சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7-ந்தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதாக சத்துணவு பணியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.6,750 காலமுறை ஊதியமாக வழங்குவதுடன், அகவிலைப்படியும் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி வரும் 7ந்தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் […]