'Drone-கள் விமானப்படையின் எதிர்காலமா?' – எலான் மஸ்கின் கருத்திற்கு இந்திய விமானப்படைத் தளபதி பதில்

சமீபத்தில் ஸ்டார்லிங்க், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க், வான்வெளி ராணுவத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவது குறித்துப் பேசியிருந்தார். மேலும், ராணுவ பைலட்டுகள் ஓட்டும் போர் விமானத்தை விடவும், ட்ரோன்கள் சிறப்பாகச் செயல்படும், அதுதான் விமானப் படையின் எதிர்காலம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் 93வது விமானப் படை நாள் கொண்டாட்ட விழாவில் விமானப்படை, எதிர்கால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்துப் பேசியிருந்தார். அப்போது எலானின் கருத்து குறித்துப் பேசியிருந்த இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் … Read more

கரூர் துயரம்: ஆளுக்கொரு திசையில் ‘அரசியல்’ – நடப்பது என்ன?

கரூர் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தில், திமுக அரசை நோக்கி த.வெ.க, பாஜக, அதிமுக கை நீட்டும் நிலையில், ‘பாஜகவோடு விஜய் கூட்டு சேருகிறார்’ என்ற கோணத்தில் முதல்வர் ஸ்டாலினும், விசிக தலைவர் திருமாவளவனும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பேச ஆரம்பித்துள்ளனர். கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பறிபோனது. இந்தச் சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பின்னர் வீடியோ வெளியிட்ட விஜய், … Read more

“உலக வரைபடத்தில் நீடிக்க விரும்பினால்…” – பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி திவேதி எச்சரிக்கை

அனுப்கர் (ராஜஸ்தான்): உலக வரைபடத்தில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள விரும்பினால் அண்டை நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானை இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி எச்சரித்துள்ளார். ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள அனுப்கரில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய உபேந்திர திவேதி, “இந்தியா ஒரு நாடாக தற்போது முழுமையாக தயாராக உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் 1.0-ன்போது காட்டிய நிதானத்தை இந்தியா இனி காட்டாது. இம்முறை நாம் ஒரு படி முன்னேறி, உலக … Read more

டிசம்பர் 5 முதல் ‘அகண்டா 2: தாண்டவம்’ படம் வெளியீடு

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா – பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு, கூட்டணியில் 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்கும் #BB4 “அகண்டா 2: தாண்டவம்” டிசம்பர் 5 முதல் திரையரங்குகளில்!

ஓனர் மனைவியுடன் மிக்சர் மாஸ்டர் கள்ளக்காதல்.. ஜோலார்பேட்டையில் நடந்தது என்ன?

இந்தியாவில் பல கொலைகளுக்கு கள்ளக்காதல் ஒரு காரணமாக இருக்கும் நிலையில், திருப்பத்தூர் அருகே இப்படியான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

Croma Diwali Sale 2025: டிவி, ஸ்மார்ட்போன்களில் 35% வரை பிளாட் தள்ளுபடி மற்றும் EMI சலுகைகள்

Croma Diwali Sale 2025: டாடா குழுமத்தின் மின்னணு சில்லறை விற்பனைச் சங்கிலியான குரோமா நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மிகவும் அற்புத விழா விற்பனையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்த விற்பனை அக்டோபர் 23, 2025 வரை நடைபெறும். இந்த மெகா பண்டிகை பிரச்சாரத்தில் 35 சதவீதம் வரை நிலையான தள்ளுபடிகள், 20 சதவீதம் வரை கேஷ்பேக், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் பல்வேறு வகைகளில் எளிதான EMI விருப்பங்கள் ஆகியவை அடங்கும். Add Zee News as … Read more

இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான சேவை! எப்போது தெரியுமா?

டெல்லி:  இந்தியா சீனா இடையே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நட்புறவு துளிர்த்துள்ள நிலையில், அக்டோபர் 26ந்தேதி முதல் இந்​தியா – சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை  தொடங்​கப்​படு​கிறது.  இதை இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, அக்டோபர் 26, 2025 முதல் கொல்கத்தாவிலிருந்து குவாங்சோவிற்கு தினசரி நேரடி விமானங்களைத் தொடங்கும் என்றும், டெல்லி வழித்தடத்தில் … Read more

மயிலாடுதுறை: "பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல" – பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சி பூங்குடி கிராமத்தில் 1952ல் தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டு அப்பகுதி மக்களின் தொடக்கக் கால கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டு வந்தது. மீண்டும் இப்பள்ளி 2008ல் மறுசீரமைக்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக இன்றும் அப்பகுதி மாணவர்களுக்கான தொடக்கக்கால கல்வியை வழங்கி வருகிறது. தற்போது பூங்குடி மற்றும் தோப்புத்தெரு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் 20 பேரும், மாணவிகள் 14 பேருமான 34 மாணாக்கர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஆண் மற்றும் பெண் … Read more

கரூர் துயரம்: தவெக நிர்வாகிகள் ஆனந்த், நிர்மல்குமாருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு!

மதுரை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில், தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. ‘கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நீதிமன்றத்தை தொந்தரவு செய்கிறது’ என நீதிபதி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் … Read more

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த கொடூர மனித உரிமை மீறல்களுக்கு பாக். பொறுப்பேற்க வேண்டும்: இந்தியா

புதுடெல்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும், வரிச் சலுகை, உணவு மற்றும் மின்சாரத்திற்கான மானியங்கள் வழங்க வேண்டும், மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 29 முதல் ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு … Read more