ஓய்விலிருந்து மீண்டும் களத்திற்கு திரும்பும் பிரபல கிரிக்கெட் வீரர்.. வேறு நாட்டுக்காக விளையாட முடிவு!

நியூசிலாந்து அணியின் முன்னாள் முக்கிய பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் ராஸ் டெய்லர். இவர் 2022 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். நியூசிலாந்து அணிக்காக அவர் 112 டெஸ்ட், 236 ஒருநாள், 102 டி20 போட்டிகளில் கலந்துகொண்டு ரன்களில் பெரும் சாதனைகளை செய்துள்ளார். குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் 7,683 ரன்கள் அசத்திய அவர், டெஸ்ட் போட்டிகளில் கேன் வில்லியம்சனுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். Add Zee News as a Preferred Source 41 வயதில் … Read more

திமுக கூட்டணிக் கட்சி என்றால் ரவுடித்தனத்தில் ஈடுபடலாமா? அண்ணாமலை

சென்னை: திமுக கூட்டணிக் கட்சி என்றால் டிஜிபி அலுவலக வாயிலில் ரவுடித்தனத்தில் ஈடுபடலாமா?  ஏர்போர் மூர்த்திமீதான விசிக தாக்குதலை சுட்டிக்காட்டி பாஜக மாநில முன்னாள் தலைவர்  அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து  அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,   புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், அண்ணன் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, காவல்துறையினர் கண்முன்னே, விசிக கட்சியினர் தாக்குதல் நடத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயக நாட்டில், எதிர்க்கருத்தை எதிர்கொள்ள இயலாத கோழைகள்தான், … Read more

ஐதராபாத்தில் ரூ.12,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் – ஐ.டி. ஊழியர் உள்பட 12 பேர் கைது

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு அதிக அளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், தானே மாவட்டத்தின் மிரா ரோடு காவல் நிலைய போலீசார், தெலுங்கானா காவல்துறையுடன் இணைந்து ஐதராபாத் செராமல்லி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, ஒரு தனியார் ரசாயன தொழிற்சாலையில் ரகசியமாக போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அங்கு அதிகபட்சமாக மெபட்ரோன் என்ற போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வங்காளதேசத்தைச் சேர்ந்த … Read more

ஆசிய கோப்பை: பாக்.உடன் இந்திய அணி விளையாடுமா..? பி.சி.சி.ஐ. செயலாளர் பதில்

மும்பை, 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற … Read more

ஹமாஸ் அமைப்பினருடன் பேசி வருகிறோம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் இதுவரை 64,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல்–காசா இடையே போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். இதற்காக அவர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து உரையாடியுள்ளார். ஓரிரு வாரங்களில் போர் நிறுத்தம் ஏற்படக்கூடும் என்று கடந்த ஜூலையில் டிரம்ப் நம்பிக்கை … Read more

New TVS Apache RTR 160 4V – 2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி பிராண்டில் கிடைக்கின்ற RTR 160 4V மோட்டார்சைக்கிள் டிசைன் மாற்றங்களுடன் விலை ரூ.1.28 லட்சம் முதல் ரூ.1.4 லட்சம் வரையில் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 2025 அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலில் ரேசிங் சிவப்பு, மரைன் நீலம், மேட் கருப்பு என மூன்று புதிய நிறங்களை பெற்று LED DRL உடன் கூடிய கிளாஸ்-D ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட், இன்டிகேட்டர் என அனைத்தும் முழுமையாக LEDஆக மாற்றப்பட்டுள்ளது. … Read more

TVK : 'விஜய்யின் சுற்றுப்பயணத்தை காவல்துறை தடுக்க நினைக்கிறது!' – ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு

தவெக தலைவர் விஜய் வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்யும் முடிவில் இருக்கிறார். திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு காவல்துறையிடம் அனுமதி கடிதமும் தவெக சார்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், விஜய்யின் சுற்றுப்பயணத்தை திமுக அரசும் காவல்துறையும் தடுக்க நினைப்பதாக அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா குற்றஞ்சாட்டியிருக்கிறார். Vijay ஆதவ் அர்ஜூனா X தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், தி.மு.க அராஜக … Read more

லண்டனில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், லண்டன் நகரில் அமைந்துள்ள கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்துக்கு சென்று பார்வையிட்டார். அங்கு திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “லண்டன் கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தி, எக்காலத்துக்குமான தமிழ் பண்பாட்டின், அறிவுக்கருவூலமாகத் திகழும் திருக்குறளை போற்றினேன். அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளி மாணவர்கள் … Read more

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிகள்: பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷ்ய போரை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்த கருத்துகளை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பகிர்ந்து கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அதிபர் மேக்ரோனுடன் மிகச் சிறந்த உரையாடல் நடைபெற்றது. இந்தியா – பிரான்ஸ் இடையே பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் … Read more

பாகிஸ்தானின் ரூ.17 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார வழித்தட திட்டத்தில் இருந்து சீனா வெளியேற்றம்?

இஸ்லாமாபாத்: சீனா – பாகிஸ்தான் இடையேயான பொருளாதார வழித்தடத்தின் முக்கிய திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கும் முடிவை சீனா கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த திட்டங்களை நிறைவேற்ற ஆசிய வளர்ச்சி வங்கியை பாகிஸ்தான் நாடியுள்ளது. சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் (CPEC) இரு நாடுகளுக்கும் இடையேயான மிக முக்கிய மிகப் பெரிய பொருளாதார திட்டமாகக் கருதப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பாகிஸ்தானின் ரயில், துறைமுக கட்டமைப்பு வளர்ச்சிக்கு சீனா நிதி உதவி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது. … Read more