தட்கல் முன்பதிவில் சீக்கிரம் ரயில் டிக்கெட் கிடைக்க வேண்டுமா?

How to Link Aadhaar with IRCTC for Tatkal Ticket Booking : இந்திய ரயில்வே, தட்கல் டிக்கெட் முன்பதிவு வசதியைப் பெற, பயணிகள் தங்கள் ஆதார் எண்ணை IRCTC கணக்குகளுடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், முன்பதிவு அமைப்பின் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், தட்கல் ஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், உண்மையான பயணிகளுக்கு தட்கல் முன்பதிவில் டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய ரயில்வே இந்த நடைமுறையை கட்டாயமாக்கியுள்ளது. முன்பதிவு முகவர்கள், தட்கல் முன்பதிவு தொடங்கும் முதல் 30 நிமிடங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய இப்போது தடை செய்யப்பட்டுள்ளனர். இதனால், சாதாரண பயணிகளுக்கு தட்கல் டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அந்தவகையில், தட்கல் ரயில் டிக்கெட் புக் செய்ய நீங்கள் இன்னும் உங்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், IRCTC-ல் ஆதார் எண்ணை எவ்வாறு இணைத்து, KYC நிறைவு செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

IRCTC கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி?

IRCTC-ல் லாகின் செய்யவும்: அதிகாரபூர்வ IRCTC போர்ட்டலான http://www.irctc.co.in-க்குச் சென்று, உங்களின் பதிவு செய்யப்பட்ட பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.

உங்கள் புரொபைல் பக்கத்துக்கு செல்லவும்: “My Account” மெனுவுக்குச் சென்று, “My Profile” என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆதார் KYC-ஐ தேர்ந்தெடுக்கவும்: கிடைக்கும் பட்டியலிலிருந்து “Aadhaar KYC” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆதார் தகவலை உள்ளிடவும்: உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு, UIDAI மூலம் உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க IRCTC-க்கு அனுமதி அளிக்கும் பெட்டியில் டிக் செய்யவும்.

OTP சரிபார்ப்பு: ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். அந்தக் குறியீட்டை உள்ளிட்டு, “Verify” என்பதைக் கிளிக் செய்யவும்.

Submit செய்யவும்: உங்கள் விவரங்கள் வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் KYC தகவல் திரையில் தோன்றும். ஆதார் இணைப்பை இறுதி செய்ய “Submit” என்பதைக் கிளிக் செய்யவும்.

சரிபார்ப்பு நிலையை சரிபார்க்கவும்: ஆதார் வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்டதா என்பதைச் சரிபார்க்க, “My Account” ஆப்சனுக்கு கீழ் உள்ள “Authenticate User” பகுதிக்குச் செல்லவும்.

IRCTC-யில் ஆதாரை இணைக்கத் தேவையானவை – உங்கள் IRCTC கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கு முன், பின்வரும் தகவல்கள் மற்றும் ஆவணங்கள் உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:

– உங்கள் IRCTC லாகின் விவரங்கள் (பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்)
– உங்கள் ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை
– சரிபார்ப்புக்கான OTP பெறுவதற்கு, உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்

IRCTC-யுடன் ஆதாரை இணைப்பதன் நன்மைகள்

உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட பிறகு உங்களால் விரைவாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

மாதந்திர டிக்கெட் ஒதுக்கீடு: ஆதார் சரிபார்ப்பு இல்லாத பயனர்கள் ஒரு மாதத்திற்கு 12 ரயில் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஆதார்-IRCTC இணைப்பை நிறைவு செய்த பிறகு, இந்த வரம்பு மாதத்திற்கு 24 டிக்கெட்டுகளாக அதிகரிக்கப்படுகிறது. இது அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும், பெரிய குடும்பங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.