அனுபவத்தை முறியடிக்கும் வேகம்; ஐபிஎல் 2026-ஐ அதிரவைக்கும் Gen Z நட்சத்திரங்கள் ஒரு பார்வை!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) என்பது எப்போதும் திறமைகளை அடையாளம் காணும் ஒரு களமாகவே இருந்து வருகிறது.

ஆனால், 2026 சீசன் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் ஒருபுறம் விடைபெற்றுக் கொண்டிருக்க, ‘Gen Z ‘ என அழைக்கப்படும் இளம் வீரர்கள் அந்த இடத்தைச் சரியான முறையில் நிரப்பி வருகின்றனர்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

வெறும் ஆர்வம் மட்டுமல்லாமல், அசாத்தியமான தொழில்நுட்பத் திறனும், எவ்வித அழுத்தத்திற்கும் பணியாத மன வலிமையும் கொண்ட இந்த இளைஞர்கள், ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதி வருகின்றனர். 

வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது நட்சத்திரம்.  இந்த சீசனின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளார்.

200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் இவர் விளையாடும் விதம், நவீன டி20 கிரிக்கெட்டின் வேகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

குறிப்பாக, அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை இவர் எதிர்கொள்ளும் துணிச்சல், இந்திய பேட்டிங் வரிசையின் எதிர்காலம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது என்பதற்கு ஒரு சிறந்த சான்று.

சமீர் ரிஸ்வி

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிகளில் சமீர் ரிஸ்வி ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்.

மிடில் ஆர்டரில் களமிறங்கி, ஆட்டத்தின் போக்கை உணர்ந்து துல்லியமாகப் பந்துகளைத் தேர்வு செய்து விளையாடுவதில் இவர் தனித்துவம் பெற்றுள்ளார்.

பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக இவர் காட்டிய அதிரடி மற்றும் நிதானம், இவரை ஒரு நம்பகமான ‘பினிஷர்’ ஆக நிலைநிறுத்தியுள்ளது.

ஆயுஷ் மாத்ரே
ஆயுஷ் மாத்ரே

ஆயுஷ் மாத்ரே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆயுஷ் மத்ரே,  இந்திய U19 அணியை உலகக்கோப்பை வெற்றிக்கு வழிநடத்திய பெருமையுடன் ஐபிஎல் களத்தில் தடம் பதித்துள்ளார். 

தோனியின் தலைமையின் கீழ் ஒரு பக்குவப்பட்ட வீரராகத் திகழ்கிறார். கிளாசிக் கிரிக்கெட் ஷாட்களை மிக நேர்த்தியாக விளையாடுவதில் வல்லவரான இவர், தேவையான நேரங்களில் அதிரடியாக விளையாடி ரன் வேகத்தை உயர்த்துகிறார்.

ஃபீல்டிங்கில் இவர் காட்டும் சுறுசுறுப்பு, டி20 கிரிக்கெட்டுக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் இவர் பெற்றுள்ளதை உறுதி செய்கிறது.

அங்க்ரிஷ் ரகுவன்ஷி  

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஒரு முழுமையான ஆல்-ரவுண்டராக  இருக்கிறார்.

தொடக்க வீரராகக் களமிறங்கி சீரான இடைவெளியில் ரன்களைக் குவிப்பதுடன், விக்கெட் கீப்பிங்கிலும் தனது துரிதமான செயல்பாடுகளால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

எந்தவொரு சவாலான சூழலிலும் பொறுமையாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் இவரின் குணம் கேகேஆர் அணிக்கு மிகப்பெரிய பலம்.

சகிப் ஹுசைன்
சகிப் ஹுசைன்

சகிப் ஹுசைன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சுப் பிரிவில் ஒரு புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார் சாகிப் உசேன். பந்துகளை மிகத் துல்லியமாக வீசுவதிலும், இக்கட்டான சூழலில் விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் இவர்  சிறந்தவர்  . குறிப்பாக, ஒரு போட்டியில் வெறும் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இவரது ஆட்டம், இந்த சீசனின் மிகச்சிறந்த பந்துவீச்சுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.