ஐபோன் யூசர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் வைத்த ஆப்பு! சிம் கார்டு இல்லையா?

Iphone 17 Air Launch: ஆப்பிள் செப்டம்பர் 9ஆம் தேதி தனது புதிய iPhone 17 சீரிஸ் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.  Add Zee News as a Preferred Source புதிய வடிவமைப்புகள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் என்று பல புதிய அம்சங்களை இதில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், iPhone 17-ல் SIM கார்டு தட்டு இல்லாமல், eSIM-ல் மட்டும் போடப்படுமா என்ற தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் SIM கார்டு தட்டு இல்லை: MacRumors அறிக்கையின் … Read more

‘டெட்’ கட்டாயம்: ஆசிரியர்கள் 5ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘டெட் தேர்வு’ எழுதி தேர்ச்சி பெற வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: ஆசிரியர் பணிக்கு ‘டெட்’ தேர்வு கட்டாயம்   என்பதை உறுதிபடுத்தி உள்ள உச்சநீதிமன்றம்,  ஆசிரியர்கள்  பணியில் தொடர தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில்,  5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் தேர்வு எழுத வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளதுடன்,  தேர்ச்சி பெறாவிடில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்று  ஏற்கனவே சென்னை … Read more

3 மனைவிகளை கைவிட்ட நபருடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்த இளம்பெண்; கடைசியில் நேர்ந்த கொடூரம்

பெங்களூரு, கர்நாடகாவின் பெங்களூரு நகரை சேர்ந்தவர் விட்டல். வாடகை கார் ஓட்டுநரான இவர் 3 பேரை திருமணம் செய்து பின்னர் அவர்களை விட்டு பிரிந்திருக்கிறார். இந்நிலையில், அவருடன் வனஜாக்சி (வயது 35) என்ற பெண்ணுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இவருக்கும் இதற்கு முன்பு 2 முறை திருமணம் நடந்துள்ளது. அவரும் 2 கணவர்களையும் விட்டு விட்டு தனியாக வாழ்ந்திருக்கிறார். இந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். சில ஆண்டுகளாக … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து காலவரையற்ற இடைவெளி எடுக்கும் இங்கிலாந்து ஆல் ரவுண்டர்

லண்டன், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ஜேமி ஓவர்டான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து காலவரையற்ற இடைவெளி எடுப்பதாக அறிவித்துள்ளார். இவர் கடைசியாக இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட் தொடரின் 5-வது போட்டியில் விளையாடினார். இது குறித்து பேசிய அவர், “மிகவும் யோசித்த பிறகு, நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட் எனது தொழில்முறை வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இதுவரை விளையாட்டில் எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புக்கும் நுழைவாயிலாக … Read more

பாகிஸ்தான் பிரதமரை கண்டுகொள்ளாத சீன அதிபர்

பீஜிங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தநிலையில், சீனாவின் தியான் ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இதில் சீனாவின் நீண்ட கால நண்பனாக கருதப்பட்ட பாக்., பிரதமரை, சீன அதிபர் கண்டுகொள்ளாமல் சென்ற … Read more

Ramya: `ஆபாச மெசேஜ், பாலியல் வன்கொடுமை மிரட்டல்' – நடிகை ரம்யா புகாரில் 12 பேர் கைது!

கன்னட நடிகர் தர்ஷன் தன் ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற ஜாமீனை விமர்சித்தவர்களில் ஒருவர் கன்னட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ரம்யா. தொடர்ந்து எழுந்த விமர்சனங்களாலும் சில சட்ட சிக்கல்களாலும் நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், நடிகை ரம்யாவுக்கு நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் ஆபாசமான செய்திகளை அனுப்பியும், … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை 6 நாட்கள் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (செப்.2) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும், நாளை மறுதினமும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு … Read more

“வாக்காளர் அதிகார யாத்திரைக்கு மிகப் பெரிய வரவேற்பு!” – தேஜஸ்வி யாதவ் விவரிப்பு

பாட்னா: தேர்தல் ஆணையம் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டினார். வாக்காளர் அதிகார யாத்திரையின் இறுதி நாளான இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “வாக்காளர் அதிகார யாத்திரையின்போது கிடைத்த ஆதரவு மிகப் பெரியது. மக்கள் பிஹாரில் இருந்து தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தை அரியணையில் இருந்து அகற்றுவார்கள். இந்திய தேர்தல் ஆணையம் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. நாட்டு மக்களிடம் பாஜக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவர்களை அதிகாரத்தில் … Read more

எஸ்சிஓ உச்சிமாநாடு பிரகடனத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம்

தியான்ஜின்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ ) பிரகடனத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்தது. இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் … Read more

வெற்றிமாறன் தயாரிப்பு நிறுவனத்தை மூட என்ன காரணம்? – ஷாக்கில் கோலிவுட்

Vetrimaran Latest News: Bad Girl திரைப்படத்தோடு தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.