Dhanush: சூடு பிடிக்கும் 'இட்லி கடை'. மீண்டும் ஒரு இந்திப் படம் – தனுஷ் படங்கள் பரபர அப்டேட்

தனுஷுக்கு இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல். தமிழ்,தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து பல மொழிகளில் ஓடிக்கொண்டிருந்தார். சமீபத்தில் ‘குபேரா’ திரைக்கு வந்தது. பாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. இந்தப் படம் இந்தாண்டு நவம்பர் இறுதியில் வெளியாகும் என்கிறார்கள். தமிழில் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படம், அக்டோபர் முதல் தேதியன்று வெளியாகிறது. ஆக, இந்தாண்டில் தனுஷுக்கு மூன்று படங்கள் என வைத்துக்கொள்ளலாம். இந்தி படப்பிடிப்பில் தனுஷ் … Read more

Amazon Prime Day 2025: அசத்தல் தள்ளுபடிகளுடன் வரும் அமேசான் சேல், டேட்ஸ் இதுதான்

Amazon Prime Day 2025: ஆன்லைன் விற்பனை தளமான அமேசான், அமேசான் பிரைம் டே 2025 -க்கான தேதிகளை அறிவித்துள்ளது. மேலும் இந்த முறை எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சேல் பெரியதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இந்த ஷாப்பிங் நிகழ்வு ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை நடைபெறும். இதன் மூலம் பிரைம் உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் இடைவிடாத சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் புதிய தயாரிப்பு வெளியீடுகள் கிடைக்கும். Amazon Fulfillment Centres அடுத்த … Read more

அஜித்குமார் உயிரிழப்பு – வலிப்பு என எஃப்ஐஆரில் பதிவு? சிபிஐ விசாரணைக்கு மாற்ற எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி, விஜய் வலியுறுத்தல்…

சென்னை: சிவகங்கை காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார்  உயிரிழப்புக்கு வலிப்பு நோய் காரணம்  என எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, இந்த கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதுபோல, காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித் மரணம் குறித்து,   இரட்டை வேட முதல்வர் ஆட்சியில் நியாயம் கிடைக்காது என்றும், இந்த  காவல் நிலைய கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் … Read more

ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட சாலையின் நடுவே மரங்கள் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

பாட்னா, பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் பாட்னா- கயா மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரூ.100 கோடி செலவில் புதிய சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 7½ கி.மீ. தூரம் அமையும் இந்த சாலையில் நடுவில் மரங்கள் இடையூறாக இருந்தது. இதையடுத்து அந்த மரங்களை அகற்றும்படி வனத்துறையிடம் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்தது. ஆனால், இதற்கு பதிலாக 14 எக்டேர் நிலம் ஒதுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு வனத்துறையினர் கோரிக்கை வைத்தனர். இது ஏற்கப்படவில்லை. இதனால், … Read more

டிரம்பை நேசிக்கிறோம்; பாலஸ்தீனிய மக்கள் கோஷம் – காரணம் என்ன?

வாஷிங்டன் டி.சி., காசா பகுதியில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எனினும், நாங்கள் பயங்கரவாதிகளையே இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துகிறோம் என இஸ்ரேல் கூறுவதுடன், மக்கள் அடர்த்தியான பகுதிகளில் அவர்கள் (ஹமாஸ் அமைப்பினர்) செயல்படுகின்றனர் என்றும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீது … Read more

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

யமஹா நிறுவனத்தின் RayZR 125 Fi ஹைபிரிட் மற்றும் RayZR 125 Fi ஹைபிரிட் ஸ்டீரிட் ரேலி என இரு மாடல்களுக்கும் ரூ.7,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் தள்ளுபடி, கூடுதலாக 10 வருட வாரண்டி என ஒட்டுமொத்தமாக ஆன்ரோடு விலையில் 10,010 வரை சிறப்பு சலுகையை 70வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. யமஹா மோட்டார் துவங்கப்பட்டு 70 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் இதனை கொண்டாடும் வகையில் இந்த சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. வழக்கமாக … Read more

பள்ளி மாணவன் உட்பட 2 பேர் கொலை… இரவில் நடுங்கிய திருவண்ணாமலை; பின்னணி என்ன?

திருவண்ணாமலை, வேடியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராம் (வயது 37). நேற்று இரவு காந்தி நகர் மைதானம் அருகில் ராம் இருந்தபோது, அங்கு வந்த 6 பேர்கொண்ட கும்பல், ராமுவைச் சூழ்ந்துகொண்டு கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்து விழுந்த ராம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, தாக்குதல் நடத்திய கும்பலும் அங்கிருந்து ஓடிவிட்டது. கொலை இது குறித்துத் தகவலறிந்து சென்ற திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையப் போலீஸார், ஆட்டோ ஓட்டுநர் ராமுவின் உடலை … Read more

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் இபிஎஸ்

சென்னை: “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்.” என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், … Read more

24 கேரட் தங்கத்தில் ஜொலிக்கும் வீடு

இந்தூர்: கர்​நாடக தலைநகர் பெங்​களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரி​யம் சரஸ்​வத். இவர் உள்​நாடு மற்​றும் வெளி​நாடு​களில் சுற்​றுப் பயணம் செய்​து, புது​மை​யான வீடு​களை வீடியோ எடுத்து சமூக வலை​தளங்​களில் பதி​விட்டு வரு​கிறார். இந்த வரிசை​யில் மத்​திய பிரதேசம் இந்​தூரில் 24 கேரட் தங்​கத்​தால் அலங்​கரிக்​கப்​பட்ட வீடியோவை பிரி​யம் சரஸ்​வத் நேற்று முன்​தினம் தனது சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டார். இந்த வீடியோ அனைத்து சமூக வலை​தளங்​களி​லும் வைரலாக பரவி வரு​கிறது. யூ டியூபர் பிரி​யம் வெளி​யிட்ட வீடியோ​வின் … Read more

இந்த வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல் கிடையாது! மாநில அரசு அறிவிப்பு!

பழைய வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல்கள் வழங்கப்படாது என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதனால் பழைய வாகனங்களை வைத்திருக்கும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.