Samsung S25 Ultra 5G: Amazon Vs Flipkart – எங்கே விலை மலிவு? வாங்கும் முன் இதைப் படியுங்கள்!

Samsung Galaxy S25 Ultra 5G Amazon VS Flipkart: நீங்கள் நீண்ட காலமாக பிரீமியம் சாம்சங் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா ? அப்படியானால் இந்த செய்தியை கட்டாயம் படிக்கவும். தற்போது, ​​இரண்டு முக்கிய மின்வணிக தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட், Samsung Galaxy S25 Ultra 5G ஸ்மார்ட்போனில் சிறந்த சலுகைகளை வழங்குகின்றன. இருப்பினும், மலிவான விலையில் இந்த சாதனத்தை எந்த தளத்தில் வாங்குவது என்கிற குழப்பம் நாம் அனைவருக்குமே இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

இந்நிலையில் இன்று, இந்த சாதனத்தை குறைந்த விலையில் எந்த தளத்தில் வாங்கலாம் என்பதை இங்கு விரிவாகவும் தெளிவாகவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாம்சங் தொலைபேசியில் 200MP கேமரா மற்றும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் செயலி உள்ளது. எனவே இதன் முழுமையான அம்சங்களை இந்த கட்டுரையில் காணலம்.

Amazon Vs Flipkart: எந்த தளத்தில் மலிவான Samsung Galaxy S25 Ultra 5G-ஐ வாங்கலாம்?

சாம்சங் இந்த தொலைபேசியை கடந்த ஆண்டு ரூ.1,29,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது, ஆனால் தற்போது Flipkart தளத்தில் நீங்கள் ரூ.1,07,999-க்கு வாங்கலம். அதாவது இந்த தொலைபேசியில் ரூ.22,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் பிளிப்கார்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி தொலைபேசி வாங்குபவர்களுக்கு 5% வரை கேஷ்பேக் கிடைக்கிறது.

மறுபுறம், அமேசான் இந்த தொலைபேசியை வெறும் ரூ.1,07,250க்கு வழங்குகிறது. இரண்டு தளங்களிலும் தொலைபேசியின் விலையில் அதிக வித்தியாசம் இல்லை என்றாலும், அமேசான் குறைந்த விலையில் தொலைபேசியை வழங்குவது மட்டுமல்லாமல் சில நல்ல வங்கி சலுகைகளையும் வழங்குகிறது. அதன்படி HDFC வங்கி கிரெடிட் கார்டு EMI விருப்பங்களுடன் ரூ.1,500 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கிறது, அதே நேரத்தில் IDFC FIRST வங்கி கிரெடிட் கார்டு EMI மற்றும் OneCard கிரெடிட் கார்டு EMI விருப்பங்களுடன் ரூ.1,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

Samsung Galaxy S25 Ultra 5G இன் முக்கிய அம்சங்கள்

Samsung இன் Galaxy S25 Ultra 6.9-இன்ச் QHD+ Dynamic AMOLED 2X திரையைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் Qualcomm இன் சக்திவாய்ந்த Snapdragon 8 Elite சிப்செட்டால் இயக்கப்படுகிறது.

S25 Ultra 12GB RAM மற்றும் 256GB, 512GB மற்றும் 1TB சேமிப்பு விருப்பங்களை வழங்குகிறது.

இந்த Samsung ஃபோனில் 200MP முதன்மை கேமரா உள்ளது.

இந்த சாதனத்தில் 50MP அல்ட்ரா-வைட் சென்சார் உள்ளது.

இந்த தொலைபேசியில் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 10MP 3x டெலிஃபோட்டோ பின்புற அமைப்பு உள்ளது.

இந்த தொலைபேசியில் முன்பக்கத்தில் 12MP செல்ஃபி கேமரா உள்ளது.

இந்த சாதனம் 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, 45W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் வேகமான வயர்லெஸ் சார்ஜிங் 2.0 ஐ ஆதரிக்கிறது.

About the Author


Vijaya Lakshmi

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.