளராக கல்லுராம் … Read more

எலோன் மஸ்க் அதிரடி அறிவிப்பு! xAI ஊழியர்களுக்கு ஆப்பு!!!

Elon musk shocking move: எலோன் மஸ்க் தலைமையிலான xAI நிறுவனத்தில் இனிமேல் “ரிசர்ச்சர்” என்ற பதவி இல்லை! அனைத்துப் பணியாளர்களும் இன்ஜினியர்கள் என்ற ஒரே அடையாளத்தில் இருக்கும் என அவர் அறிவித்தார். இது தொழில்நுட்ப துறையில் சமத்துவத்தைக் கொண்டுவரும் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

நெல்லை ஆணவப் படுகொலை: "இது தமிழ்ச் சமூகத்திற்குப் பேராபத்து" – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்களும், திரைக்கலைஞர்களும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து சமூக மாற்றத்துக்காகக் குரலெழுப்பி வருகின்றனர். கவின் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஆணவப் படுகொலைக்கு எதிரான கண்டனங்ளை முன்வைத்துள்ளனர். தனிச்சட்டம் வேண்டும்! அறிக்கை கூறுவதாவது, “தூத்துக்குடி … Read more

தென்காசியில் வீட்டை அபகரிக்க முயன்றதாக ஜான் பாண்டியன் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு: ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

மதுரை: தென்காசி வல்லத்தில் வீட்டை அபகரிக்க முயன்றதாக ஜான்பாண்டியன் கட்சி நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் கொங்கன்தான் பாறை கிராமத்தைச் சார்ந்த நிவன் மேத்யூ, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் கடந்த 2018ல் தென்காசி மாவட்டம் வல்லம் கிராமத்தில் பூமணி என்பவரின் வீட்டை ரூ.19 லட்சத்துக்கு விலைக்கு வாங்கினேன். அந்த வீட்டில் உறவினருடன் வசித்து வருகிறேன். தற்போது … Read more