IPL 2026, RCB Mini Auction Plan: ஐபிஎல் தொடரின் 19வது சீசன் அடுத்தாண்டு கோடைக் காலத்தில் நடைபெற இருக்கிறது. அதே 10 அணிகள் தான் விளையாட இருக்கின்றன. இருப்பினும், அனைத்து அணிகளும் இன்னும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் 10 அணிகளும் தாங்கள் அடுத்த சீசனுக்கு தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடும்.
Add Zee News as a Preferred Source
IPL Mini Auction: ஐபிஎல் மினி ஏலம் எப்போது?
அந்த வகையில், வரும் டிசம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலம் (IPL 2026 Mini Auction) நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது அதாவது, டிசம்பர் 13-15 தேதிகளில் மினி ஏலம் நடைபெற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அணிகள் விடுவிக்கப்படும் வீரர்களும், ஏலத்திற்கு பதிவு செய்துள்ள வீரர்களும் இந்த மினி ஏலத்தில் ஏலம் விடப்படுவார்கள்.
IPL Mini Auction: நடப்பு சாம்பியன் ஆர்சிபி
இந்தச் சூழலில், ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும், எந்தெந்த வீரர்களை விடுவிக்கும் என்பதை அறிய ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அப்படியிருக்க, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bangalore) எத்தனை வீரர்களை விடுவிக்கும் என்பதுதான் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், ஆர்சிபி அணி அடுத்தாண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடுமா என்பது தெரியாது என்பதால் அதன் Home மைதானம் குறித்த கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
IPL Mini Auction: மினி ஏலத்தில் ஆர்சிபியின் பிளான் என்ன?
இதையெல்லாம் மனதில் வைத்து ஆர்சிபி அணி (RCB) இந்த மூன்று வீரர்களை மட்டுமே வெளியிட வாய்ப்புள்ளது. லியாம் லிவிங்ஸ்டோன், பிளெஸ்ஸிங் முசரபானி, நுவான் துஷாரா உள்ளிட்ட மூன்று வெளிநாட்டு வீரர்களை ஆர்சிபி நிச்சயம் வெளியிடும் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் கடந்தாண்டு தேவ்தத் படிக்கல் காயத்தால் வெளியேற அவருக்கு மாற்று வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வாலையும் ஆர்சிபி விடுவிக்கும் என கூறப்படுகிறது. மேலும், பில் சால்ட், ஜாஷ் ஹசில்வுட், ஜேக்கப் பெத்தல், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், லுங்கி இங்டி உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் நிச்சயம் தக்கவைக்கப்படுவார்கள் என்பதால் இன்னும் ஒரே வெளிநாட்டு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை மட்டும் பேக்அப்பாக மினி ஏலத்தில் எடுத்தால் போதுமானது.
IPL Mini Auction: யாஷ் தயாள் இருப்பாரா?
கேப்டனாக ரஜத் பட்டிதார் தொடர்வார் என்பதில் ஐயமில்லை. விராட் கோலி நிச்சயம் இந்த சீசனில் விளையாடுவார். தொடர்ந்து, ஜித்தேஷ் சர்மா, குர்னால் பாண்டியா, சுயாஷ் சர்மா, புவனேஷ்வர் குமார், தேவ்தத் படிக்கல் உள்ளிட்ட நட்சத்திர இந்திய வீரர்கள் அப்படியே தக்கவைக்கப்படுவார்கள்.
யாஷ் தயாள் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பதால் அவரை ஆர்சிபி தக்கவைக்குமா என்ற கேள்வி எழுகிறது. ரஷிக் தர், சுவஸ்திக் சிக்காரா, மனோஜ் பண்டகே, அபிநந்தன் சிங், மோகித் ராத்தீ ஆகிய இளம் வீரர்கள் உள்நாட்டு தொடர்களிலும் நம்பிக்கை அளிப்பதால் ஆர்சிபி அவர்களையும் தங்களின் முகாம்களில் வைத்திருப்பார்கள். சுவப்னில் சிங் ஆர்சிபியின் லக்கி வீரராக இருப்பதால் அவரை விடுவிக்க வாய்ப்பே இல்லை.
ஆர்சிபி தக்கவைக்க அதிக வாய்ப்புள்ள வீரர்கள்:
ரஜத் பட்டிதார் (கேப்டன்), விராட் கோலி, பில் சால்ட், ஜேக்கப் பெத்தல், தேவ்தத் படிக்கல், ஜித்தேஷ் சர்மா, குர்னால் பாண்டியா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜாஷ் ஹசில்வுட், லுங்கி இங்டி, சுயாஷ் சர்மா, புவனேஷ்வர் குமார், சுவப்னில் சிங், ரஷிக் தர், சுவஸ்திக் சிக்காரா, மனோஜ் பண்டகே, அபிநந்தன் சிங், மோகித் ராத்தீ, யாஷ் தயாள்
ஆர்சிபி விடுவிக்க அதிக வாய்ப்புள்ள வீரர்கள்:
லியாம் லிவிங்ஸ்டோன், பிளெஸ்ஸிங் முசரபானி, மயங்க் அகர்வால், நுவான் துஷாரா.
மேலும் படிக்க | தோனி விளையாடுவது உறுதி… CSK கழட்டிவிடும் இந்த 5 வீரர்கள் – மினி ஏலத்தின் முரட்டு பிளான்!
மேலும் படிக்க | ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சன் எந்த அணிக்கு செல்லப்போகிறார்? முக்கிய அப்டேட்
மேலும் படிக்க | கழட்டிவிடப்படும் நடராஜன்… இந்த 3 பௌலர்களை குறிவைக்கும் டெல்லி!
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More