மெக்கல்லத்தை உடனே தூக்குங்க… இவரை மீண்டும் கோச் ஆக்குங்க – வலுக்கும் குரல்கள்!

England National Cricket Team: இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டின் வடிவத்தையே முற்றிலும் மாற்றும் வகையில், அதிரடி பாணி ஆட்டத்தை விளையாடப்போவதாக 2022ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. அந்தாண்டு மே மாதம் பிரெண்டன் மெக்கலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். மெக்கலம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தப்போவதாக இங்கிலாந்து அணி முடிவெடுத்தது. 

Add Zee News as a Preferred Source

Bazball Team England: பாஸ்பாலுக்கு எதிர்ப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த அணுகுமுறைக்கு Bazball என கிரிக்கெட் உலகில் பெயரிடப்பட்டது. டெஸ்டில் பாரம்பரியமான அணுகுமுறையால் இங்கிலாந்து அணிக்கு பெரியளவில் வெற்றிகள் கிடைப்பதில்லை என்பதாலும், ஆட்டத்தின் சுவாரஸ்யம் குறைவதாகவும் கருதப்பட்டதன் காரணமாகவே Bazball என்ற அணுகுமுறை பிறப்பெடுத்ததாக கிரிக்கெட் உலகில் ஆழமான விவாதங்கள் எழுந்தன. Bazball அணுகுமுறைக்கு அளவான ஆதரவும், எக்குத்தப்பான எதிர்ப்பும் கிளம்பியது. இப்போதும் இதை நிலைதான் தொடர்கிறது. 

This is a WILD thought. I reckon one of my wildest.
Can England bring back Andy Flower now that he’s changed and in line with the modern day player?
He gets Test Cricket.
I’ve been told by many players that he’s changed his ways since our drama.
He’s winning leagues so…

— Kevin Piet(@KP24) January 9, 2026

Bazball அணுகுமுறையின் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. 2022ஆம் ஆண்டில் இருந்தே 2025-26ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஆஷஸ் தொடரே இங்கிலாந்து Bazball அணிக்கு டார்கெட்டாக இருந்தது. 2023இல் சொந்த மண்ணில் நடந்த ஆஷஸ் தொடரை 2-2 என்ற கணக்கில் இங்கிலாந்து சமன் செய்தாலும் ஆஷஸ் கோப்பையை கைப்பற்ற இயலவில்லை. எனவே, 2025-26 ஆஷஸ் மீதான எதிர்பார்ப்பு இங்கிலாந்து அணி ரசிகர்களுக்கு அதிகமானது.

Bazball Team England: படுதோல்விக்கு பின் நீக்கப்படுவார்களா?

ஆனால், அத்தனை எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து படுதோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய மண்ணில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதே இங்கிலாந்து Bazball அணிக்கு ஆறுதலாக இருந்தது. மேலும் ஆஷஸ் தொடரில் தோல்விக்கு பின்னர் நிச்சயம் பல இங்கிலாந்து வீரர்கள் அணியில் இருந்து தூக்கியெறியப்படுவார்கள், கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார், தலைமை பயிற்சியாளரும் நீக்கப்படுவார். ஆனால் இப்போதைய சூழ்நிலையில் இங்கிலாந்து Bazball அணியில் அதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. 

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்டர் கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லத்தை நீக்கிவிட்டு, முன்னாள் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரும், ஜிம்பாப்வே ஜாம்பவானுமான ஆண்டி ஃப்ளவரை மீண்டும் அணிக்குள் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Bazball Team England: மீண்டும் ஆண்டி ஃப்ளவர்

இதுகுறித்து அவர் தனது X பதிவில், “இது ஒரு முரட்டுத்தனமான சிந்தனை. என்னுடைய விசித்திரமான சிந்தனைகளில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். ஆண்டி ஃப்ளவர் மாறிவிட்டார் என்பதாலும், நவீன கால வீரருக்கு ஏற்றவாறு அவர் மாறிவிட்டதாலும், இங்கிலாந்து அவரை மீண்டும் அணிக்குள் கொண்டுவர முடியுமா? அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட் சிறப்பாக வாய்த்துள்ளது. நமது அணியில் ஏற்பட்ட பிரச்னைகளில் இருந்து அவர் தனது வழிமுறைகளை மாற்றிக்கொண்டதாக பல வீரர்கள் என்னிடம் கூறியுள்ளனர். அவர் டி20 லீக் தொடர்களை வென்று வருகிறார். எனவே உண்மையில் நவீன கால வீரரை புரிந்துகொள்வார், இது மிகவும் முக்கியம்” என குறிப்பிட்டிருந்தார்.

Bazball Team England: ஆண்டி ப்ளவரும், இங்கிலாந்து அணியும்…

ஆண்டி பிளவர் 2007ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக இருந்தார். அதன்பின் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக உயர்ந்தார். அவர் பொறுப்பேற்ற முதல் இரண்டு வருடங்களிலேயே அதாவது, 2011 மற்றும் 2013 ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி இவரது வழிகாட்டுதலில்தான் வென்றது. தொடர்ந்து இவரது வழிக்காட்டுதலில்தான் இங்கிலாந்து அணி அதன் முதல் ஐசிசி கோப்பையை வென்றது, 2010இல் டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது. அதேபோல், 2011ஆம் ஆண்டில் இந்திய அணியை இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் 4-0 என்ற கணக்கில் டெஸ்டில் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது. இருப்பினும் 2013-14 ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி 0-5 என்ற கணக்கில் இழந்ததை தொடர்ந்து அவர் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். 

மேலும் படிக்க | WTC பைனலில் இந்திய அணி தகுதிபெறுமா? – எத்தனை சதவீதம் வாய்ப்பிருக்கு?

மேலும் படிக்க | ’ரோகித் சர்மா தான் கேப்டன்’ ஜெய்ஷா அதிரடி அறிவிப்பு – இந்திய அணியில் டிவிஸ்டு

மேலும் படிக்க | சுப்மான் கில் வேண்டாம்… திலக் வர்மாவுக்கு சரியான மாற்று இவர் தான்… இந்திய அணி பலமாகும்!

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.