டிட்வா புயலால் பாதிப்பு: இலங்கைக்கு நிதி உதவி அறிவித்த சீனா

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக – புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயலால் இலங்கையில், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த 9,68,304 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா அவசரகால நிதியுதவியாக 10 லட்சம் டாலர் அளித்துள்ளது.

கடுமையான இழப்பைச் சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவை கொழும்பு நகரை சென்றடைந்தன. இலங்கையுடன் மீட்புப்பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையும் இந்திய விமானப்படையும் கைகோத்துள்ளது.

இலங்கையில் சிக்கித் தவித்துவந்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை விமானப்படை மீட்டுள்ளது. இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.இந்த நிலையில், இலங்கைக்கு சீனா 10 லட்சம் டாலர் நிதி உதவி அளித்துள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.