‘நீங்கள் ஒரு காமெடி பீஸ்’: வழக்கறிஞர் வாஞ்சிநாதனை கடுமையாக சாடிய நீதிபதிகள்…

மதுரை: வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கை தலைமை நீதிபதிக்கு  உயர்நீதிமன்றம் மதுரை அமரர்வு பரிந்துரைத்தது. நீதிபதிகளையும், நீதித்துறையையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற அமர்வு பரிந்துரை செய்துள்ளது. வாஞ்சிநாதன் மீதான நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கைகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவில்லை என்று கூறிக்கொண்ட போதிலும், தீர்ப்புகளை விமர்சிப்பதற்கும் தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் இடையிலான கோடு கடந்துவிட்டதாக நீதிமன்றம் … Read more

“எல்லாருமே நமக்கு பிரண்ட்ஸ் தான்; திமுக-வை தவிர..!” – ஜெயகுமாருடன் ஓர் உரையாடல்

விகடன் மாணவர் பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்கள் சிலர், பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து அவர்களின் கேள்விகளை முன்வைத்தனர்… இனி கேள்விகளும் அவரின் பதில்களும்…! “2026 இல் உங்களுடைய தேர்தல் வியூகம் எப்படி இருக்கு?” “தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளே பெரிய கட்சிகள். ஒன்று அதிமுக , இன்னொன்று திமுக. அதனால திமுகவை வீட்டுக்கு அனுப்பனும்னா, அது அதிமுகவால தான் முடியும். வாக்குகள் சிதையாமல் எங்களுக்கு மக்கள் ஓட்டு போடும்பொழுது கண்டிப்பாக … Read more

நெல்லை: காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பாப்பாகுடியில் ரஸ்தா எந்த இடத்தில் 17 வயது சிறுவன் ஒருவனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் சம்பவ இடத்துக்குச் … Read more

நிக்கோபர் தீவுகளில் 6.5 ரிக்டரில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை

புதுடெல்லி: இந்தியாவின் நிக்கோபர் தீவுகள் பகுதியில் இன்று (ஜூலை 29) அதிகாலை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. மேற்கு இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், சபாங்கிலிருந்து மேற்கு-வடமேற்கே 259 கிலோமீட்டர் தொலைவில், இன்று நள்ளிரவு 12: 12 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 6.5 … Read more

நியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு: காவலர் உட்பட 5 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவல் அதிகாரி ஒருவர் உட்பட சுமார் 5 பேர் உயிரிழந்தனர். பலர் இதில் காயமடைந்த நிலையில் இந்த தாக்குதலை நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு கொண்டதாக தகவல். நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள 44 மாடிகள் கொண்ட அலுவலக கட்டிடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இயங்கும் அந்த கட்டிடத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த மாலை நேரமான சுமார் 6.30 மணி அளவில் … Read more

இந்தியாவில் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் 6 முக்கிய மாற்றங்கள்! என்ன என்ன தெரியுமா?

ஜூலை மாதம் முடியவுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவில் நிதி தொடர்பான பல்வேறு மாற்றங்கள் வர உள்ளது. என்ன என்ன மாற்றங்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

‘ஆஹா கல்யாணம்’ பவி டீச்சருக்கு இன்று பிறந்த நாள்!!!

Happy birthday Pavi Teacher: ஜூலை 29 ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகை பிரிகிதா சாகா, தமிழ்-தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து வரும் ஒரு பிரபலம். இவர் இயல்பு வாழ்வில் இருப்பது போலவெ நடிப்பிலும் இயல்பு மாறாமல் இருப்பதால், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்தது போதும்? நாளை ஓ. பன்னீர்செல்வம் முக்கிய முடிவு!

NDA Alliance In Tamil Nadu: தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது புதிய கூட்டணி அமைப்பதா? என்பது குறித்து ஓ. பன்னீர்செல்வம் நாளை அறிவிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.

12ம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரி பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்! அமைச்சர் கோவி செழியன்

செனை; 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரி இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்  என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார். 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தவறிய மாணாக்கர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இக்கல்வியாண்டே (2025-26) இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  … Read more

Hyderabad: 15 மாத மகனை பஸ்டாண்டில் அனாதையாக விட்டு, இன்ஸ்டா காதலனுடன் பைக்கில் பறந்த பெண்..

`சமூக வலைத்தளங்கள் மற்றும் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே காதலிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதோடு திருமணம் தாண்டிய உறவுகளும் அதிகரிக்க தொடங்கிவிட்டது’ என்று பலரும் கவலை தெரிவித்து வரும் நிலையில், ஹைதராபாத் அருகே நடந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஹைதராபாத் அருகில் உள்ள நல்கொண்டாவில் இளம்பெண் ஒருவர் காதலனுக்காக தனது 15 மாத குழந்தையை பேருந்து நிலையத்தில் அனாதையாக விட்டுவிட்டு சென்றது தெரிய வந்தது. நல்கொண்டா பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த … Read more