இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | August – 2 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you’re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the … Read more

“மக்களுக்காக குரல் கொடுக்கும் அதிமுகவுக்கு பாஜக துணை நிற்கிறது” – எடப்பாடி பழனிசாமி பேச்சு

கோவில்பட்டி: “மக்கள் பிரச்சினைகளுக்காக முதன்முதலாக குரல் கொடுப்பது அதிமுகதான். எங்களுக்கு துணை நிற்பது பாஜக” என கோவில்பட்டியில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையில் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு 10.15 மணிக்கு … Read more

நாட்டின் தொடர்பு மொழியாக சமஸ்கிருதத்தை மாற்ற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து

நாக்பூர்: நமது நாட்டின் அனைத்து மொழிகளுக்கும் மூலம் சமஸ்கிருதம் எனத் தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டின் தொடர்பு மொழியாக சமஸ்கிருதத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நாக்பூரில் உள்ள கவி கல்குரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அபினவ் பாரதி சர்வதேச கல்விக் கட்டிடத்தை இன்று திறந்துவைத்துப் பேசிய மோகன் பாகவத், “சமஸ்கிருதத்தை புரிந்து கொள்வதற்கும் அதில் உரையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் சமஸ்கிருத மொழியை கற்றுக்கொண்டேன். ஆனால், என்னால் சரளமாகப் பேச … Read more

71st National Film Awards Full List: சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, கலைஞர்கள்; முழு பட்டியல் இதோ!

71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 71வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கின்றன. 12th Fail படத்தில்… பல முக்கியமான திரைப்படங்கள் இந்த விருதுக்கான போட்டியில் இடம்பெற்றன. அதில் விருது வென்றவர்களின் பட்டியல் இதோ! விருதுகள்: சிறந்த படம் 12th Fail சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் Rocky Aur Rani Kii Prem Kahaani சிறந்த இயக்குநர் Sudipto sen (Kerala story) … Read more

சனிக்கிழமை தோறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்! அரசு செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் தகவல்…

சென்னை: நாளை (ஆகஸ்டு 2) தமிழக முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படும்   நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் வாரத்தின் சனிக்கிழமை தோறும் நடைபெறும் என தமிழ்நாடு  அரசு செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இlங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில், திமுக அரசின்  செய்தித் தொடர்பாளர்களாக  ராதாகிருஷ் ணன், ககன்தீப்சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் … Read more

'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை – 01.08.2025 முக்கிய செய்திகள்!

சௌதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்ததில் 23 பேர் காயமடைந்தனர். கேரளா பள்ளிகளில் ஒரு மாத விடுமுறையை வெயில் காலத்துக்கு பதில் மழைக் காலத்தில் அளிப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. பேராசிரியர், கல்லூரி முதல்வர், துணை வேந்தர், கல்வியாளர் என கல்வித்துறையில் பல்வேறு முகங்களைக் கொண்ட வசந்தி தேவி இன்று காலமானார். வசந்தி தேவி ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கும் நிலையில், “பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசினேன். தொலைபேசியில் பேசிய நிலையிலும் வெளியேறும் … Read more

ஒரு கி.மீ. நடந்து வந்து குடிநீர் எடுக்கிறோம்: எடப்பாடியிடம் புகார் தெரிவித்த கிராம பெண்கள் 

கோவில்பட்டி: மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டியில் இன்று மாலை 6 மணியளவில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு எட்டயபுரம், எப்போதும்வென்றான், குறுக்குச்சாலை வழியாக ஓட்டப்பிடாரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இரவு 7 மணியளவில் குறுக்குச்சாலையை கடந்து வேலாயுதபுரம் கிராமம் அருகே அவரது வாகனம் வந்து கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் பெண்கள் கூட்டமாக நின்று தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த பெண்கள் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை பார்த்தவுடன் கைகளை உயர்த்தி காண்பித்தனர். இதையடுத்து … Read more

ஜார்க்கண்டில் வீட்டுக்குள் நுழைந்த புலியை பாதுகாப்பாக மீட்க உதவிய தந்தை, மகளுக்கு விருது!

ராஞ்சி: தங்கள் வீட்டுக்குள் நுழைந்த புலியை பாதுகாப்பாக மீட்க வனத்துறைக்கு உதவிய நபர் மற்றும் அவரது மகளை ஜார்க்கண்ட் வனத்துறை பரிசுத்தொகை வழங்கி பாராட்டியுள்ளது. முரி காவல் நிலையப் பகுதியில் உள்ள மர்து கிராமத்தில் உள்ள புரந்தர் மஹ்தோ என்பவரின் வீட்டுக்குள் கடந்த ஜூன் 25 ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் ஒரு ஆண் புலி நுழைந்தது. இதனை அறிந்த மஹ்தோவின் மகள் சோனிகா குமாரி மற்றும் மற்றொரு பெண் தந்திரமாக வீட்டை விட்டு வெளியேறினர். … Read more

71st National Film Awards: 12th fail, M S பாஸ்கர், ஊர்வசி, GV, ஷாரூக்; தேசிய விருதுகள் அறிவிப்பு!

71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 71வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கின்றது. இதில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றிருக்கிறது. சிறந்த திரைக்கான விருதையும் பெற்றிருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற்றிருக்கிறார். ‘வாத்தி’ பட பாலுக்காக சிறந்த இசையப்பாளர் விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார். சிறந்த படமாக ’12th Fail’ தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. சிறந்த … Read more

ரூ.3000 கோடி கடன் மோசடி: தொழிலதிபர் அனில் அம்பானி வரும் 5ந்தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

டெல்லி: ரூ.3,000 கோடி கடன் மோசடி தொடர்பாக பிரபல தொழிலதிபர்களில் ஒருவரானவரும், இந்தியாவின் டாப் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் சகோதரருமான  தொழிலதிபர் அனில் அம்பானி வரும் 5ந்தேதி  அமலாக்கத்துறை  அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அனில் அம்பானி நிறுவனம்,  யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூ.3,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்மீதான  பண மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. முன்னதாக, கடந்த 2017 முதல் … Read more