அஜித்குமாரை சித்ரவதை செய்ய ஆணையிட்ட காவல்துறை உயர் அதிகாரி யார்? – அன்புமணி கேள்வி

சென்னை: அஜித்குமாரை சித்ரவதை செய்யும்படி, காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும், என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு … Read more

இந்தியா – அமெரிக்கா இடையே கையெழுத்தாகிறது 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்

புதுடெல்லி: இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க மூத்த பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கர்னல் கிறிஸ் டெவின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செவ்வாயன்று (ஜூலை 1) நடைபெற்ற ஒரு தொலைபேசி உரையாடலின் போது, ​​அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த ஆண்டு இறுதியில் சந்திக்கும் போது புதிய கட்டமைப்பை … Read more

Fact Check: கணவரை பற்றி இழிவாக பதிவிட்ட நயன்தாரா? வைரலாகும் போஸ்ட்

Fact Check Nayanthara About Vignesh Shivan : நடிகை நயன்தாரா, தனது கணவர் குறித்து இழிவாக பதிவிட்டதாக ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையா, இல்லையா என்பது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

அஜித்குமார் லாக்கப் மரணம்: சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க அவசியமே இல்லை – ஹென்றி திபேன் பளிச்!

Ajithkumar Lockup Death: அஜித்குமார் காவல் நிலைய சித்திரவதை படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை என சமூக செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் கூறியுள்ளார். 

அப்போ கிங்… இப்போ பிரின்ஸ்… கில்லுக்கு உச்சத்தில் இருக்கிறார் சுக்கிரன் – ஏன் தெரியுமா?

Shubman Gill Century: ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் (England vs India) 2வது டெஸ்ட் போட்டி பட்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று (ஜூலை 2) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி (Team England) பந்துவீச்சை தேர்வு செய்தது.  IND vs ENG: பலமான நிலையில் இந்தியா  இந்திய அணியின் (Team India) முதலில் பேட்டிங் செய்து நேற்றைய … Read more

3BHK: சரத்குமார் சாரும், நானும் ஒரு படத்துல நடிக்கணும்னா… – தேவயானி கூறியது என்ன?

ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘3BHK’. இப்படம் நாளை(ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று (ஜூலை3) நடைபெற்றது. 3BHK படத்தில்… இதில் பேசிய தேவயானி, ‘ இந்தப் படத்தின் படபிடிப்பு நாட்கள் அருமையாக இருந்தது. ரொம்ப பாசிட்டிவ் ஆன படம். நேர்த்தியான ஒரு படம் எடுப்பதற்கு முயற்சி செய்திருக்கிறோம். இந்தப் படத்தில் நாங்கள் ஒரு … Read more

சிம் கார்டு மோசடிகள்: ஆதாரை பயன்படுத்தி கண்டுபிடிப்பது எப்படி?

Aadhaar SIM card fraud check : சிம் கார்டு மோசடிகள் மற்றும் இன்னொருவரின் ஆதாரை அடையாளமாக பயன்படுத்தி நடக்கும் மோசடிகள் அதிகமாகிக் கொண்டிருப்பதால், உங்கள் ஆதார் அட்டையுடன் எத்தனை மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து நீங்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் யாரோ ஒருவரின் ஆதார் அட்டையை அவருக்கே தெரியாமல் பயன்படுத்தி புதிய சிம் கார்டுகளைப் பெறுகின்றனர். இதன் மூலம் மோசடி பரிவர்த்தனைகள், சைபர் குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அதனால், நிதி … Read more

ரிதன்யா தற்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்ககூடாது என கோரிக்கை

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது. அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்த தொழிலதிபதி அண்ணாதுரை மற்றும். இவருடைய மனைவி ஜெயசுதாவின் மகள் ரிதன்யா (வயது 27) வுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி-சித்ராதேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண நிச்சயதார்த்தத்தின் போது தனது மகளுக்கு 300 பவுன் நகை, சொகுசு கார் வாங்கி தருவதாக … Read more

இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு பின்னடைவு ; பாகிஸ்தான் விவகாரம் குறித்து காங்கிரஸ் கருத்து

பெங்களூரு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நிருபா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதுகாக்கும் நாடு. அத்தகைய நாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது தீவிரமான விஷயம். பாகிஸ்தானுக்கு இந்த வாய்ப்பு கிடைக்க விடாமல் தடுப்பதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துள்ளார். பயங்கரவாத நாடான பாகிஸ்தான் உலகின் பாதுகாப்பு புரோக்கராக மாறியுள்ளது. அந்த பதவியில் பேய் அமர்ந்துள்ளது. அந்த நாடு பயங்கரவாதத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி … Read more

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்

பிரதமர் மோடி 5 நாடுகள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். முதலில், கானா நாட்டுக்கு சென்றார். பிரேசில் நாட்டில் நடக்கும் ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்கிறார்.பிரதமர் மோடி, கானா, டிரினிடாட் அண்ட் டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு ஒரு வார கால பயணமாக செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த பயணத்தை அவர் நேற்று தொடங்கினார். டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். முதலில், அவர் கானா சென்றடைந்தார்.கானா அதிபர் ஜான் டிரமனி மஹாமா அழைப்பின்பேரில் … Read more