மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு 327 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

இந்தூர், மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க பேட்ஸ்மேன்கள் அணிக்கு சிறந்த தொடக்கத்தை அளித்தனர். 6-ம் வரிசையில் களமிறங்கிய ஆஷ்லீ கார்ட்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். அவர் 83 பந்துகளில் … Read more

‘பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டோம்’ நெதன்யாகு ஆவேச பேட்டி

டெல் அவிவ், வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக நாடு திரும்பினார். டெல் அவிவ் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த நெதன்யாகு, ‘பாலஸ்தீனத்தை தனியாக ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன்’ என ஆவேசமாக கூறினார். அவர் மேலும் கூறுகையில், போர் நிறுத்தத்திற்கான டிரம்ப்பின் அமைதி உடன்படிக்கை மற்றும் 20 அம்ச திட்டத்திற்கு … Read more

TVK Karur Stampede – நீங்கள் செய்தது நியாயமா Vijay சார்?| Open Letter to தமிழக வெற்றிக் கழகம் விஜய்

தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்கியதிலிருந்து, அவரையும், அவரது கட்சியின் செயல்பாடுகளையும் ஒரு ஊடகமா தொடர்ந்து பின் தொடர்ந்துட்டு வர்றோம். அசம்பாவிதம் நடந்த கரூர் பிரசாரத்தைலையும் விகடன் இருந்துச்சு. சம்பவம் நடந்த அன்னைக்கு, அந்த கூட்ட நெரிசல்ல எங்கள் நிருபர்களும் இருந்தாங்க. அதன் பிறகு களத்துக்கு போன எங்கள் செய்தியாளர்கள், இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி மக்களை சந்திச்சு பேசியிருக்காங்க. அதை பல காணொளிகளா பதிவு பண்ணி இருக்கோம். முதல்ல, இறந்துபோன 41 பேருக்கும் எங்களுடைய ஆழ் … Read more

“செந்தில் பாலாஜியின் பதற்றம் சந்தேகத்தை எழுப்புகிறது” – அண்ணாமலை 

சென்னை: நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், செந்தில் பாலாஜி இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறத என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற, பரிந்துரைத்துள்ளது. … Read more

உதய்பூரில் பாலேஸ்வரி மாதாவுக்கு ரூ.51 லட்சத்தில் அலங்காரம்

உதய்பூர்: ​ராஜஸ்​தான் மாநிலம் உதய்​பூரிலுள்ள பாலேஸ்​வரி மாதா தேவி சிலைக்கு பக்​தர்​கள் ரூ.51 லட்​சம் மதிப்​புள்ள கரன்சி நோட்​டு​களால் அலங்​காரம் செய்​து உள்​ளனர். புவானா பகு​தி​யில் பிரசித்தி பெற்ற பாலேஸ்​வரி மாதா கோயில் அமைந்​துள்​ளது. இந்த கோயி​லில் தற்​போது நவராத்​திரி திரு​விழா நடை​பெற்று வரு​கிறது. இதையொட்டி பாலேஸ்​வரி மாதாவுக்கு ரூ.51,51,551 மதிப்​புடைய கரன்சி நோட்​டு​களால் நேற்று முன்​தினம் பக்​தர்​களால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 நோட்​டு​களால் இந்த அலங்​காரம் நடை​பெற்​ற​தாக கோயிலை நிர்​வகிக்​கும் பாலேஸ்​வர் … Read more

செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன? – முக்கிய சந்தேகத்தை எழுப்பிய அண்ணாமலை

Karur Stampede: கரூர் கூட்டநெரிசல் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த செய்தியாளர் சந்திப்பு குறித்து அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

TVK Karur Stampede: "வலின்னா என்னன்னு தெரியுமா விஜய் சார்?" – Open Letter to த.வெ.க விஜய்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு குறள் : 72 | பால் : அறத்துபால் | அதிகாரம் : அன்புடைமை விளக்கம்: அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர். தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்கியதிலிருந்து, அவரையும், அவரது கட்சியின் செயல்பாடுகளையும் ஒரு ஊடகமா தொடர்ந்து பின் தொடர்ந்துட்டு வர்றோம். அசம்பாவிதம் நடந்த கரூர் பிரசாரத்தைலையும் விகடன் இருந்துச்சு. சம்பவம் நடந்த … Read more

“விஜய் சுயமாக சிந்திக்கவில்லை; உசுப்பேற்றி பேச வைத்துள்ளனர்” – திருமாவளவன் கருத்து

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக விஜய் வெளியிட்ட வீடியோவில் சுயமாக சிந்தித்து பேசியதாக தெரியவில்லை. அவரை சுற்றிலும் உள்ளவர்கள் உசுப்பேற்றி இதுபோல பேச சொல்லியுள்ளனர். அவர் எப்போது சுயமாக சிந்தித்து செயல் திட்டங்களை வரையறுக்கிறாரோ, அப்போதுதான் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “செந்தில் பாலாஜி மட்டுமே குற்றவாளி என்று விஜய் சொல்ல விரும்புகிறாரா? அவர் என்ன வகையான … Read more

“விடுதலைக்காக ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சிறை சென்றனர்” – நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி: “ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டதிலிருந்து, தேசத்தைக் கட்டியெழுப்ப பாடுபட்டு வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது, ​​ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கே.பி ஹெட்கேவர் சிறைக்குச் சென்றார். அவருடன், அமைப்பின் பல தலைவர்களும் சிறைக்குச் சென்றனர்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் நூற்றாண்டு விழா புதுடெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டுக்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் … Read more

இந்தியாவில் மொத்தம் 350 பெருங்கோடீஸ்வரர்கள்… இவர்களின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?

Richest Indians In 2025: இந்தியாவின் பெருங்கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் மற்றும் முக்கிய நபர்கள் குறித்து இங்கு காணலாம்.