சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 90 அணைகளை கண்காணிக்கும் வகையில், ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் நீர்த்தேக்கங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீர்வளத்துறையின் சார்பில் 32.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் நீர்த்தேக்கங்களுக்கான நீரியல் தரவு கண்காணிப்பு […]