“பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் நற்சான்றிதழ் வழங்குகிறது” – அமித் ஷா குற்றச்சாட்டு

புதுடெல்லி: “பஹல்காம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று ஏன் கருத வேண்டும்? அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறி இருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்கி உள்ளது.” என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பயங்கரவாதிகள் … Read more

விபத்தில் தப்பிய முதியவர்..ரிவர்ஸில் வந்து காரை ஏற்றிய இளைஞர்! ஷாக்கிங் சிசிடிவி..

Jammu Hit And Run Shocking CCTV : ஒரு வயதானவர், ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டு செல்ல, அவரது வண்டியை லேசாக தட்டிய வாகனம், ரிவர்ஸில் வந்து அவர் மீது ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  

கிராம பஞ்சாயத்துகளில் கடைகள், தொழில் தொடங்க உரிமம் பெறுவது கட்டாயம் -தமிழக அரசு உத்தரவு

Tamil Nadu Latest News: கிராமப்புற கடைகளுக்கு  ரூ.500 முதல் ரூ.30 ஆயிரம் வரை உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 119 வகையான சேவைத் தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது அவசியம்.

நெல்லை ஆணவக் கொலை: "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்" – இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின்குமார் படுகொலை செய்யப்பட்டது குறித்து மாரி செல்வராஜ் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர். இவரது மகன் கவின் குமார் (26). இவர், சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கவின் குமார், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகர், அஷ்டலெட்சுமி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தபோது படுகொலை செய்யப்பட்டார். கவின் குமார் இது … Read more

ஜூலை 31 முதல் Amazon சேல்: அட்டகாசமான ஸ்மார்ட்போன்களில் அதிரடி தள்ளுபடிகள், விவரம் இதோ

Amazon Great Freedom Festival Sale 2025: அமேசான் இந்தியாவின் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை ஜூலை 31 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நேரலையில் தொடங்கவுள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சலுகைகளை எதிர்பார்க்கலாம். பிரைம் உறுப்பினர்களுக்கு ஜூலை 30 ஆம் தேதி ஆரம்ப அணுகல் கிடைக்கும். அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2025  அமேசான் இந்த சேலில் உடனடி வங்கி தள்ளுபடிகள், வட்டி இல்லாத … Read more

இந்தியா வெலியுறவு கொள்கையில் தோல்வி அடைந்துள்ளதா : கனிமொழி வினா

டெல்லி திமுக எம் பி கனிமொழி இந்தியா வெளிய்றவு கொள்கைய்ல் தோல்வி அடைந்துள்ளதா என வினா எழுப்பி உள்ளார் இன்று மக்களவையில் இரண்டாவது நாளாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதம்  நடைபெற்று வருகிறது. இந்த விவாத்தத்தில், திமுக மக்களவை உறுப்பினர் பேசினார். கனிமொழி தனது உரையில், ”பா.ஜ.க முதன்முறையாக எங்கள் மீது நம்பிக்கை வைத்து குழுவின் தலைவர்களாக வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு அளித்ததற்கு நன்றி.  தீவிரவாத தாக்குதலில் உயிர்பலி ஏற்பட்டதால் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் … Read more

'ஜூலை 30' வாழ்வை விழுங்கிய நாளின் பெயரில் உணவகம் – 11 பேரை வயநாடு நிலச்சரிவில் இழந்தவர் சொல்வதென்ன?

நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு பேரழிவு ஏற்பட்டு நாளையுடன் ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் நடுங்கும் கோரமான இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் மண்ணில் புதைந்தனர். கண்ணெதிரிலேயே உறவுகளையும் உடமைகளையும் இழந்து மரணத்தின் விளிம்பில் இருந்து நூலிழையில் உயிர் மீண்ட ஆயிரக்கணக்கான மக்கள் நடைபிணமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நௌஃபால் மீளாத் துயரில் இருந்து மெள்ள மீண்டெழும் ஒருசிலர் முன்மாதிரியாக தங்களின் மறுவாழ்வைத் தொடங்கி … Read more

நெல்லை ஐடி ஊழியர் கொலை வழக்கு: எஸ்.ஐ. தம்பதி சஸ்பெண்ட்

சென்னை: பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் சென்னை ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணம் மற்றும் கிருஷ்ணகுமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்தார். தூத்துக்குடி மாவட்டம், ஆறு முகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (27). இவர், சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கவின் செல்வகணேஷ், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த … Read more

பஹல்காம் தாக்குதலுக்காக அமித் ஷா ஏன் ராஜினாமா செய்யவில்லை? – பிரியங்கா காந்தி

புதுடெல்லி: பஹல்காமில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருப்பதை உளவுத்துறை ஏன் கண்டறியவில்லை?. இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் ராஜினாமா செய்யவில்லை என மக்களவையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நடந்து வரும் விவாதத்தில் இன்று பங்கேற்று பேசிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, “பாலைவனங்கள், அடர்ந்த காடுகள், பனி மலைகள் ஆகியவற்றில் நம் நாட்டைப் பாதுகாக்கும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும், ஒவ்வொரு நொடியும் தங்கள் … Read more

தாய்லாந்து மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சாடுசக் பகுதியில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த காய்கறி சந்தையில் மக்கள் வழக்கம்போல் நேற்று காலையில் பரபரப்பாகப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாவலர்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பின்னர் கொலையாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை … Read more