ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம் – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பக்கத்தில் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறியுள்ளதாவது: “ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கை இந்தியாவில் முடக்குமாறு அரசு தரப்பில் இப்போது எந்தவித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு காண எக்ஸ் தளத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என அவர் … Read more

TNPL: முதல்முறையாக கோப்பையை வென்ற திருப்பூர் அணி… அடங்கியது திண்டுக்கல்!

TNPL 2025, Idream Tiruppur Tamizhans Champions: டி20 லீக் தொடரான தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரின் 9வது சீசன் கடந்த ஜூன் 5ஆம் தேதி கோவையில் தொடங்கியது. TNPL 2025: 4 நகரங்களில் லீக் சுற்று போட்டிகள் டிஎன்பிஎல் தொடரில் கடந்த 2024ஆம் ஆண்டு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை லைகா கிங்ஸ் அணிகளுடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம்  ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ், … Read more

இந்தியாவின் குற்றத்தலைநகராகபீகாரை மாற்றிய பாஜக : ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக இந்தியாவின் குற்றத்தலைநகராக பீகாரை மாற்றியுள்ளதாக கூறி உள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைத்தளத்தில், ”பாட்னாவில் தொழிலதிபர் கோபால் கெம்காவை வெளிப்படையாக சுட்டுக் கொன்ற சம்பவம், பாஜகவும் நிதிஷ் குமாரும் இணைந்து பீகாரை “இந்தியாவின் குற்றத் தலைநகராக” மாற்றியுள்ளனர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. பீகார் மாநிலம் இன்று, கொள்ளை, துப்பாக்கிச் சூடு மற்றும் கொலையின் நிழலில் வாழ்கிறது. குற்றம் இங்கே புதிய வழக்கமாகிவிட்டது. அரசாங்கம் அங்கு முற்றிலும் … Read more

இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட்: கடைசி நாள் ஆட்டம் தொடக்கம்

பர்மிங்காம், இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தின் (269 ரன்) உதவியுடன் இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஜேமி சுமித் (184 ரன்), ஹாரி புரூக் (158 ரன்) சதம் அடித்தனர். பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய … Read more

பாளையங்கோட்டை: மேம்பாலம் பஸ் நிறுத்தங்களில் இருக்கை வசதிகள் இல்லை – பொதுமக்கள் கோரிக்கை!

திருநெல்வேலி: நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே அமைந்துள்ள செல்லப்பாண்டி மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தங்கள், பயணிகளுக்குத் தேவையான இருக்கை வசதிகள் இல்லாமல் உள்ளன. இதனால் தினசரி பயணிக்கும் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் நெல்லை புதிய பஸ்நிலையம், நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. அம்பை, சுரண்டை, கடையம், செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம் மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் பஸ்கள் இங்கு நின்று … Read more

கீழடி விவகாரத்தில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை: சகாயம் விமர்சனம்

நாமக்கல்: கீழடி விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பாங்கோடு நடந்து கொண்டு வரலாற்றை மறைப்பதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் எழுதிய ‘கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை’ எனும் நூல் வெளியீட்டு விழா நாமக்கல் அருகே லத்துவாடியில் நடைபெற்றது. இதில் சகாயம் கலந்து கொண்டு பேசினார். விழாவைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற லாக்கப் … Read more

வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4ம் இடத்தில் இந்தியா: உலக வங்கி அறிக்கை

புதுடெல்லி: வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வருமான சமத்துவத்துக்கான கினி (Gini Index) குறியீட்டில் இந்தியா 25.5 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் ஸ்லோவாக் குடியரசு 24.1 மதிப்பெண்களும், ஸ்லோவேனியா 24.3 மதிப்பெண்களும், பெலாரஸ் 24.4 மதிப்பெண்களும் பெற்று முதல் மூன்று இடங்களில் உள்ளன. 2011-12 மற்றும் 2022-23 க்கு இடையில் இந்தியாவில் வருமான சமத்துவமின்மை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் உலகளவில் நான்காவது வருமான சமத்துவம் கொண்ட … Read more

இந்திய அணிக்கு வரலாற்று வெற்றி… ஆகாஷ் தீப் அட்டாக்கில் வீழ்ந்தது இங்கிலாந்து!

India vs England, Edgbaston Test: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றிருந்தது. தொடர்ந்து, ஜூலை 2ஆம் தேதி பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. பரபரப்பான இந்த போட்டியில் இங்கிாலந்து அணிக்கு 608 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 16 … Read more

2026 இல்லை 2029 தான் இலக்கு… தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் தே.ஜ. கூட்டணியில் குழப்பம்

2026ல் தே.ஜ.கூ. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். பாஜக பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக 40 முதல் 50 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறினார். அதனால் 2026 நமது இலக்கு இல்லை 2029 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவது தான் நமது இலக்கு என்று பேசினார். தமிழ்நாட்டில் அதிமுக உடன் கூட்டணியை உறுதி செய்துள்ள பாஜக இதுவரை … Read more

லாரி மீது கார் மோதி கோர விபத்து – 4 பேர் பலி

ஜெய்ப்பூர், உத்தரபிரதேசத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணித்தனர். இந்நிலையில், ராஜஸ்தானின் பரன் மாவட்டம் கஜன்புரா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் உடல்நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை … Read more