சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தோனி ஓய்வா?

Dhoni : ‘தல’ எம்.எஸ். தோனி ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு முன்பு ஓய்வு பெறப்போகிறாரா? அல்லது அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவாரா? என்ற கேள்விகளுக்கான பதிலை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்து காத்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக தல தோனி ரசிகர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களும் இது தொடர்பான அறிவிப்புகளுக்கு காத்திருந்த நிலையில், சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன், சஸ்பென்ஸூக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

காசி விஸ்வநாதன் பேச்சு 

சமீபத்தில் ஒரு நிகழ்வில் குழந்தைகளுடன் உரையாடியபோது, தோனியின் ஐபிஎல் எதிர்காலம் குறித்து அவரிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “இல்லை, அவர் ஓய்வு பெறப் போவதில்லை!” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, மஞ்சள் ஜெர்சி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2026-ல் ‘தல’ என்ட்ரி உறுதி

44 வயதான தோனி, ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாகக் கருதப்படுகிறார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதர்சன நாயகனாகவும், ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன்ஷிப்புக்கு அணியை வழிநடத்திய தலை்சிறந்த கேப்டனாகவும் உள்ளார். அவரிம் கடந்த ஐபிஎல் சீசன் முடிவடைந்தபோது, ஓய்வு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி தனது முடிவு எதையும் தெரிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்தார். “ஓய்வு குறித்து யோசிக்க எனக்கு 4-5 மாதங்கள் உள்ளன” என்று அவர் பதிலளித்திருந்தார். இந்த நிலையில், சிஇஓ விஸ்வநாதனின் இந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, தோனியை ஐபிஎல் 2026 சீசனில் மீண்டும் களத்தில் காண முடியும் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு அளித்துள்ளது.

காசி விஸ்வநாதன் சொன்னது என்ன? 

Provoke Lifestyle என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட காணொளியில், சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதனிடம் குழந்தைகள் கேட்ட கேள்விகளும், அதற்கான அவரது பதில்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது:

குழந்தை 1: அடுத்த ஆண்டும் ஐபிஎல் கோப்பையை வெல்லத் திட்டமிட்டுள்ளீர்களா?

விஸ்வநாதன்: ஆம், நாங்கள் தயாராக இருக்கிறோம். வெல்ல முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் எங்களால் முடிந்ததைச் செய்வோம்.

குழந்தை 1: தோனி ஓய்வு பெறப் போகிறாரா?

விஸ்வநாதன்: இல்லை, அவர் ஓய்வு பெறப் போவதில்லை.

குழந்தை 1: தோனி எப்போது ஓய்வு பெறுவார்?

விஸ்வநாதன்: நான் அவரிடம் கேட்டுவிட்டு வந்து உங்களுக்குச் சொல்கிறேன்.

இந்த உரையாடல், தோனியின் ஐபிஎல் பயணம் முடிவடையவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ரூத்துராஜ் கெய்க்வாட் போன்ற இளம் வீரர்களுக்கு அவர் வழி விட்டிருந்தாலும், தோனியின் பங்களிப்பு, அவரது ஆட்டத் திறமை மற்றும் ஃபினிஷிங் ஃபார்ம் ஆகியவை இன்னமும் சென்னை அணிக்கு மிக முக்கியமாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.