பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்! வீடியோ

டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவை நடவடிக்கையையும் முடக்கினர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,  பீகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வங்கதேசம், மற்றும்  ரோகிங்கியா உள்பட சில நாடுகளை சேர்ந்த அகதிகள் போலியாக வாக்குரிமை பெற்றுள்ளதை நீக்கும் வகையில்,  22 ஆண்டுகளுக்குப் பின் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர … Read more

பாஜகவும் திமுகவும் இணைந்து நடத்துவது அரசியல் ஆதாய நாடகம்: விஜய் விமர்சனம்

சென்னை: “மறைமுகமாக ஓரணியில் உள்ள பாஜகவும் திமுகவும் இணைந்து நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை இனியும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்” என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்று பெயர் பெற்ற, கடல் கடந்து படை நடத்தி, இலங்கை முதல் இந்தோனேசியா வரை தெற்காசியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி புரிந்த ஒப்பற்ற பேரரசன், மாபெரும் வெற்றிச் … Read more

கர்நாடகாவில் அதிர்ச்சி: கடந்த 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை

பெங்களூரு: கர்நாடகாவில் 2024 முதல் இதுவரையிலான 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மாநில காங்கிரஸ் அரசை பாஜகவும், மத்திய பாஜக அரசை காங்கிரஸும் மாறி மாறி குற்றம்சாட்டியுள்ளன. கர்நாடகாவில் 2024 முதல் 2025 ஆம் ஆண்டின் இப்போது வரையிலான 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவற்றில், 825 விவசாயிகள் விவசாயக் காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 138 பேர் வேறு காரணங்களுக்காக … Read more

‘எனது தலையீடு இல்லையென்றால்…’ – இந்தியா – பாக். போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் ரிப்பீட்டு

லண்டன்: தனது தலையீடு இல்லையென்றால் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் தொடர்ந்திருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். தற்போது பிரிட்டன் சென்றுள்ள டொனல்டு ட்ரம்ப், அந்த நாட்டின் பிரதமர் ஸ்டார்மரை ஸ்காட்லாந்தில் உள்ள டர்ன்பெர்ரியில் சந்தித்தார். அந்த சந்திப்புக்கு முன்னதாக உலக நாடுகளுக்கு இடையிலான போர் குறித்து ட்ரம்ப் பேசினார். “நான் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் ஆறு பிரதான போர் நம்மை சுற்றி தொடர்ந்திருக்கும். இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான … Read more

பட்ஜெட் விலையில் லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்தியாவில் லாவா நிறுவனத்தின் பிளேஸ் டிராகன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இரண்டு … Read more

அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இப்போதும் விண்ணப்பிக்கலாம் – இந்த மாணவர்களுக்கு மட்டும்!

Tamil Nadu Government: 12ஆம் வகுப்பு துணைத் தேர்வில் வெற்றி அடைந்தவர்கள் இந்த கல்வியாண்டிலேயே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

விளையாடிக்கொண்டிருக்குபோதே பேட்மிண்டன் வீரர் மரணம்! தெலுங்கானாவில் அதிர்ச்சி

தெலுங்கானா மாநிலம் நாகோலில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் சக வீரர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது குண்ட்லா ராகேச்ஷ் என்ற வீரர் உயிரிழந்தார். இவருக்கு வயது 25 மட்டுமே. இவர் சக வீரர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, ராகேஷ் சக வீரர் அடித்த இறகை மிஸ் செய்திருக்கிறார். அதை குனிந்து எடுக்கும்போது அவர் திடீரென கீழே விழுந்திருக்கிறார். இதில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  ராகேஷின் உயிரை காப்பாற்ற சக வீரர்கள் முயன்றும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர் கீழே விழந்தவுடன் … Read more

லோக்சபாவில் இன்று ஆபரேஷன் சிந்தூர் விவாதம்: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷத்தால் லோக்சபா, ராஜ்யசபா பகல் 2மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் கோஷம் காரணமாக இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பெரும்  அமளிக்கு மத்தியில் முன்னதாக பகல் 12மணி வரை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் உருவாக்கப்பட்ட கோஷம் காரணமாக,  மக்களவை, ராஜ்யசபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய சில நிமிடங்களில் இரு அவைகளும் … Read more

Gaza: பாலஸ்தீனம் ஐநாவில் அங்கீகரிக்கப்படுமா… பிரான்ஸின் நகர்வும், அமெரிக்காவின் அழுத்தமும்!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான போர் மனிதாபிமான கேள்விகளைத் தீவிரமாக எழச் செய்துள்ளது. சமீபத்தில் பிரான்ஸ் முதல் ஜி 7 நாடாக, ஐநாவில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம் எனத் தெரிவித்தது. தொடர்ந்து கனடாவும் இதே முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக வாதிடுபவர்களால் நேர்மறையானதாக, தீர்வை நோக்கிய முன்னேற்றமாக இவை பார்க்கப்படுகிறது. ஐநா ஐநாவில் பாலஸ்தீனம்! ஐநாவில் ஒரு நாடு அங்கீகரிக்கப்படப் பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் அவசியம். பாலஸ்தீனம் 2011ம் … Read more