20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் தோன்றிய உத்தவ் – ராஜ்தாக்கரே

மும்பை, சிவசேனா கட்சியில் மிகவும் செல்வாக்காக இருந்தவர் ராஜ் தாக்கரே. இவர் பால் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ஆவார். கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனா கட்சியில் பால் தாக்கரேவுக்கு அடுத்த வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் ராஜ் தாக்கரே கட்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார் ராஜ் தாக்கரே. அப்போது முதல் ராஜ் தாக்கரே – உத்தவ் தாக்கரே எலியும் … Read more

கிளப் உலகக்கோப்பை கால்பந்து: செல்சி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பென்சில்வேனியா, கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் காலிறுதி சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி இன்று தொடங்கின. இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் செல்சி – பால்மீராஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செல்சி 2-1 என்ற கோல் கணக்கில் பால்மீராஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. செல்சி தரப்பில் கோல் பால்மர் மற்றும் அகஸ்டின் ஜியாய் தலா ஒரு … Read more

இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை – இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை

லண்டன், இங்கிலாந்தில் உள்ள மேற்கு லண்டனில் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி, சாலையில் சென்று கொண்டிருந்த 20 வயது இளம்பெண்ணை மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அந்த பெண் அவரிடம் இருந்து தப்பி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று புகார் அளித்தார். அந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து அக்டோபர் 23-ந்தேதி பூங்காவில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசாருக்கு … Read more

வானத்தில் டாக்ஸி ஓட்டும் காலம் வந்தாச்சு! 2026 முதல் அமல்..எந்த ரூட்டில் பயணிக்கலாம்?

Dubai Air Taxi Test : துபாயில் முதன்முறையாக வான்வழி டாக்சி அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான டெஸ்ட், வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை: ஜூலை 15-ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை வரும் ஜூலை 15-ம் தேதி சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இம்முகாம் மூலம் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தில், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். முதல்வர் அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள … Read more

இந்தியாவுக்கு முதல் 3 அபாச்சி ஹெலிகாப்டரை வழங்குகிறது அமெரிக்கா

புதுடெல்லி: இந்திய ராணுவத்துக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்ட 6 ஹெலிகாப்டர்களில், முதல் 3 ஹெலிகாப்டர்கள் இம்மாதம் விநியோகிக்கப்பட உள்ளன. அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அபாச்சி கன்ஷிப்ஸ் ரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கிறது. இதில் இயந்திர துப்பாக்கி, வானிலிருந்து தரை இலக்குகளை மற்றும் வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் குண்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இது ‘வானில் இயங்கும் டேங்க்’ என அழைக்கப்படுகிறது. இந்திய விமானப் படைக்கு 22 அபாச்சி ஹெலிகாப்டர்கள் ரூ.13,952 கோடிக்கு கடந்த 2015-ம் … Read more

12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்து போட்டுவிட்டேன்: டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தினார். இதற்கு அனைத்து நாடுகளும் கடும் அதிருப்தி தெரிவித்தன. இதையடுத்து, பல்வேறு விதமான வரி விகிதங்களை மாற்றி 90 நாட்களுக்கு தற்காலிக அடிப்படை வரியாக 10%-ஐ நிர்ணயித்து ட்ரம்ப் உத்தரவிட்டார். இந்த காலக்கெடு முடிவடைவதற்குள் அமெரிக்கா உடன் … Read more

புதிய கட்சியை அறிமுகம் செய்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

தமிழ் மாநில பகுஜன் சபாஷ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார் ஆம்ஸ்டாங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்: புதிய கட்சிக்கொடியும் அறிமுகம் செய்து வைத்தார்.

ஆர்யா – தினேஷின் மாஸ் ஆக்‌ஷன்; புதிய டீமுடன் பா.ரஞ்சித்… பரபர படப்பிடிப்பு – 'வேட்டுவம்' அப்டேட்!

விக்ரமின் ‘தங்கலான்’ படத்திற்கு பின், ‘வேட்டுவம்’ படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். தமிழகத்தின் பல இடங்களில் அதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் பா.ரஞ்சித் 75 வது கான் திரைப்பட விழாவின் போது ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.ரஞ்சித் வெளியிட்டிருந்தார். புலி ஒன்றின் ஓவியமும் அதில் இடம்பெற்றிருந்தது. மற்றபடி படம் குறித்த விஷயங்கள் அதில் இடம் பெறவில்லை. அவர் ‘வேட்டுவம்’ படத்தை தொடங்குவார் என எதிர்பார்த்த போது தான் விக்ரமை வைத்து ‘தங்கலா’னை … Read more