14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை: மாணவர்கள் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையால் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. இதனால், மாணவர்களின் உயர்கல்வி, எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதையடுத்து, உச்ச நீதிமன்றமே தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி சட்டமாக்கியது. உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு: இந்நிலையில், துணைவேந் தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் தமிழக … Read more

பிஹார் தேர்தல் வெற்றி எதிரொலி: நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 1800 ஆக உயர்த்த திட்டம்

பிஹார் தேர்தல் வெற்றியின் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள சட்டப் பேரவைகளில் உள்ள பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 1,800-ஆக உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி வெளியான பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளில், 101 இடங்களில் போட்டியிட்ட பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து பிஹாரில் மீண்டும் தேசியஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கைய உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் … Read more

ஷேக் ஹசீனாவுக்கு எதிரான தீர்ப்பு பற்றி இந்தியா கருத்து

புதுடெல்லி, சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்தாத கூறப்பட்ட குற்றச்சாட்டில், வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்துள்ளது. மரண தண்டனைக்கு ஷேக் ஹசீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வங்காளதேசத்தில் பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் போட்டியிட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 3 மாதங்களே இருக்கும்நிலையில், இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை … Read more

பாக்.வீரர் அடித்த பந்து… அற்புதமாக கேட்ச் பிடித்த இந்திய வீரர்கள்.. நாட் அவுட் கொடுத்த நடுவர்

தோஹா, வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை டி20 போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் … Read more

இலங்கையில் பெண் சுற்றுலா பயணியை பாலியல் உறவுக்கு அழைத்து ஆபாச செயலில் ஈடுபட்ட வாலிபர் கைது

கொழும்பு, நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர், இலங்கையில் தனியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதை சமூக வலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இவ்வாறு 3 நாட்கள் அவரது சுற்றுலா பயணம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் நான்காவது நாள் அவருக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. இது குறித்து அப்பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ளார். அதில், “நான் ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு … Read more

எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு: சாத்தூர் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

சாத்தூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாத்தூர் அருகே கிராம மக்கள் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இதற்காக, வாக்காளர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 14,62,874 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக்கொள்வதை எளிதாக்குவதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது … Read more

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணியின் வாக்குகளை பிரித்தது யார்?

புதுடெல்லி: பிஹாரின் 243 தொகு​தி​களில் எவரும் எதிர்​பார்க்​காத வகை​யில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்​டணி 35 மட்​டுமே பெற்​றுள்​ளது. இக்​கூட்​ட​ணி​யின் வாக்​கு​களைப் பிரித்​தது யார் என்ற கேள்வி எழுந்​துள்​ளது. பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் மற்​றும் மாயா​வ​தி​யின் பகுஜன் சமாஜ் (பிஎஸ்​பி) ஆகிய மூன்று கட்​சிகளும் இணைந்து மெகா கூட்​ட​ணியின் பெரும்​பான்​மை​யான வாக்​கு​களை பிரித்​துள்​ளது. பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 238 தொகுதியில் போட்​டி​யிட்​டது. ஒரு தொகு​தி​யில் கூட வெல்ல … Read more

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் – அமித்ஷா

புதுடெல்லி, டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 14 பேர் பலியானார்கள். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என கண்டறியப்பட்டது. உமர் உடல் சிதறி இறந்தது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. … Read more

2-வது டெஸ்ட்: கில் இல்லையென்றால் அந்த தமிழக வீரரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் – கும்ப்ளே

கொல்கத்தா, இந்தியா- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 124 ரன் இலக்கை கூட விரட்டிப் பிடிக்க முடியாமல் இந்திய அணி 93 ரன்னில் அடங்கி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற … Read more

நாகை மீனவர்கள் 31 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை

கொழும்பு, நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த அக்., 30ம் தேதி 31 மீனவர்கள், கோடியக்கரை தென் கிழக்கில் 45 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மூன்று விசைப்படகுகளையும் சிறைபிடித்து, படகுகளில் இருந்த 31 மீனவர்களையும் கைது செய்து, இலங்கை, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, ஊர்க்காவல் போலீசார் விசாரணைக்கு பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட … Read more