“ஹபீஸ் சயீத், மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாக். தயார்தான், ஆனால்…” – பிலாவல் பூட்டோ

இஸ்லாமாபாத்: லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு எவ்வித ஆட்சேபனையும் இருக்காது என்று பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான பிலாவல் பூட்டோ, அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் விவாதிக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய அமைப்புகள் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி … Read more

ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி! என்ன சாதனை தெரியுமா?

சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைக்கிறது, ரஜினிகாந்த் படங்களில் முக்கியமான ஒன்றாக மாற உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா?

Kalaignar Magalir Urimai Thogai Online Application : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார்

கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பினராயி விஜயன் சுமார் பத்து நாட்கள் வெளிநாட்டில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அளிக்கப்பட இருக்கும் சிகிச்சை குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சுகாதாரத் துறையில் உள்ள குறைபாடுகள் குறித்து கேரளா சர்ச்சையை சந்தித்து வரும் நேரத்தில், பினராயி விஜயன் அமெரிக்காவுக்குச் சென்றதற்காக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. தவிர, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு அவர் ஆன்லைனில் தலைமை … Read more

20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் தோன்றிய உத்தவ் – ராஜ்தாக்கரே

மும்பை, சிவசேனா கட்சியில் மிகவும் செல்வாக்காக இருந்தவர் ராஜ் தாக்கரே. இவர் பால் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ஆவார். கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனா கட்சியில் பால் தாக்கரேவுக்கு அடுத்த வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் ராஜ் தாக்கரே கட்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார் ராஜ் தாக்கரே. அப்போது முதல் ராஜ் தாக்கரே – உத்தவ் தாக்கரே எலியும் … Read more

கிளப் உலகக்கோப்பை கால்பந்து: செல்சி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பென்சில்வேனியா, கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் காலிறுதி சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி இன்று தொடங்கின. இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் செல்சி – பால்மீராஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செல்சி 2-1 என்ற கோல் கணக்கில் பால்மீராஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. செல்சி தரப்பில் கோல் பால்மர் மற்றும் அகஸ்டின் ஜியாய் தலா ஒரு … Read more

இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை – இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை

லண்டன், இங்கிலாந்தில் உள்ள மேற்கு லண்டனில் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி, சாலையில் சென்று கொண்டிருந்த 20 வயது இளம்பெண்ணை மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அந்த பெண் அவரிடம் இருந்து தப்பி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று புகார் அளித்தார். அந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து அக்டோபர் 23-ந்தேதி பூங்காவில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசாருக்கு … Read more

வானத்தில் டாக்ஸி ஓட்டும் காலம் வந்தாச்சு! 2026 முதல் அமல்..எந்த ரூட்டில் பயணிக்கலாம்?

Dubai Air Taxi Test : துபாயில் முதன்முறையாக வான்வழி டாக்சி அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான டெஸ்ட், வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை: ஜூலை 15-ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை வரும் ஜூலை 15-ம் தேதி சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இம்முகாம் மூலம் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தில், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். முதல்வர் அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள … Read more