தோனியை பின்னுக்கு தள்ளிய ஜடேஜா.. அப்படி என்ன சாதனை? முழு விவரம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடக்கும் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா சிறப்பான முன்னேற்றத்துடன் உள்ளது. போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தேதிக்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் செய்து, 286 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதனால் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி 100% உறுதி ஆகியதாகக் தெரிகிறது.

Add Zee News as a Preferred Source

முதலில்பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களை மட்டுமே அடித்தது. இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாத அந்த அனி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்களை எடுத்தார். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்களையும் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஜெய்ஸ்வால் 36, சாய் சுதர்சன் 7, சுப்மன் கில் 50 ரன்களை எடுத்து வெளியேறினர். 

ரவீந்திர ஜடேஜாவின் மாபெரும் சாதனை

கே.எல். ராகுல் 100 மற்றும் துருவ் ஜுரேல் 125 ரன்கள் செய்து சிறப்பான பங்கேற்பு செய்த நிலையில், நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் 176 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் எடுத்து அசத்தி உள்ளார். இந்த நிலையில்தான், ரவீந்திர ஜடேஜா இப்போட்டியில் அடித்த 5 சிக்ஸர்கள் மூலம் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். 

முன்னாள் இந்திய கேப்டனான தோனி 78 சிக்ஸர்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் இருந்தார். தற்போது ஜடேஜா 80 சிக்ஸர்களுடன் தோனியை பின்னுக்கு தள்ளி அந்த பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களில் விரேந்திர சேவாக் 91 சிக்ஸர்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் ரிஷப் பண்ட் (90 சிக்ஸர்கள்), மூன்றாவது இடத்தில் ரோஹித் சர்மா (88 சிக்ஸர்கள்), நான்காவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா (80 சிக்ஸர்கள்), ஐந்தாவது இடத்தில் மகேந்திர சிங் தோனி (78 சிக்ஸர்கள்) இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.